மேலே இருக்கும் படத்தை பார்த்தாலே சிலுத்துக்குதா.. அப்ப கீழே இருக்கும் வீடியோவையும் பாருங்க அப்புறம் பேசலாம்.
சினிமா பார்த்து முடிச்சப்புறம் வீட்டுக்கு வர்ற வரைக்கும் அதைப் பற்றி எதையாவது பேசிக்கொண்டே வருவது போல.....
நமக்கெல்லாம் கால் தரையில பாவாம கொஞ்சம் உசரக்க போனாலே "ஞை...."ன்னு காதை அடைச்சுண்டு தலை "கிர்....கிர்..."ன்னு மாசமா இருக்குற பொண்ணு மாதிரி சுத்தறது. இவர்கல்லாம் அட்லீஸ்ட் அம்பது அடிக்கு கீழேயே இறங்க மாட்டேன்றாங்களே.
பாட்ஷா ரஜினி மாதிரி ரெண்டு எல்.ஐ.சி பில்டிங் உயரத்துக்கு நிக்கிற பில்டிங் ஒட்டுல சேர் மேல சேர் போட்டு கால் மேலே கால் போட்டு உட்கார்றது என்ன ஸ்டைல். ரொம்ப ராவடி பண்றாங்கப்பா.
ஸ்விம்மிங் பூல் நம்ம வீட்டு கொல்லைப்புறம் தண்ணீ தொட்டி மாதிரி தெரியறவரைக்கும் ஏணி மேலே ஏணி போட்டு அசராம ஆகாச மார்க்கமா ஏறி தொபுகடீர்ன்னு தலைகீழா தண்ணிக்குள்ள குதிக்கறதே இந்த அபிஷ்டு, லேசா கரணம் தப்பினா கபால மோட்ஷம் கிடைச்சிடும் போலருக்கே. இன்னொரு ஆள் டார்ஜான் கணக்கா கயித்துல தொங்கி நேரா போய் தண்ணியில லான்ட் ஆரான். வேறொரு ஆள் சைக்கிள்ள போய் சைக்கிளோட குதிச்சு ஸ்நானம் பண்றான்.
குத்து விளக்கை வீட்டுக்கு வந்த குடும்ப விளக்கு வாயால ஊதி அணைச்சா லக்ஷ்மி வீட்டை விட்டு கோச்சுண்டு வெளில ஓ...ஓ...டி போய்டுவாளாம். மெழுகுவர்த்திக்கு அது கிடையாதுன்னு தெரியாம ஒரு பொண்ணு ஷார்ப்பா மடிச்ச பேப்பரை தூக்கி போட்டு என்னா ஸ்டைலா அணைக்குது.
சித்தர்கள் மாதிரி சடசடன்னு தண்ணீ மேல நடக்கறாம்ப்பா ஒருத்தன். நானும் உத்து உத்து பார்த்துட்டேன் கீழே ஒன்னும் கிளாஸ் படி எதுவும் இல்லை. யாரும் போய் ஆத்துல குளத்துல ட்ரை பண்றேன்னு விழுந்துராதீங்க. அதற்க்கு கம்பெனி பொறுப்பேற்காது.
பாஸ்கெட் பால கூடையில போட்டு பார்த்துருக்கோம். பாஸ்கேட்ல பூ மாதிரி இருக்குற ஒரு பூவையை நாலஞ்சு பேரா கூடைக்குள்ள பந்து மாதிரி போட்டு கீழே வரும்போது கேட்ச் புடிக்கறான்கள். படாத எடத்துல பட்டுட்டா யார் கல்யாணம் பண்ணிப்பா. தூக்கி போட்டு கேட்ச் புடிக்கரார்களே அவங்கள்ள யாரவது கட்டிப்பானா. ராஸ்கல்ஸ். ஒரு சின்ன இது. கூடையில் என்ன பூ குஷ்பூ அப்படின்னு ரஜினி பாடினா மாதிரி குஷ்பூவை இந்தக் கூடையில் போட்டு எடுக்கணும்ன்னா ஒரு ஸ்ட்ரக்சுரல் எஞ்சினியர் வச்சு டயாமீட்டர் பார்த்து தான் கூடை செய்யணும் போலிருக்கு. குஷ்பூவிற்கு கோயில் கட்டியவர்கள் மன்னிப்பார்களாக.
திருட்டுப் பய புள்ள மொட்டை மாடியிலிருந்து அடுத்த முடி வச்ச மாடிக்கு என்னமா பாயுது. மொட்டை மாடியில நுனில நின்னா பின்னால வந்து யாராவது "பே" சொன்னாலே நாம ஆள் அம்பேல்.
கால்ல சக்கரத்தை கட்டிண்டு சுத்தறான் அப்படின்னு இந்த ஸ்கேட் போர்ட்ல சுத்தறவங்களை காட்டி நிச்சயம் சொல்லலாம். மண் ரோடு, செமின்ட் ரோடு, கிரவுண்டு, மாடிப் படி, மாடி மேல, மாடி டு மாடி, கைப்பிடி கம்பின்னு எங்கெல்லாம் அந்த சக்கரம் உருளுமோ அங்கெல்லாம் அந்த வீலு கழண்டு போற அளவுக்கு சுத்தராங்கப்பா.
மொதெல்ல கூடைக்குள்ள பொண்ணை தூக்கிப் போட்டு புடிச்சாங்க. அதுக்கப்புறம் குட்டிக்கரணம் அடிச்சுகிட்டே போயி ரெண்டு காலால அலேக்கா பந்தை தூக்கி நேரா பாக்கெட் பண்றான். ரொம்பவே அநியாயம் இது. எல்லாருமே கழைக் கூத்தாடியாயிட்டானுங்கோ.
பந்தை பின்னாடி விட்டு கவுட்டிக்குல ராக்க்ட்டை விட்டு எதிர் சைடு அனுப்பறாங்க. அது என்ன டென்னீஸா இல்ல கவுட்டீஸா? அசந்து போய் ஆப்போசிட்ல மத்திய தூக்கவே இல்லை.
"கைய கால வச்சுண்டு சும்மாவே இருக்க மாட்டன். எதையாவது நோண்டிட்டு அப்புறம் இங்க பட்டுது அங்க பட்டுதுன்னு வந்து நிப்பன். என் அப்பன். ராப்பூரா வலி அவனுக்கு அவஸ்த்தை நமக்கு" என்று டிராயர் போட்டுண்டு விஷமமா சுத்திண்டு இருந்தப்ப பாட்டி சொல்லுவாள். இவங்களுக்கு இது போல பாட்டி இல்லையோ? ரொம்பவே வேடிக்கை காண்பிக்கிராங்க. வித்தை காட்ரதுல மன்னர்கள்.
பின் குறிப்பு: மன்னார்குடி டேஸ் நாளை வழக்கம் போல இல்லாமல் வெளிவரும். (உன்னை யார் இப்ப அதை கேட்டா என்று யாரும் என்னை அடிக்க வராமல் இருந்ததற்கு நன்றி.)
-
30 comments:
me the first, at-least this time ?
comment later (after reading the article)
@Madhavan
அப்பனே... வடை உனக்குத்தான்... ;-)
குட் ஒன்
Awesome video!
சித்தர்கள் மாதிரி சடசடன்னு தண்ணீ மேல நடக்கறாம்ப்பா ஒருத்தன். நானும் உத்து உத்து பார்த்துட்டேன் கீழே ஒன்னும் கிளாஸ் படி எதுவும் இல்லை. யாரும் போய் ஆத்துல குளத்துல ட்ரை பண்றேன்னு விழுந்துராதீங்க. அதற்க்கு கம்பெனி பொறுப்பேற்காது.
....The documentary-type film features three guys running on water thanks to the water repellent qualities of their Hi-Tec shoes.
http://www.hi-tec.com/liquid-mountaineering/
நான் கூடத்தான் நேத்து ரெண்டு கையிலேயும் துணிப்பார்சல் வழிய பேலன்ஸ் பண்ணிக்கிட்டு, சட்டைப் பையில இருந்த கிரேடிட்கார்டை
பல்லாலேயே உருவி,கல்லாவுல கொடுத்தேன்.. என்
போட்டோவையும் சேத்து போடக் கூடாது?
//அப்பனே... வடை உனக்குத்தான்... ;-) //
ஒரு வடைதான் இருக்கா.. இன்னும் கொஞ்சம் சேர்த்து வாங்கி வைங்க எங்களுக்கும் . :)
அத்தனயும் அருமை.. பசங்களையும் ப்ளாக் பக்கம் இழுத்து பாக்க வச்சாச்சு..
தண்ணிலே நடப்பது பற்றி ஒரு ஜென் கதை இருக்கு..
நேரம் கிடைக்கறப்ப பகிர்ந்துக்கிறேன்..தெரிஞ்சா நீங்களே எடுத்து விடுங்க இன்னமும் நகைச்சுவையா இருக்கும்.
நம்மால முடியாததைப் பார்த்துத்தான் ஆசையைத் தீர்த்துக்கனும்.. ம்ம்ம்ம்ம்ம்ம்
பாரதியார் கேட்ட வரம் தான் நினைவு வருகிறது.
“விசையுறு பந்தினைப் போல
உள்ளம் வேண்டிடும் படி செல்லும்
உடல் கேட்டேன்”
அதெல்லாம்ம்ம்ம்ம்ம்ம் ஒரு கொடுப்பினை...
இந்த ஏக்கத்துல கட்டுரையைப் பத்தி சொல்லாம விட்டுட்டேனே. அருமையா இருக்கு..RVS
//திருட்டுப் பய புள்ள மொட்டை மாடியிலிருந்து அடுத்த முடி வச்ச மாடிக்கு என்னமா பாயுது. மொட்டை மாடியில நுனில நின்னா பின்னால வந்து யாராவது "பே" சொன்னாலே நாம ஆள் அம்பேல்.//
இந்த நடையும் நல்லா மடியுது உங்ககிட்ட.. அசத்துங்க..
Thanks LK
@Chitra
நானும் அதைப் பார்த்தேன் சித்ரா.. நன்றி ;-)
அதிவீர சாகசம் மோகன்ஜி..... கொஞ்சம் அந்தப் படத்தை இப்படி அனுப்புங்கோ... அமர்க்களமா ப்ளோ பண்ணி போடறேன். ;-)
@இளங்கோ
சொல்லிட்டீங்கல்ல... நிச்சயமா... ;-)
எங்கயோ மூலையில மூளையில் இருக்கு.. தட்டி பார்க்கறேன் பத்துஜி.. ;-) நீங்க ஒன்னு போடுங்களேன் உங்க பாணியில... ;-)
நன்றி ஆதிரா.. அடுத்தது சுத்த தமிழ்ல ஒன்னு ட்ரை பண்ணலாம்ன்னு இருக்கேன்... பார்க்கலாம். ;-);-);-)
@ஆதிரா
பாரதியாரை எல்லாம் கூட கூட்டிகிட்டு வரீங்க.. நெட்ல தேடி கிடைக்காத ஒரு காதல் ரசம் மிக்க பாரதி பாடல் யேசுதாஸ் பாடியது கைவசம் இருக்கு. கொஞ்ச நாளைக்கப்புறம் போடலாம்ன்னு விருப்பம். இப்பவே போட வச்சுருவீங்க போலிருக்கே.. ;-)
//மோகன்ஜி said... நான் கூடத்தான் நேத்து ரெண்டு கையிலேயும் துணிப்பார்சல் வழிய பேலன்ஸ் பண்ணிக்கிட்டு, சட்டைப் பையில இருந்த கிரேடிட்கார்டை பல்லாலேயே உருவி,கல்லாவுல கொடுத்தேன்.. என் போட்டோவையும் சேத்து போடக் கூடாது?//
மோகன்ஜி, கலக்கல்.
இதுக்கும் மோவாயை இழுத்து ஒரு நோய்யாஞ்சி கிடைச்சிருக்குமே. "உங்களை கட்டிட்டுண்டு என்ன சுகத்தை கண்டேன்" என்று !! விடுங்க விடுங்க, வீட்டுக்கு வீடு வாசப்படி.
முந்தா நாள் முழுவதும் நானும் நேட்ல ”காற்றுவெளியிடை கண்ணம்மா” என்ற பாடலைத் தேடினேன். கிடைக்கல..கிடைத்தால் இதையும் சேர்த்தே பதிவிடுங்களேன் RVS
கலக்கல் வீடியோ! :)
//டென்னீஸா இல்ல கவுட்டீஸா?//
ஹா ஹா!
நல்லா இருக்குங்க
@சாய்
வாசலுக்கு வாசல் அழகு காண்பிக்கும் ஒரு பொண்டாட்டி! ;-)
@Balaji saravana
;-)
@ஜிஜி
Thanks ;-)
@ஆதிரா
நேயர் விருப்பம். போட்டுடலாம். ;-) ;-)
நேத்து இரவே வீடியோ பாத்துட்டேன் :)
சாகசம் எல்லாம் கலக்கல் :)
அந்த குட்டி பெண் சைக்கிள் கொண்டு பொய் ஸ்டைல் ஆக நிறுத்துறது தான் டாப் :)
கொஞ்ச நாளா சிஸ்டம் பிரச்சனை அதான் வரல !
டாக்டர். அது ஒரு ஸ்டைலான ஸ்டாப். Cute Baby!!
அத்தனயும் அருமை..
நன்றி சே.குமார்..
Wonderful video. Thanks for sharing.
Thanks Venkat Nagaraj
Post a Comment