கண்ணுக்கு மை தீட்டி கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்து மொட்டை அடிப்பதற்குள் காடாய் வளர்ந்த முடியை ஜடை பின்னி ஃப்ராக் மாட்டி விட்டு அஞ்சு வயசு ஆவதற்குள் ஆசையாய் அழகு பார்த்திருப்பார்கள்.
ஊரில் திருவிழாக்களில் குறவன் குறத்தி ஆட்டங்களில் குறத்தி வேடம் இட்டிருப்பது சுத்தமான ஆம்பிளை தான் என்று நண்பர்கள் உண்மையை எடுத்து இயம்ப அந்த ஆட்டம் அதற்க்கு மேல் ரசிக்கும் படியாக இல்லை.
புஜபலம் மிக்க பெண்கள் அவ்வளவாக நம்மை கவர்வதில்லை. ஆனால் சுத்த யவ்வன புருஷர்கள் மேக்கப் ஆட்களின் கை வேலையில் ஆளை கிறங்கடிக்கும் அழகுடன் மாற்றப்படுகிறார்கள். அவ்வாறு மாறியதில் இந்த வரிசைக்கிரமாக இவர்கள் தத்தம் இடத்தை பிடிக்கிறார்கள்.
முதலிடம் ஷண்முகி மாமிக்கு தான். வயசானாலும் மணிவண்ணன், ஜெமினி கணேசன் போன்ற எல்லோரையும் மயக்கியவர். மடிசார் கட்டிண்டு ஆடும் இந்த பரத நாட்டிய முத்திரையை பாருங்கள். பரத முனிவருக்கே கற்றுத் தருவார் நம்ம காதல் இளவரசன். கமலுக்கு ஒரு பதிவு நான் தனியா போடணும்ன்னு இருக்கேன். பார்க்கலாம்.
முதலிடம் ஷண்முகி மாமிக்கு தான். வயசானாலும் மணிவண்ணன், ஜெமினி கணேசன் போன்ற எல்லோரையும் மயக்கியவர். மடிசார் கட்டிண்டு ஆடும் இந்த பரத நாட்டிய முத்திரையை பாருங்கள். பரத முனிவருக்கே கற்றுத் தருவார் நம்ம காதல் இளவரசன். கமலுக்கு ஒரு பதிவு நான் தனியா போடணும்ன்னு இருக்கேன். பார்க்கலாம்.
இரண்டாவதாக ஆணழகன் படத்தில் பேரழகியாக நடித்த நம்ம பிரசாந்த். இதே வேஷத்தில் இன்னும் கொஞ்ச படங்களில் அடவு கட்டியிருந்தார் என்றால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் திரிஷா, தமண்ணா போன்ற முன்னணி ஹீரோயினிக்கள் மார்க்கட் நிச்சயம் அதல பாதாளத்திற்கு போயிருக்கும். கீழே அந்தப் பார்வையை பாருங்களேன். அப்படியே சொக்கிப் போய் விடுவீர்கள்.
மூன்றாவதாக நம்ம சூப்பர் ஸ்டார். பணக்காரனில் ஒரு பாட்டுக்கு மட்டும் வேஷம் போட்டு வந்தாலும் தலையை குலுக்கு குலுக்கி ஆடும் போது மனசை பிடித்து ஒரு உலுக்கு உலிக்கிடுவார்.
நான்காவதாக இந்த ரேசில் சமீபத்திய சேர்க்கை அண்ணன் விக்ரம். கந்தசாமி எப்படியோ ஆனால் இந்த 'கன்னி'சாமி எப்படி இருக்கிறார் பாருங்கள். கல்லடி பட்டாலும் இந்த சாமியின் கண்ணடி பட்டால் ஆள் நிச்சயம் க்ளோஸ். காதுல அந்த லாங் இயர் ரிங் நல்லா இருக்கு இல்ல. அதுக்கு மேச்சா நெக்லஸ் வேற.
கவுண்டரும் சத்யராஜும் மாமன் மகளான மீனாவிடம் பண்ணும் அழும்பு. சத்யராஜ் இங்கிலீஷ் பேசுவார் பாருங்க இந்த சீன்ல. அடாடா. அசப்புல நம்ம நமீதாவுக்கு அக்கா மாதிரி இல்லை நம்ம சத்யராஜ். கவுண்டர் தான் பாவம். வேடிக்கை பார்க்க விட்டுட்டாங்க.
கீழே குளக் குளியல் சீனில் வரும் விவேக் படிக்காதவனில் அடிக்காத கொட்டமே இல்லை. ஏக்கத்தோடு வெட்க லுக் விடும் விவேக் நாயகிகை பிரதான சப்ஜெக்ட்டாக வைத்திருக்கும் எந்த டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் கண்ணிலும் படாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் தமிழ்கூறும் நல்லுலகிர்க்கு ஒரு நாயகி உதயமாகிறாள்.
எல்லோரையும் பார்த்தாயிற்றா.... ஓ.கே. முடிவாக வானிட்டி ஃபேர் என்ற இணைய தளத்தில் வெளியிட்டிருந்த ஒரு கவர்ச்சியான காலேண்டர் அட்டைகளைதான் இப்போது பார்க்கப் போகிறீர்கள். வெள்ளைக்கார...ரிச்சி.. மூச்சடைத்துப் போய் விடாதீர்கள். இந்த முன்னச்செரிக்கை மூலமாக உங்களை கொன்ற பாவத்திலிருந்து நான் தப்பித்துக் கொள்கிறேன்.
என்னா போஸு... அடாடா...
என்னா லூக்கு......
பின் குறிப்பு:
இந்தப் போஸ்டர் உங்களது 2011 ம் வருடத்திய காலண்டரை அலங்கரிக்க வேண்டுமென்றால் தயவு செய்து என்னை தொடர்புகொள்ள வேண்டாம் என்று பயபக்தியுடன் கேட்டுக்கொள்கிறேன். கீழ்கண்ட முகவரியில் போய் விசாரித்தால் உங்களுக்கு தக்க பதில் கிடைக்கலாம். நன்றி.
http://www.vanityfair.com/hollywood/features/2010/11/zach-galifianakis-slide-show-201011#slide=1படஉதவி: விவேக் படம் hindia.in, கமல் படம் boddunan.com, மற்றவை வீடியோவில் இருந்து வீக் என்டிர்க்காக மக்கள் சந்தோஷத்திற்க்காக இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ப்ளாக் பதிந்த உங்கள் ஆர்.வி.எஸ் சுட்டது.
-
26 comments:
இன்னா வாஜாரே ! ரொம்ப டமாஷாதான் கீது.
நம்ம R V S அண்ணாத்தே கூட மீச இல்லாகாட்டி சும்மா செம குஜ்ஜிலி கணக்கா செம லுக்குதான் போ.
போட்டோ ஒன்னு அனுபிவுடு கண்ணு . நா மிச்ச சோலிய பாத்துகிறேன்.
அட, பொண்ணா மாத்தி வுட்டுகினு நம வூட்டாண்ட தொங்க விட்டுகினா ..அப்பால பாரு ...கூட்டம் சும்மா எகிறி பூடும் ஆக்காங் !!
அன்பின் கக்கு,
நாட்டில் ஆண்களுக்கு பாதுகாப்பே கிடையாதா? ;-);-)
பின்ன இன்னாவாம்?
பொம்பலவேஷம் கட்டிகின ஆம்பளைங்க தான் அழகா கீரங்கோன்னு பதிவு போட்டுகினு ,இப்போ
இந்தா மேரிக்கு கேட்டுகினா இன்னா அர்த்தம் வாஜாரே?
ok.. but this post is not so interesting as those of 'mannargudi days --
@கக்கு
ஹி ஹி.. வேற ஒன்னும் சொல்ல தோணலைப்பா..
எதுக்குங்க இந்த வேண்டாத வேலை, எல்லாரையும் உசுப்பேத்தி விட்டுக்கிட்டு! நம்ம ஓட்டு, ஷண்முகி மாமிக்குத் தான்! :-))))
@மாதவன்
எனக்கு என்னமோ புடிச்சிருந்துதுப்பா.. அதான்... சரி விடு.. ;-)
@வெங்கட் நாகராஜ்
அதனாலத்தான் அவங்களை முதல் இடத்துல போட்ருக்கேன். ;-) ;-)
RVS ஐயா நல்லாத்தானே இருந்தீக.. அழகாத்தானே போயிட்டு இருந்துச்சு... நடுவுல இது என்ன கூத்து? என்ன ஆச்சு திடீர்னு இப்படி மாறிப்போயிட்டீங்க?
இருந்தாலும் ஒளவையை ரசிக்கல்லன்னா தமிழச்சியா இருக்கறதுல அர்த்தமே இல்ல...
என்றும் ஒளவைக்குத்தான் நம்ம ஓட்டு இருக்கும்..
என்னமோ பண்ணுறீங்க.. அப்பப்ப ஒன்னுமே பிரியல..ம்ம்ம் அசத்துங்க..
@ஆதிரா
எனக்கு வித்தியாசமா விகாரமா படலை. ஆனா ஏற்கனவே மாதவன் ஓ.கே அப்படின்னு சொல்லிட்டு போயிருக்கார். ஓ.கே. இனிமே தவிர்ப்போம். ;-) ;-)
அன்பு RVS,
ஹலோ நானும் ரசிச்சதைத்தானே சொன்னேன். அதுவும் உங்களின் வகை வகையான வித்தியாச வித்தியாசமான பதிவுக்ளை. ரசனையைச்.. சொன்னேன்.. கடைசில அசத்துங்கன்னுதானே போட்டு இருக்கேன்.
எங்கே தவறு நடந்தது? இப்படி குழம்பிட்டீங்க? எல்லாம் தானே வேணும் மனுஷனுக்கு... தவிர்ப்பதற்கு ஒன்றுமே இல்ல. உங்க பதிவும் மோகன் ஜி யின் பதுவும்தான் எங்கள் மன உளைச்சலை மாற்றும் அருமருந்து இப்போதைக்கு.. நெசமாத்தான் சொல்றேன் RVS. தொடருங்கள்..
நன்றி ஆதிரா!!!! (நாலு ஆச்சர்ய குறி சத்தமா கூப்பிட்டது... ;-) ;-) ;-) )
நம்ப ஓட்டு ஷண்முகிக்கு தாங்க.
அப்படியா... நாகராஜசோழன் எம்.ஏ. ஆனா எங்க ஓட்டு உங்களுக்குத்தான்... ;-) ;-)
thanks for sharing. vaalththukkal.
@மதுரை சரவணன்
நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு போலருக்கே... ரசித்ததற்கு நன்றி.
அடடடா!!!
தீராத விளையாட்டுப்பிள்ளை ...ஆர்.வி.எஸ்
என்றும் தீராத விளையாட்டு பிள்ளை...
ஆமா ஆமா ஆமா.. எஸ்.கே ;-)
@பத்மநாபன்
ஹி ஹி ஹி ஹி ஹி ;-) ;-) ;-)
அப்பா நா....லு ஆச்சரியக்குறியின் சத்தம் தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பி விட்டுடுச்சி.. வீடு வரைக்கும் வந்து RVS. பின்னாடி ஒரு மூன்று குறி போட்டு இருக்கிறீகளே அது மீண்டும் என்னை தூங்க வைத்து விட்டது.... நன்றி!!!!!!!! மோகனத்திற்கும் பூபாளத்திற்கும்..
பூபாளத்திர்க்கும் நீலாம்பரிக்கும் சரியா ஆதிரா? ;-) ;-)
என்னா ஒரு அலசல்..
ரைட்டு.. :)
ஓ மாத்திட்டேனா.. தூக்க கலக்கத்தில எழுதினா இப்படித்தான் இருக்கும்.. இதே கலக்கத்தில உங்களோட அடுத்த பதிவைப் பார்க்கப் போறேன்.. டா டா..
ரைட்டுக்கு ஒரு ரைட்டு.. பாலாஜி ;-)
அடுத்த பதிவு பார்த்தீங்கன்னா இல்லை கேட்டீங்கன்னா உடனே எழுந்துருவீங்க.. ;-);-)
Post a Comment