முண்டாசும் ஆளை அரட்டும் மீசையும் இருந்தாலும் காதலில் கண்டமேனிக்கு குழைவது அவனது வாடிக்கை. கண்ணனாகட்டும் கண்ணம்மாவாகட்டும் காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதுவது அவன் இயல்பு. மனம் ஒத்த இருவர் கூடி நின்று இந்த பாடலை கேட்டாலே காதல் மோகம் தலைக்கேறி திண்டாடி போய் விடுவர். கேட்க கேட்க திகட்டாத தெள்ளமுது. இந்த வாரக் கடைசி நாளுக்காக.
இந்தப் பாடலை கேட்பதற்கு கீழ்கண்டவற்றை கடைபிடித்தால் அது ஒரு சுகானுபவம். நிச்சயம் மறுப்பதற்கில்லை.
ஒன்று:- ஆளில்லாத ஃபேன் சடசடக்காத அமைதியான அறை.
இரண்டு:- எவர் எவர்க்கு என்னென்ன பானம் ப்ரியமோ அந்தந்த பானம் ஒரு கையில்.
மூன்று:- தங்கு தடையில்லாத இணைய வசதி. முழுவதும் இறங்கியபின் கேட்க ஆரம்பிப்பது உசிதம்.
நான்கு:- ஒரு முறை கண் திறந்து திரையில் ஓடும் அந்தப் படம் பார்த்து கேட்ட பின், மறுமுறை கண் மூடி மனதில் உருவேற்றலாம்.
பல்லவி முடிந்து சரணம் ஆரம்பிக்கும் முன் புல்லாங்குழல் ஆளை வசியப்படுத்தி இழுத்து பாடலில் உள்ளே விட்டுவிடுகிறது. தந்தி வாத்தியமான வயலின் தொடர்ந்து இசைக்க ஆரம்பித்து மீண்டும் வேணுகானம் மூன்று முறை கூகூ சொல்லி யேசுதாஸை பாட அழைக்கிறது. "இந்த நேரத்திலே... மலைவாரத்திலே.. நதி ஓரத்திலே உனைக் கூடி..." அந்த முடிக்கும் கூடி ஒரு விசேஷ கமக கவனிப்பு பெறுகிறது கானகந்தர்வன் குரலில். இப்படியே பாடல் ஓடி "நெஞ்ஜாமாரத் தழுவி அமர நிலை பெற்றதன் பயனை இன்று காண்பேன்..." என்ற முதல் சரண முடிவில் இந்த இசையில் நாமும் ஆத்மார்த்தமாக சரணம் புகுகிறோம்.
இரண்டாவது சரணம் முதல் சரணத்தை அடிபற்றி அப்படியே தொடர்ந்தாலும், "முத்தமிட்டு, பல முத்தமிட்டு, பல முத்தமிட்டுனை சேர்ந்திட வந்தேன்... " என்ற வரிகளில் பாரதி எவ்வளவு இறுக்கமாக காதலிக்கு முத்தமிட வேண்டும் என்று சொல்லியிருப்பான் என யேசுதாஸ் நாவழுந்த அழுத்தம் கொடுத்து உச்சரித்து பாடுவது காதலர் மனதில் நிச்சயம் சஞ்சலம் ஏற்ப்பட வழிவகை செய்யும். காதலர்களாக கேட்பதென்றால் இரண்டடி இடைவெளி அவசியம் தேவை. மேற்படி காரியங்கள் ஏதும் நடந்தால் இந்த வலைப்பூ பொறுப்பல்ல!
இதைத் தவிர மற்ற மாயாஜாலங்கள் பாரதியின் கைவண்ணம் தானாக பார்த்துக்கொள்கிறது. புரட்சி எழுதும் பாரதி பேனா காதல் மை கொண்டு நிரப்பி தீட்டியிருக்கும் காதற்ப்பா. பாடலும் எழில் கொஞ்சும் இசையும் மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. பொதுவாக இணையத்தில் "காக்கை சிறகினிலே... நந்தலாலா..." என்ற ஏழாவது மனிதன் பாடல் தான் பிரபல்யம். இந்தப் பாடல் நம்ம நெஞ்சார்ந்த விருப்பம்.
படம் : ஏழாவது மனிதன்.
இசை: எல். வைத்தியநாதன்.
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்.
எப்படி? சொக்கிப் போனீர்களா? ஹாப்பி வீக் எண்டு.
-
36 comments:
Present Sir.
வெங்கட் இந்தப் படத்தின் பாடல் கேசட் சேலத்தில் எங்கள் வீட்டில் உள்ளது, பல முறை கேட்டும் அலுக்கதா பாடல் இது. பாரதியின் வரிக்கு, ஜேசுதாஸ் அட்டகாசமாக பாடியிருக்கிறார்
அருமையான பாடல் .. பகிர்விற்கு நன்றி வெங்கட் ..
இனிமையா இருக்கு பாடல். அருமையா இருக்கு.. பாடலுக்கான தங்களின் ஆலாபனை(கட்டுரை)..RVS
முதல் முறையாக கேட்கிறேன்..இப்படி அற்புதமான பாடல்கள் எவ்வளவு ஒழிந்த்துள்ளனவோ ? வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றி..
அதென்னவோ தெரியவில்லை பாரதி பாடலில் மட்டும் யேசு அண்ணா அவ்வளவு தமிழ் ( ள்,ல் ) உச்சரிப்பு தவறுகள் செய்வதில்லை ..
மு..மு..மு..... பாரதியின் இறுக்கத்தை பாட்டில் உருக்கமாகவே வெளிப்படுத்தியிருந்தார் யேசு அண்ணா.
மீண்டும் நன்றி..இப்படியான தங்கசுரங்கங்ளை வாய்ப்பு கிடைக்கும்பொழுது அடையாளம் காட்டுங்கள்
நன்றி எல்.கே ;-)
@ஆதிரா
பாரதியின் நீங்கள் கேட்டவைகளை திரைப்படங்களில் பாரதி பாடல்களின் ஒரு முழுத் தொகுப்பை வெளியடலாம் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. ;-)
@பத்மநாபன்
அடுத்தது ஒரு தமிழ்-கர்நாடக அசத்தல் ஹிட். வெயிட் பண்ணுங்க... ;-)
கலக்குங்குங்க ஸார்
- இப்படிக்கு பள்ளி தோழன் (ம்ம்ம்ம் கண்டுபுடீங்க பார்ப்போம்)
//Anonymous said...
கலக்குங்குங்க ஸார்
- இப்படிக்கு பள்ளி தோழன் (ம்ம்ம்ம் கண்டுபுடீங்க பார்ப்போம்)
//
குரலை வச்சு கண்டுபிடிக்கலாம்
உருவம் பார்த்து கண்டுபிடிக்கலாம்
கடிதத்தில் கையெழுத்து பார்த்து கண்டுபிடிக்கலாம்
தட்டச்சில் அடித்துவிட்டு... கண்டுபுடிக்க சொன்னா.. எப்படி சார்!
ஏதாவது க்ளு குடுங்க.. முயற்சி பண்றேன்... ;-) ;-)
செம பாட்டு ஜி! பாடல் வரிகளுக்கு மேலும் அழகூட்டும் அண்ணன் ஏசுதாஸின் குரல்!!!
@சிவா
நிச்சயமா... ஜேசுதாஸ் ஜானகி.. தொண்டைகிட்ட நிக்குது. வரமாட்டேங்குது.. ஒரு பாட்டு இருக்கு.. இந்த எப்.எம் ரேடியோவில எல்லாம் போடாம.. அதுவும் தரேன் ஒருநாள்.. ;-)
என்ன அற்புதமான பாடல்... இந்த பின்னூட்டம் இடுவதற்கு முன் பாரதியின் கவிதைப் புத்தகத்தை எடுத்து வைத்து விட்டே இதை பதிக்கிறேன்... எந்த
இரவு நானும் பாட்டனுமாய் தனிமையில்..
நல்ல பாட்டுக்கு நன்றி.. என்னிடம் பாடி ஓடித் தேய்ந்த கேசட் அது.. போடுங்களேன் ஒரு பாரதி வாரம்?!
@மோகன்ஜி
அண்ணா கேட்டு இல்லைன்னு சொல்ல முடியுமா... ஒரு கலெக்ஷன் கோர்த்துண்டு இருக்கேன். முடிஞ்சதும் போட்டுடறேன். ;-) ;-)
@பத்மநாபன்
//அதென்னவோ தெரியவில்லை பாரதி பாடலில் மட்டும் யேசு அண்ணா அவ்வளவு தமிழ் ( ள்,ல் ) உச்சரிப்பு தவறுகள் செய்வதில்லை ..//
முண்டாசுக்காரன் ரொம்பவும் கோவக்காரன். சாபம் குடுத்துடுவான்னு பயமோ.. ;) ;-)
யோவ் ...அம்பி.... சரியான ஆளுதானையா நீரு.
"இரண்டு:- எவர் எவர்க்கு என்னென்ன பானம் ப்ரியமோ அந்தந்த பானம் ஒரு கையில்."
அப்படி வாய்யா வழிக்கு. திருட்டு கொட்டு!!
.இதுக்கு இத்தனை நாளா டா வேணும் அம்பி? :))))
அதுசரி, சபையர் தியேட்டரில் இந்த படத்தை பலமுறை பார்த்து சுகித்தவன்.
என் துக்கம் ... இதன் இசை அமைப்பு - மேதை . எல் வைத்தியநாதன். ஒரு பயலுக்கும் அந்த நினைவு இல்லை.
முலையோரம் என்பதை ரசமில்லாமல் பாடுவது பாவம். சண்டைக்கு வராமலிருந்தால் ஒன்று சொல்வேன்.
உங்க நோட்சுக்கு முன்னாடி கோனார் நோட்செல்லாம் உரை போடக் கூடக் காணாது. பின்னிட்டீங்க.
இந்தப் பாட்டு முதல் முறை கேள்விப் படுகிறேன்.
சொக்கித் தான் போனேன்!
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/
கரக்டுதான் கக்கு.. ;-) ;-)
அப்பாஜி! சர்வ சுதந்திரத்தோட நீங்க உங்க கருத்தை சொல்லலாம். சண்டை போன்ற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லை. ;-) ;-) ;-)
@Gopi Ramamoorthy
வாழ்த்துக்கு நன்றி. இன்னும் இது போல இருக்கு... அடிக்கடி வந்து பாருங்க.. ;-) ;-)
@ஆர்.ராமமூர்த்தி
சொக்கியதர்க்கு நன்றி. ;-) ;-)
கக்கு சார்!கரெக்டா சொன்னீங்க.. எல்.வைத்தியநாதன் ஒரு மேதை..
அப்பாஜி!உங்க காமென்ட்....
'சேம் பீலிங்கி' இவ்விடேயும்..
இனிமையான பகிர்வு இனிமையானா பாடல்..நன்றி
@Gayathri
அப்பொப்போ இது மாதிரி ரிலீஸ் உண்டு.. ;-) ;-)
மிக நல்ல பாடல்.. சரியான இசை தேர்வு,,
நன்றி செந்தில் ;-) ;-) ;-)
http://www.eegarai.net/-f22/-t45521.htm
சின்னதா நான் ஒரு தொகுப்பு பதிவிட்டிருக்கிறேன். திரைப்படத்தில் வந்தவற்றைத் தனித்திரியில் பதிவிட வேண்டும் என்று உள்ளேன். முடிந்தால் பார்க்கவும் மன்னிக்கவும் கேட்கவும் RVS
ஆனாலும் உங்கள் தளத்தில் கிடைக்கும் சுகம் வேறு.. எங்கள் விருப்பத்திற்கு பாடல்கள் பதிவிட உவந்து ஏற்றமைக்கு நன்றி. மேலும் பாடல்கள் கேட்க ஆரம்பித்து விடலாமா?
அரு....மையான பாடல். தரவிறக்கிக் கொள்ள சுட்டியும் அருகில் கொடுத்தால் நலம்.
@ஆதிரா..
பார்த்தேன். ரசித்தேன். ஒவ்வொன்றும் தேன் தேன்.
நிச்சயமாக கேளுங்கள் இருந்தால் தரப்படும். ;-) ;-)
@ஸ்ரீராம்.
எங்கேயும் கிடைக்கவில்லை. நான் தான் யுடுயுபில் ஏத்தி நெட்டில் உலவ விட்டிருக்கிறேன். முடிந்தால் எங்காவது ஓரிடத்தில் ஏற்றி சுட்டி தருகிறேன். ;-)
பாடலைபோலவே, அதுக்கு நீங்க கொடுத்த முன்னுரையும் அழகு!
@சைவகொத்துப்பரோட்டா
நன்றி ;-)
அற்புதமான பாடல். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேட்டதில் ஒரு ஆனந்தம். அதைத் தந்த உங்களுக்கு நன்றி.
@வெங்கட் நாகராஜ்
நன்றி ;-) இன்னும் கொஞ்சம் இருக்கு. பின்னாலயே வருது.... ;-)
Post a Comment