லக லக லக தானே நம்ம தலைவர் சொல்லி கேட்ருக்கோம் இதென்ன புதுசா தக தக தக அப்படின்னு இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறவர்களின் மேலான கவனத்திற்கு. இது நம்ம ஆசுகவி மகாகவி பாரதியின் கூத்துப் பாடல். பாரதியின் சிவசக்தி கூத்து. நித்யஸ்ரீ மகாதேவனின் ஸ்ட்ராங் ஆன அமுதக் குரலில் கேட்டேன். சில நாட்களில் புத்துணர்வு பெற மனசை ஒரு கிள்ளு கிள்ளி முறுக்கேற்ற அவ்வப்போது கேட்ட பாடல் தான். இந்த ஷணத்தில் மீண்டும் கேட்டபோது மீசைக்காரனின் பாட்டில் நித்யஸ்ரீயின் குரலில் பாரதி வலது பக்கத்திலும் சிவனும் சக்தியும் இடது பக்கத்திலும் நேரே வந்து கம்ப்யூட்டர் டேபிளின் மானிடர் பக்கத்தில் வந்து ஒரு ஆட்டம் போட்டுவிட்டு போனார்கள். எவ்வளவு சக்தி மிகுந்த வரிகள். "குகைக்குள் அங்கே இருக்குதடா தீப்போலே. அது குழந்தையதன் தாயடிக் கீழ் சேய் போலே ". தீந்தமிழ் எழுதிய அவன் கைகளில் இருந்து சர்வ நிச்சயமாக தீப்பொறி பறந்திருக்க வேண்டும். எப்படி தாள் பத்திக்காம இருந்தது?
இதை அப்படியே நித்யஸ்ரீயின் திவ்யமான குரலில் கீழே...
பின் குறிப்பு: நன்றாக இருந்ததா? இதுபோல சில பக்கா பாடல்களின் களஞ்சியம் கைவசம் உள்ளது. அதுகள் அவ்வப்போது தீடீரென்று மின்னல் போல தலையை நீட்டி இந்த வலைப் பூவில் வந்து எட்டிப் பார்க்கும். இந்தப் பக்கம் மறுபடியும் வந்தால் காதை தீட்டிக் கொண்டு வாருங்கள். கேட்டு இன்புறுங்கள். நன்றி.
-
40 comments:
அருமை.. வாரம் ஒரு முறை இந்த மாதிரி போடுங்கள்
பாரதியின் பாடல் – நித்தியஸ்ரீயின் குரலில், கேட்ட இனிமையாய் இருந்தது நண்பரே. பகிர்வுக்கு நன்றி.
முதல் வருகைக்கும் முதலாய் வந்த வருகைக்கும் நன்றி எல்.கே. நிச்சயம் செய்கிறேன். அடிக்கடி உங்க காத்து இந்தப் பக்கம் அடிக்கட்டும். ;-)
@வெங்கட் நாகராஜ்
கேட்கும் போதே நரம்புகளில் ஒரு முறுக்கு ஏறியதா? மகிழ்ந்ததற்கு நன்றி ;-)
அருமை.
nalla irukku . thanks for sharing.
@புவனேஸ்வரி ராமநாதன்
Thanks.
@மதுரை சரவணன்
Thanks
பாடினது 'நித்யஸ்ரீ மகாதேவன்'
ரசிச்சது 'நித்யஸ்ரீ மாதவன்'
'நித்யஸ்ரீ' ரொம்ப நல்ல பேரு... என்னோட பொண்ணு பேரல்லவா ?
ஆமாம் மாதவா! நல்ல பெயர்! ;-)
அருமையானப் பாடல்,இனிமையானக் குரல்...
ரசித்தமைக்கு நன்றி அமைதி அப்பா ;-)
நான் சார்ந்திருக்கும் களமொன்றில் உன்னையும் குறிப்பிட்டு பலநாட்களுக்குமுன் எழுதிய பதிவு இது..
http://muthamilmantram.com/viewtopic.php?f=196&t=23106&p=723416&hilit=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D#p723416
அனேகமாக அங்கு பதிவுசெய்தே உள்நுழைந்து படிக்க நேரலாம்.. ஓய்விருந்தால் படித்துப்பார்..
அட ..நல்லாத்தான் கீது வாஜாரே!
இத்த பாரு.. நா ஒரு தக்குறி, ஸ்கூலு போயி உங்களாடம் பட்சுகளே நயினா! பெர்ய மன்சு பண்ணி
நம்ளையும் உன் கூட சேத்கினு ஒரே மஜாவா ரவுண்ட்சு வர்றியே கண்ணு. நல்ல இருக்னும்பா நீயி. வர்டா தொர!
நல்ல பாடலை,நித்யஸ்ரீ அற்புதமாய்ப் பாடியிருக்கிறார்.
பாரதியார் எங்கிருந்தோ இதைக் கேட்கக் கூடும். பதிவிற்கு நன்றி ஆர்.வீ.எஸ்.
தேனான பாரதியின் கவிதை, தேனமுதாக நித்யஸ்ரீ யின் குரலில்..
களஞ்சியத்திலிரிந்து அவ்வப்பொழுது எடுத்து படையுங்கள்..களிப்படையலாம்.
வந்தேன் வந்தேன் நேற்று மீனம்பாக்கத்தில் இறங்கி ஊரப்பாக்கம் வந்தேன் ...
பிளாக் என்றாலே ஒடும் எனது மனையாளை , அவர்க்கு பிடித்த நித்யஸ்ரீயை கொண்டு நிறுத்த வேண்டும்..
ந ல் ல பா ட ல் !
@நகைச்சுவை அரசர்
ரிஜிஸ்டர் செய்திருக்கிறேன். என்னை உள்ளே விட்டதும் படிக்கறேன். நன்றி ;-)
@கக்கு
இதே மாதிரி ஸ்டாக்ல இருக்கு. கோடவுன்ல இருந்து எடுத்து ஒன்னொன்னா உடறேன்.. நீ வா வாத்யாரே... வந்து குந்து ... ;-)
நித்யஸ்ரீ ஹை பிட்ச் போகும் போதெல்லாம் நமக்கு அப்படியே நட்டுக்குது மோகன்ஜி!!! Classic Delivery... ;-) ;-)
பத்மநாபன் இப்போது சென்னையில் என்றால் சந்திக்கலாமா? மெயில் ஐ.டி தந்தால் தொடர்பலாம். ;-)
@தேவன் மாயம்
நன்றி ;-)
கண்டிப்பாய் சந்திப்போம் ஆர்.வி.எஸ்.. மின்னஞ்சல் முகவ்ரி..
kr_padmanaban@yahoo.com
நல்ல பாடல்...
பதிவிட்டதற்கு நன்றி அண்ணா!
// நித்யஸ்ரீ ஹை பிட்ச் போகும் போதெல்லாம் நமக்கு அப்படியே நட்டுக்குது மோகன்ஜி!!! Classic Delivery... ;-) ; //
----------------R V S.
Dear R.V.S. Its funny to read u r comments//நமக்கு அப்படியே நட்டுக்குது மோகன்ஜி // but, do u know the real meaning of this word? Ask any one who knows Malayalam :)))))
கேட்டு மகிழ்ந்ததற்கு நன்றி பாலாஜி ;-)
@கக்கு
தாய் மொழி தமிழன்றி வேறொன்றும் யாம் அறியோம் பராபரமே.. ;-) ;--) நீங்கள் தான் பன்மொழி வித்தகர். ;-);-)
வெங்கட் அண்ணா! சங்கீதாவுக்கு மன்னிக்கவும் சங்கீதத்திற்கு தக்குடு என்றுமே அடிமை! தொடரட்டும் உங்கள் சங்கீதப்பணி!..;)
ஏற்கனவே வீட்டில் ஒரு சங்கீதாவிற்கு அடிமை நான் தக்குடுபாண்டி.;-) ;-)
நன்றி ;-) ;-)
பாரதியின் வரிகளும், இந்தப் பாட்டும் அருமை. அறிமுகப்படுதியதற்கு நன்றிகள்.
hello enga unga mannarkudi days 2 nalla kaanum
@இளங்கோ
இதுபோல இன்னும் கைவசம் இருக்கு... அப்பப்ப ஒன்னு ஒண்ணா ஏத்தறேன்.
@padma hari nandan
பதிவேற்றியாயிற்று... முதல் வருகைக்கு நன்றி. அடிக்கடி வந்து போகவும்... ;-) ;-) நீங்கள் மன்னார்குடியா?
//நன்றாக இருந்ததா?//
நல்லா இருக்குங்க.
//இந்தப் பக்கம் மறுபடியும் வந்தால் காதை தீட்டிக் கொண்டு வாருங்கள். கேட்டு இன்புறுங்கள். நன்றி.//
நான் தயாராக வந்துட்டேங்க.
@நாகராஜசோழன் MA
செவிக்கு விருந்து இன்னும் நிறைய தரேன்... ;-)
இனிமையான பாடல். பாரதியின் வரிகளில். நித்யஸ்ரீயின் குரலில். நன்றி.
@கோவை2தில்லி
எல்லாப் புகழும் பாரதிக்கும் நித்யஸ்ரீக்கும் தான். நன்றி ;-)
எனக்கு அவங்களோட "குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா" பாட்டு ரொம்ப பிடிக்கும்
@ம.நண்பன்
குறை ஒன்றும் இல்லை எம்.எஸ் பாடி கேக்கணும்... ;-)
Post a Comment