ஒரு நாள் பொழுது விடிந்ததும் காலையிலேயே ஜனதா கட்சியின் சின்னம் போல உழவுக்கு ஏர் கலப்பை எடுத்துச்செல்லும் உழவர் பாணியில் தோளில் மட்டையை சாய்த்து ஆனந்த் வந்தான். அன்று வெய்யில் பாழ் போகாமல் முழு நேரமும் விளையாட எங்கள் கிரிக்கெட் கவுன்சிலில் முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கனவே விளையாண்டுகொண்டிருந்த காசி விஸ்வநாதர் கோவில் பாலைவன நந்தவன மைதானம் தெருவில் தீடீரென்று சிவானுக்ரஹம் பெற்ற புண்ணியாத்மாவின் காரியத்தால் நிஜமாகவே செம்பருத்தியும், நந்தியாவட்டையும், பவழமல்லியும் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையாக ஆக்கப்பட்டிருந்தது. தெருவில் விளையாடலாம் என்றால், காலை மடக்கி ஒரு திருப்பு திருப்பினால் பந்து குளத்துக்குள் போய் விழுந்துவிடும். ஒவ்வொரு கல்லாக பந்திற்கு அப்பால் எறிந்து பந்து கரைக்கு ஒதுங்கியதும் எடுப்பதிற்குள் தாவு தீர்ந்துவிடும். பல லோடு கருங்கல் செங்கல் உள்ளே இறக்கியிருப்போம். விளையாடும் நேரத்தை விட குளக்கரை ஓரம் நின்று கல் எறிவதில் அதிக நேரம் செலவழிப்பதாகப்பட்டது. ஒரு சில நாளைக்கு கிரிக்கெட் விளையாடுகிறோமா அல்லது எரி கல் ஆடுகிரோமா என்றே தெரியாமல் விளையாண்டோம். நாட்கள் செல்ல செல்ல தெருவில் உள்ள கற்கள் எல்லாம் குளத்தில் இறங்கி, தண்ணீர் தாகமடைந்த காகம் கதை போல, குளம் ஒரு படி மேலே வந்தது. இன்னும் கொஞ்ச நாள் எறிந்திருந்தால் குளத்தில் இருந்து தண்ணீர் வழிந்து ஹரித்ராநதி நிஜமாகவே ஒரு நைல் நதியாக தெருவில் ஓடியிருக்கும். அது மீன் பிடி குளமாகவும் இருந்தபடியால், ஏலதாரர் குஞ்சு பிள்ளை கண்டமேனிக்கு ஏசி விரட்டியதில் மைதானம் தேடும் படலம் மிகத்தீவிரமாக தொடங்கியது.
தெரு ஓரத்தில், சிவன் கோவில் தாண்டி, ஒரு கருவேலி முள் காடு ஒன்று உண்டு. பகல் வேலையிலும் பசங்களை பயமுறுத்தும் ஆள் அரவம் இல்லாத வனாந்திரம். வடக்குத்தெருவின் கீழண்டை முனையில் கடைசி வீடு, சேதுபவா சத்திரம் வழியாக வரலாம். அந்தக் காலத்தில் பலபேர் படுத்துறங்கவும் பசியாறவும் கட்டிய பெரிய திண்ணையில் இப்போது மேலிருந்து ஓடுகள் விழுந்து உதவாக்கரை திண்ணையாய் மாற்றியிருக்கும். ஓடுகள் உடைந்து விழுந்த இடத்தில் இருந்து பதினொரு மணி வெயில் மணி பட பி.ஸி ஸ்ரீராம் கேமரா போல ஆங்காங்கே வெளிச்சம் அடித்து திண்ணையில் வெள்ளையாய் கேலடியாஸ்கோப் டிசைன் போட்டிருக்கும். தூசிகள் உடைந்த மேற்கூரை ஓட்டிற்கும் திண்ணைக்கும் இடையில் உள்ள தூரத்தை புகையாய் பறந்து நிரப்பும். அந்த டிசைன் ஒளியில் திண்ணையில் ஏறி நின்று யாரவது ஊர் பேர் தெரியாத சாந்தி அங்க அவயங்களை கட்டாமல் ஆடினாலே டிஸ்கோ சாந்தி என்று அழைக்கப்படுவர். சத்திரத்தை மேற்பார்வை மற்றும் கீழ்ப்பார்வை பார்த்து வந்த ரேவதி மாமியின் அதிரடி தோற்றத்தைக் கண்டு அச்சப்பட்டே அந்த வழியாக கருவேலக் காட்டுக்கு போகும் எண்ணத்தை கைவிட்டோம். ஒருத்தி இருவராய் தோற்றமளிப்பாள். கண்ணுக்கு மை அழகு என்று எழுதியவர் வாழ்வாங்கு வாழ வேண்டும். காருக்கு ரெண்டு ஹெட்லைட்டுக் கீழ் ஃபாக் லைட் இருப்பது போல மையால் கண்ணுக்கு கீழே இன்னொரு மாறு கண் வரைந்துகொள்வாள். நானிலம் அதிர அவள் நடந்து வரும் பொழுதே நமக்கு கிரிக்கெட் ஆசை போய் உயிர் மேல் ஆசை வந்துவிடும். ஆயிரம் ரஜினி சேர்ந்து "ச்சும்மா அதிருதில்லை.." சொன்ன எஃபெக்ட் இருக்கும். மற்றொரு வழி, சிவன் கோவில் நந்தவனத்திற்க்குள் நுழைந்து, சுவர் ஏறி தாண்டி குதித்து அதனுள் செல்ல வேண்டும். நீங்கள் எதிர்பார்த்தது போல் நாங்கள் இரண்டாவதான சுவர் ஏறி குதிக்கும் வழியை தேர்ந்தெடுத்தோம்.
சுவர் தாண்டி குதிக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கருவை முள் காலை எடுக்க விடாமல் பூமியோடு சேர்த்து தைத்துவிடும். அந்த காலகட்டத்தில் பூக்களின் படுக்கையாக இல்லாமல் Cricket is the path way of thorns எங்களுக்கு. ஹரித்ராநதிக்கு அரையளவு இருக்கும் அந்த இடம். ஆற்றின் குறுக்கே இருக்கும் சட்டரஸுக்கு(அணையை அப்படித்தான் அழைப்போம்) குர்க்கால நேர் எதிரே அமைந்த காடு அது. சுற்றிலும் அடர்ந்த கருவேலி காட்டான்கள். நன்றாக கொழுத்து வளர்ந்த டெல்லி எருமையை முழுசாக மறைக்கும் அளவிற்கு வளர்ந்த காட்டான்கள். எருமை மேலே எமன் ஏறி நின்றாலும் மறைக்கும் அளவிற்கு தழைத்து வளர்ந்த தாவரங்கள். அந்த காட்டிற்கு நடுவே ஒரு ஓங்கி உயர்ந்த ஒற்றை புளியமரம். "ஹோ..." என்ற பாமணி ஆற்றங்கரையின் காற்று கொடுத்த வெறுமையின் சப்தம். யாரோ அனானி அந்த மரத்தின் உச்சாணியில் ஒரு சிகப்பு கலர் கொடியை மூங்கிலில் சுற்றி கட்டியிருந்தார்கள். அந்தக் கொடி கிழிந்து காற்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது இஷ்டத்திற்கு ஆடும். மரத்தில் என்னைப்போல் ஒரு மாங்கா மண்டை நுழையும் அளவிற்கு பொந்தும் அதில் சில பெயர் தெரியா பறவைகளும் இருந்தது. பேய்ப் படங்களில் வருவது போல ஆந்தை ஒன்று அந்த மரத்தின் முதல் கிளையில் உட்கார்ந்திருக்கும். பெண்ணை பெற்ற அம்மா திருவிழா கூட்டத்தில் பெண்ணுக்கு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்து பார்த்து பாதுகாத்து பார்த்துக்கொண்டே இருப்பது போல தலையை அங்குமிங்கும் திருப்பிக் கொண்டே இருக்கும். ஆள் அரவமற்ற பகுதியில் அவ்வப்போது ஏதோ பறவைகளின் "க்ரீச் க்ரீச்" என்ற சப்தங்களும், "சட சட சட" என்று இறக்கை பட படக்கும் ஓசைகளும் கேட்ட வண்ணம் இருந்தது. ஆங்காங்கே சில உடைந்த வளையல்களும், கிழிந்த துணிகளும் கிடந்தன. உலகெங்கும் காணப்படுவது போல ஜோடி மாறிய ஒற்றை செருப்புகளும் இதில் அடக்கம். ஒரு கருப்பு நிற நாய் காலை நொண்டியபடி ஓடியது. மதிய வேளைகளில் முனி அங்கேதான் வாக்கிங் போவதாக வேறு பேச்சு. விளையாட இடம் தேவை ஆகையால், மட்டை பிடித்த கைகள், அரிவாள் பிடிக்க வேண்டியதாயிற்று. ஒரே நாளில் காடு அழிக்க முடிவானது. இப்போது சா.கந்தசாமியின் சாயாவனம் நினைவுக்கு எனக்கு வருகிறது. இரண்டு நாட்கள் எல்லா முட்புதர்களையும் வெட்டிய பின் சிலர் அடுப்புக்கு எடுத்து போனார்கள். நாங்கள் நாட்டுக்கு செய்த ஒரே உபயோகமான காரியம்!!!
விளையாட்டு ஆரம்பமாகியது. பக்கத்தில் இருக்கும் ரோஹினி வீட்டில் இருந்து தாக சாந்திக்கு தண்ணீர் அண்டா வைத்துக் கொண்டு ஓரிரு நாட்கள் ப்ராக்டீஸ் ஆட்டத்திற்கு பிறகு, பத்து தன் சிங்கப் பற்கள் தெரிய சிரித்து
"நமக்கு நாம்பளே விளையாடறத்துக்கு, வடக்கு தெருவோட மேட்ச் கொடுக்கலாம்" என்றான்.
"நமக்கு அவ்வளவு ஆள் இல்லையே" என்று ஸ்ருதியை குறைத்தான் ஆனந்த்.
"திருமஞ்சன வீதியில என் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க, அவங்களையும் சேர்த்துண்டு நாம விளையாடலாம்" என்று மடக்கி பேசினான் பத்து.
தனக்கு விளையாட மட்டை கிடைக்காது என்ற பயத்தில், “மாட்ச் எல்லாம் வேண்டான்டா" என்றான் ஆனந்தின் தம்பி ஒரு கண்ணில் எப்போதும் வழியும் பூளையை துடைத்துக்கொண்டே.
அதுவரையில் தேசிய மாட்ச்கள் மட்டும் விளையாடிய எங்கள் அணி சர்வதேச மாட்ச் போல வடக்கு தெருவுடன் அந்த வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாட்ச் விளையாட எங்கள் பொதுக்குழுவில் முடிவானது.
வடக்கு தெரு அணியில் வேகப் பந்து வீசும் சுதர்ஷன் அவன் தம்பி பாபு, ஓப்பனர் கோபால், மிடில் ஆர்டர் விளையாடுவதற்கு இரண்டு ஸ்ரீராம்கள் போன்று பல திறமையான முன்னணி வீரர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு வடக்கு தெருவில், சேதுபவா சத்திரத்திற்கு முன்னால், புங்க மரங்கள் அடர்ந்த 'மியூச்சுவல்' ஆரம்ப நிலை ஆங்கில பள்ளியின் மைதானம் இருந்தது. மரங்கள் அடர்ந்த பகுதியாதலால், களைப்பு தெரியாமல் எப்போதும் வலைப் பயிற்ச்சியில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு "மொக்கு"(moggu) என்கிற மோகன் "கிரிக்கெட் துரோணாச்சாரியாராக" இருந்தார். இடுப்பில் ஒரு கைலி, மேலே ஒரு வெள்ளை கலர் காசித் துண்டு இதுதான் அவரது காஸ்ட்யூம். அவரோடு மிகவும் நெருங்கி பழகியவர்கள் அவர் கீழே கூட உள்ளாடை உடுத்தாமல் ஃப்ரீயாகத் தான் மட்டை பிடித்து விளையாடுவார் என்று ரகசியமாய் சொல்ல கேள்வி. அவர்கள் அவர் காலடி மண் எடுத்து நெற்றியில் பூசாது விளையாட களம் இறங்க மாட்டார்கள். அவ்வளவு பயபக்தி குருவிடம் அவர்களுக்கு. ஒரு பெரிய கிரில் கதவின் பின்னால் நின்று அவர்களின் விளையாட்டு பயிற்சியை வேடிக்கை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் வெளியே நிற்கும். காகாஜி(இவர் தனியாக ஒரு பதிவில் வருவார்) ஆத்து ராஜா, நந்து போன்ற அண்ணாக்கள் அவர்களுடைய சிறப்பு உள்நாட்டு பயிற்சியாளர்கள். அவர்கள் அணி "ஹரித்ராநதி கிரிக்கெட் கிளப் - நார்த்" என்பது. சுருக்கிய பெயர் ஆங்கிலத்தில் HCC-NORTH.
சுதர்ஷன், பழம் பெரும் நடிகை, கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி நடையே ஓட்டமாக இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் ஓடி வந்து பௌலிங் செய்வான். அவன் தம்பி பாபு கால் சட்டையா அல்லது ஜட்டியா என்று தெரியா வண்ணம் நம் கண்ணை எமாற்றும் ஒன்றை அணிந்து கொண்டு குனிந்து நின்று பேட் செய்வான். ஆஃப் திசையில் ஸ்ரீதர் எப்போதும் தலையை தடவிக்கொண்டும், ஸ்ரீராம் லெக் திசையில் இலந்தை மரத்தடியிலும் நின்று ஃபீல்டிங் என்ற பெயரில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். பாதி நேரம் ஸ்ரீராம் வாய் இலந்தையை சப்பிக் கொண்டு இருக்கும். ஸ்லிப்பில் நிற்கும் கோபால், இரு கையையும் ஒன்று சேர்த்து, முழங்கால்களை கொஞ்சமாக மடக்கி, கண்களை சிமிட்டி சிமிட்டி சற்றே குனிந்து சுமோ மல்யுத்த வீரர்களின் ஆயத்த நிலையில் நிற்பான். புங்க மரத்தின் கிளையின் மேலேறி ஓரிருவர் அமர்ந்து ஆரவாரம் செய்து உற்சாகமூட்டியபடி இருப்பர். ஆறடி ரெண்டங்குல சரவணன் மட்டையை பிடித்துக்கொண்டு ஃபிரன்ட்ஃபுட்டில் ஸாஷ்டாங்கமாக தரையில் தெண்டம் சமர்பித்து நமஸ்கரித்து விளையாடுவான். பந்து பிடிக்க நிற்கும் ஃபீல்டர்ஸுக்கு உபய குசலோபரி சொல்லாதது தான் பாக்கி. நரி என்கிற திருஞானம், ரமேஷ், ரமேஷ் தம்பி கோபிலி, ராஜா, வாசு, சரவணன் தம்பி அசோக் என பெரிய பட்டாளமே உண்டு. நான்குக்கும், ஆறுக்கும், விக்கெட்டுகள் விழும் போதும் அவர்கள் "ஓ...ஓ..." என்று கோஷமிடும் போது நான்கு கரையும் திரும்பி பார்க்கும். ஹரித்ராநதி சுனாமி போல நிமிர்ந்து கடல் அலை எழுப்பும்.
மாட்ச் கேட்பதற்கு ஒரு தூதுவர் போய் முறைப்படி கேட்கவேண்டும். தட்டு, பழம் எல்லாம் வேண்டாம். எனக்கு வடக்கு தெருவின் நண்பர்களிடம் நல்ல தொடர்பு இருந்ததால் போட்டி கேட்கும் தூதுவராக அடியேனை நியமித்தார்கள். மொத்த வடக்கு தெருவே, அத்தெருவின் நடுவில் குளக்கரையின் ஓரமாக இருக்கும் கோதண்டராமர் கோவிலின் பக்கத்தில், காற்று வீசும் வேப்பமர நிழலில் இருக்கும் மதிலில் நிறைந்து இருக்கும். படித்துறைக்கு குளிக்க இறங்கும் இடத்தில் இருக்கும் மதிலில் குழந்தைகள், சிறியவர், பெரியவர் என "ஜே ஜே" என்று எப்பவும் ஆட்கள் இருப்பார்கள். மிக பயங்கர கத்திரி நாட்களில் கூட 'சிலு சிலு' என குளத்தின் மேலிருந்து வீசும் காற்றிர்காகவே வீட்டை துறந்து மதிலில் குடியேறலாம் என்ற எண்ணம் வரும். வானப்ப்ரஸ்த்தம் போல் மதில்ப்ரஸ்தம். ஒரு சந்தியாகாலத்தில் அயல் நாட்டு தூதுவராக என் இரு சக்கர வாகனமேறி வடக்குத்தெரு சென்று எங்களுடன் மாட்ச் விளையாடுவதற்கு அழைத்தேன். பாபு கேட்டான்
"பதினோரு பேர் இருக்காங்களா?" என்று நக்கலாக
"எட்டு பேர் இருக்கோம், மீதி திருமஞ்சன வீதி பசங்க"
பாபு, "எங்கே ஆடலாம்" என்றான்.
"உங்க கிரௌன்ட்லயே வச்சுக்கலாம்" என்றேன். அப்போது அதுதான் மெல்போர்ன் கிரவுண்டு எங்களுக்கு. அதில் ஆட எங்கள் எல்லோருக்கும் ரொம்ப ஆசை.
"சரி, சண்டே கார்த்தால எட்டு மணி"
என்று பாபு ஃபிக்ஸ் செய்தான்.
அவர்கள் ஹெச்சிசி நார்த் ஆகையால், நாங்கள் ஹெச்சிசி ஈஸ்ட் ஆனோம். ஞாயிறு காலை 8.00 மணியளவில் ஆட்டம் தொடங்கியது. ஈஸ்ட் கேப்டனாகிய நான் டாஸ் கெலித்து, நார்த் கேப்டன் பாபுவிடம் மட்டை பிடிப்பதாக அறிவித்தேன். நாங்கள் விளையாடும் ரப்பர் பந்தை விட ஒரு படி உசத்தியான பழைய டென்னிஸ் பந்து மாட்ச். அது ஒரு இருபது ஓவர் ஆட்டம். நாங்கள் அப்போதே ஆடிய 20-20. ஆனந்தும் அவன் தம்பியும் ஸ்டீவ், மார்க் வாக் சகோதரர்களைப் போல் களமிறங்கினர். சுதர்ஷன சரோஜாதேவியின் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் பந்தை வாரி ஸ்ரீதர் கையில் கொடுத்து ஆனந்த் வெளியேறினான். பத்து பொன் முட்டை போடும் "தங்க வாத்து" ஆனான். சுதர்ஷன் பல பேரை வீழ்த்தியதின் பின்னணியை ஆராய்ந்ததில் அவனுடைய ச.தேவி ஓட்டத்தில் தான் என்ற உண்மை வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. ஒற்றை இலக்கத்திலேயே ஐந்து பேர் அவுட்டானார்கள். நானும் கோபியும் சேர்ந்து முப்பத்து ஐந்து ரன்கள் சேர்த்தோம். இடையில் கோபி வானம் கிளப்பிய பந்தை தட்டி தட்டி தவற விட்ட ஸ்ரீதர் மொக்கு இடம் இருந்து "ராமர் கோவிலில் இருந்து உண்ட கட்டி வாங்கத்தான் லாயக்கு" என்ற உயர்ந்த பாராட்டை பெற்றான்.
பதினைந்து ஓவர்களில் நாற்பத்தி சொச்சம் ரன்களுக்கு அணியின் இன்னிங்சை முடித்துக்கொண்டோம்.
அடுத்து ஆடிய அவர்கள் அடித்து ஆட முற்பட்டு, நானும் பத்துவும் பந்து வீசியதில் திணறினார்கள். அவ்வப்போது திருஞானம் ஒன்றிரண்டு ரன்கள் ஸ்கோர் புக்கில் அவர்கள் அடிக்காதபோதே ஏற்றியும் முப்பத்தி சொச்சம் ரன்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்கள். ஆட்ட நாயகனாக கோபி தேர்ந்தெடுக்கப்பட்டான். ஸ்கோர் புக்கில் இரு கேப்டன்களும் இரு நாட்டு அதிபர்களின் ஒப்பந்தம் போல கையெழுத்திட்டோம். தோற்றவர்கள் கையெழுத்திடுவது மிகவும் அவமானகரமான செயல். "இதுக்கு பேசாம நாண்டுகிட்டு செத்துபோலாம்" என்று வடகரை டீமை பற்றி சட்டை அணியாத துரோணர் கருத்து தெரிவித்தார். மூக்கையும் வாயையும் ஒருகையால் பொத்திக்கொண்டு நார்த் கேப்டன் பாபு கையெழுத்திட்டான். நார்த் போஷகர் மொக்கு என்கிற மோகன் அவர்களுடைய தோல்விக்காக அவர்களை 'தெரு பிரஷ்ட்டம்' செய்துவிடும் நிலைக்கு போய் "எல்லோரும் உண்ட கட்டி வாங்கத்தான் லாயக்கு" என்று குறைந்தது 108 தடவை சொல்லி விரட்டினார். வெறுப்பேற்றினார். வெற்றிக் களிப்பில், ரோஹினி வீட்டு கொள்ளையில் உள்ள மாமரத்தில் மாங்காய் அடித்து, ரோஹினி அம்மா, கோமா மாமியிடம் திட்டு வாங்கி கொண்டு இருக்கும் போது தோல்வியை கண்டு துவளாத பாபு திரும்பவும் வந்து அன்று மாலை மூன்று மணிக்கு ஒரு மாட்ச் கேட்டான். மூன்று மணி மாட்சிலும் நார்த் தோல்வியை தழுவியது.
அன்று இரவு ஏழு மணி அளவில், சேது பவா சத்திரம் எதிரே, குளக்கரை ஓரமாக, கிழக்கும் வடக்கும் சந்திக்கும் மூலையில் பிள்ளையார் கோவில் ஒன்று உண்டு. அன்றைக்கு சதுர்த்தி. மேல்கரை சதாசிவ மாமா வீட்டு மண்டகப்படி. சுண்டலும், சர்க்கரைப் பொங்கலுமாக பிள்ளையாரை ஏகத்திற்கு குஷிப்படுத்திக்கொண்டிருந்தார். அவருடைய மாட்டுப்பெண் மடிசார் கட்டி எல்லோரையும் கூப்பிட்டு கூப்பிட்டு ப்ரசாதம் வாரி வழங்கிக்கொண்டிருந்தாள். வடகரை ஆட்ட நாயகர்கள் வந்தார்கள். நாங்களும் அங்கே பிள்ளையார் பார்த்து சுண்டல் வாங்கி திங்க சென்றபோது, மொக்கின் ஆலோசனையின் பேரில் பாபு என்னிடம் வந்து
"நம்ப ரெண்டு டீமும் ஒன்னாயிடலாமா?" என்றான்.
"பா..ம்.." என்ற காதைக் கிழிக்கும் சத்தத்துடன் சாலையில் சென்ற காரினால் அனைவரின் காதும் டமாரமானதால்
"என்ன?" என்று இரைந்தேன்.
"ஹெச்சிசி நார்த்ம் ஈஸ்ட்ம் சேர்ந்து ஹெச்சிசி ஆயிடலாமா?" என்று கைலாயத்தில் இருக்கும் பிள்ளையாருக்கே கேட்கும்படி சத்தமிட்டான் பாபு.
"ம்" என்று மணி பட வசனமாய் அடக்கமாக நான்.
பக்கத்தில் நின்ற ஆனந்த் ஆவலுடன் கேட்டான்
"என்னடா?"
"ஹெச்.சி.சி" என்றேன் நான்.ஹரித்ராநதி கிரிக்கெட் கிளப் என்ற யார்க்க்ஷைர் கவுண்டி டீமிற்கு நிகரான ஒன்று அங்கே உதயமானது. ஊரையே கலக்கிய ஒரு டீம்.
பக்கத்தில் நின்ற ஆனந்த் ஆவலுடன் கேட்டான்
"என்னடா?"
"ஹெச்.சி.சி" என்றேன் நான்.ஹரித்ராநதி கிரிக்கெட் கிளப் என்ற யார்க்க்ஷைர் கவுண்டி டீமிற்கு நிகரான ஒன்று அங்கே உதயமானது. ஊரையே கலக்கிய ஒரு டீம்.
கிழக்கும், வடக்கும் ஈசான்ய மூலையில் இணைந்தது.
-
பதிவுக் குறிப்பு: ஏகோபித்த ஆதரவினால் (நாமளே சொல்லிக்கவேண்டியது தானே) இரவு கொட்ட கொட்ட முழிந்திருந்து நடு நிசி தாண்டி அடித்து முடித்தேன். காலையில் வலையேற்றுகிறேன். ஒரு இன்ச் அளவிற்கு பெரிய ஆணி எல்லாம் ஆபிஸில் ரெடியா இருக்கு. போய் பார்க்கறேன். சிலசமயம் அடிக்கனுமா கழட்டனுமான்னு கூட சொல்ல மாட்டேங்கறாங்கப்பா!! என்ன கொடுமை!
-
பதிவுக் குறிப்பு: ஏகோபித்த ஆதரவினால் (நாமளே சொல்லிக்கவேண்டியது தானே) இரவு கொட்ட கொட்ட முழிந்திருந்து நடு நிசி தாண்டி அடித்து முடித்தேன். காலையில் வலையேற்றுகிறேன். ஒரு இன்ச் அளவிற்கு பெரிய ஆணி எல்லாம் ஆபிஸில் ரெடியா இருக்கு. போய் பார்க்கறேன். சிலசமயம் அடிக்கனுமா கழட்டனுமான்னு கூட சொல்ல மாட்டேங்கறாங்கப்பா!! என்ன கொடுமை!
-
53 comments:
ஒரு இனிய உதயம் ஹெச் சி சி..
ம் அண்ணா... கிளப்புங்கள்..
அப்போ இனிமே ஒன் டே மேட்ச்லாம் வரும் அப்படித்தான?
ரசிக ரசிகைகளுடன் இனிமேல் தினம் தினம் மேட்ச் தான் பாலாஜி தம்பி. ;-)
உங்களின் கிரிக்கெட் அனுபவங்களை ரசித்தேன். 20-20 போல விறுவிறுப்பான பதிவு. தொடருங்கள், எல்லா ஆணியையும் பிடுங்கிவிட்டு :)
@வெங்கட் நாகராஜ்
நிச்சயமாக. இனிமேல் தான் அதிரடி ஆரம்பம். ;-) ;-)
rommba naalachi pamaniyaru shutters paathu..
paathachi..
paathachi..
sathish..
still chennai.
பார்த்தாச்சா வெரி குட் சதீஷ். இன்னும் நிறைய வரும் இந்த வலைப்பூவில். ;-)
நகைச்சுவைதோரணம் அழகா இருக்கு, தொடருங்கள்.
நன்றி சை.கொ.ப. மாலையா தொடுத்துக்கிட்டு இருக்கேன். ;-)
காகாஜி பதிவு.. வெயிட்டிங்..
@புவனேஸ்வரி ராமநாதன்
வந்துகிட்டே இருக்கு மேடம். ஆனா இந்த ஆணிதான்.... ... ... ... ;-)
//
1) அதிர்ச்சி தோல்வி அடைந்தார்கள்.
2) மூன்று மணி மாட்சிலும் நார்த் தோல்வியை தழுவியது.//
உண்மையும் கற்பனையும் கலந்ததோ ?
நல்ல எழுதற.. தொடர்ந்து சொல்லு....
@மாதவன்
அன்று அவர்கள் தோற்றது சத்தியமான உண்மை. நிஜம். ட்ருத். மெய்யாலுமே பா ;-) ;-)
அண்ணே பின்றீங்க.. பாராட்டுக்கள் ...
@கே.ஆர்.பி செந்தில்
நன்றி. எங்கே ரெண்டு நாளா காணோம். ;-)
//ஏகோபித்த ஆதரவினால் (நாமளே சொல்லிக்கவேண்டியது தானே)....//
கவலையே படாதிங்க. எங்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.
:)
நன்றி இளங்கோ ;-)
நல்ல பகிர்வு. ரசித்தேன்.
sir cover other parts of mannargudi also.
you are always talking about haridhara nadhi and the streets arround rajagopala swami temple. pandhaladi, first street, second street, periya kadai vedhi, national school..Hmm so many other things also there naa
அனுபவங்கள் அற்புதம்! அருமை! நன்றி!
Ennakku nangu therintha idangal..
neega mele sonna ella idangalum...
naan padithathu sinna convent la than 1 to 5th.
then NHSS...
good..continue pls...
SATHISH...
நயம்.
>>>திருவிழா கூட்டத்தில் பெண்ணுக்கு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்து பார்த்து பாதுகாத்து பார்த்துக்கொண்டே இருப்பது போல
க்ரிகெட் பேட் பந்து வாங்க வசதியில்லாமல் மரக்கட்டையை அரிவாளால் வெட்டி துணி துவைக்கும் கல்லில் இழைத்து, சைக்கிள் ட்யூப் துண்டுகளால் பந்து பிணைத்து ஆடிய டீம்கள் தெரியும். உங்க எச்சிசி பெரிய அளவில் ஸ்ட்ரெடிஜிக் மெர்ஜராக இருக்கும் போலிருக்கிறதே?
//சிலசமயம் அடிக்கனுமா கழட்டனுமான்னு//
:) ஐயோ பாவம்! சில சமயம் அத்த கண்டுபிடிகிறது தான் வேலையே. இல்லையா?
~நவன்
நன்றி கோவை2தில்லி ;-)
Dear Anaani,
I will be covering entire Mannargudi from Melappaalam to Keelappaalam. Dont worry.
நன்றி எஸ்.கே ;-)
சின்ன கான்வென்ட்ல எந்த வருஷம் சதீஷ்? நேஷனல்ல எந்த வருஷம்?
அப்பாஜி! நாங்க கூட பால் வாங்க காசு இல்லைனா டுயூப் பால் கிரிக்கெட் விளையாண்டிருக்கோம். ;-)
சரியாச் சொன்னீங்க நவன். ;-)
நானும் சின்ன கான்வென்ட்ல படிச்சிருக்கேன். ரெண்டாம் வகுப்பு மட்டும் - 1986. ஒத்தை தெரு பக்கம் எப்போ வருவீங்க? தொடர் சூப்பரா போகுது.
பாலாஜி
டேய் படுபாவி.. மானத்தை வாங்காதே..!
இருந்தாலும் நான் உன் ரசிகன்டா.. பெரிய கோவிலில் 'அவிங்க'ளோட விளையாடும்போது, ஆஃப் ஸ்டம்புக்கு அப்பால் விழும் பந்தை வாடகை சைக்கிள் எடுத்துப்போய் அள்ளி ஃபைன் லெக்குல ப்ருந்தாவனத்துக்குள்ள போட்டு 2 ரன் 2 ரன்னா அள்ளுவியே மறக்கமுடியுமா,,?
கொஞ்சம் ரீல் சுத்தினாலும், சுவையாத்தான் சுத்தியிருக்கே.. முரளி ( அப்புக்குட்டி)யை விட்டுட்டீங்களே சார்..
அப்புறம், அந்த அம்மாப்பேட்டை மேட்ச் பற்றி எழுதுங்க.. முதல் மேட்ச்ல 5 விக்கெட் எடுத்து அந்த ஊர் ஹீரோ ஆனது.. அடுத்த மேட்ச்ல உங்களுக்கு நீர்க்கடுப்பு வந்து, அதுக்கு அந்த ஊர் முச்சூடும் சேர்ந்து வைத்தியம் பார்த்ததையெல்லாம் மறக்காமக் குறிப்பிடுங்க..
dear rvs
nichayamaga ekobitha aadaravu undu
summa pukundu vilaiyadungo
nalai paarkkalam
balu vellore
பொன்னான காலங்களின்,இனிமையான நினைவுகள்..
உங்களது எழுத்துநடை சுஜாதா ஸ்டைலில் இருக்கிறது... வாழ்த்துக்கள்..
கிரிக்கெட் பள்ளி வயதில் தவிர்க்க முடியா சுகம் . சரியான நகைச்சுவை ஆரவாரம் இந்த பதிவு.
எனது அரக்குமட்டை - துணி பந்து நாட்களை ஞாபக படுத்திவிட்டீர்கள்.
(அரக்கு மட்டை - தென்னை மட்டையில் அழகாக வெட்டப்படும் மட்டை )
சுஜாதாவின் ஸ்ரீரங்கம் நினைவுகள் அளவுக்கு சிறப்பாக உள்ளது உங்கள் ஹரித்ராநதி நினைவுகள்! தொடருங்கள்!
திரு. மன்னார்குடி. (ஊர் பேருக்கு திரு போட்டா நல்லாத்தான் இருக்கு. சின்ன கான்வென்ட்ல நீங்கள் நம்பிள்க்கு ரொம்ப ஜுனியர்.
தமிழ் ஜோக்ஸ் ARR யாரு? நகைச்சுவை-அரசர் யாரு? ரெண்டுபேரும் வேறவேறையா?
அப்பு இல்லாமே மன்னார்குடி நினைவுகள் நிறைவடையுமா? அண்ணே மேலவீதி ரெண்டு ரூபா பால் கிரிக்கெட் மாட்ச் வர்ணனைகள் நிச்சயம் உண்டு! இனிமேல் தான் அதிரடி ஆரம்பம். ;-)
@balutanjore
நன்றி... இன்னும் சரவெடி நிறைய இருக்கு. தீபாவளி வேற நெருங்கிகிட்டு இருக்கு.;-)
@மோகன்ஜி
புரியுது. ஏகப்பட்ட வேலையில் இருக்குக்கீங்கன்னு. ஒற்றை வரி கமென்ட்..... சரி..சரி.. ;-)
@philosophy prabhakaran
நண்பரே நன்றி. வாத்தியார் கூட கம்பேர் பண்ணாதீங்க. மலை எங்கே மடு எங்கே. அடிக்கடி வந்து போங்க. நன்றி ;-);-)
பத்துஜி நாங்களும் நிறைய நேரங்களில் அதுபோல் விளையாடி இருக்கிறோம். ரொம்ப எழுதினால் பதிவின் நீளம் கூடும் என்பதால் நிறைய "எடிட்" செய்ய வேண்டியதாகிறது. ஏகப்பட்ட சிறு சிறு நிகழ்வுகள் இன்னும் மூளையை அடைத்தபடி இருக்கிறது. பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகும் என்று... நன்றி ;-)
@Suresh Ram
நன்றி நண்பரே! உங்கள் வாழ்த்துக்கு உகந்தவனாக என்னை உயர்த்திப்பதர்க்கு முயற்ச்சிக்கிறேன். ;-)
கொஞ்ச நாளா உங்க வலைப்பக்கத்தைப் படிக்கலை.
அதுக்குள்ள மன்னார்குடியப் பத்தி நாலு பதிவு போட்டுடீங்களே?
நம்ம ஊராச்சே? தலைப்பைப் பாத்தவுடனே குதூகலம் தொற்றிக்கிடுச்சு.அதே குதூகலத்தோட நாலு பதிவையும் படிச்சிட்டேன். பெரிய கோயில்னு சொன்னதும் ராஜகோபால்சாமியும், செங்கமலத் தாயரம்மாவும் கண் முன்னாடி வந்து நிக்கறாங்க.
ஹரித்ராநதி , காசி விஸ்வநாதர் கோயில்னு மலரும் நினைவுகள் ல
முழ்கடிச்சுட்டீங்க.மன்னார்குடி முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட குளங்கள் இருந்ததுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க.ஆனா இப்போ அது எல்லாமே கட்டடங்களா மாறிட்டு வருது. காசி விஸ்வநாதர் கோயிலை கைலாச நாதர் கோயில்னும் சொல்லுவாங்க தானே?ரொம்ப சந்தோஷமாக இருக்கு உங்க பதிவுகளைப்படித்தது.
தொடர்ந்து மன்னார்குடி டேஸ்-சை எழுதுங்கள்.ஆர்வமா இருக்கு.வாழ்த்துக்கள்.
மன்னார்குடிக்காரங்க எல்லாம் ஒன்னு சேர்ந்தாச்சு போல?
கிரிக்கெட் எப்பவுமே எவர் க்ரீன் பதிவு...!!
ஆமாம் ஸ்ரீராம். எவர் ப்ரைட் ஆல்சோ... ;-)
@ஜிஜி
தினமும் வாங்க அம்மணி.
கைலாசநாதர் கோயில் புதுத் தெரு கோடியில் உள்ளது. காசி விஸ்வநாதர் எங்கள் தெரு கோயில்.
இன்னும் பந்தலடி, தாமரைக்குளம், தேரடி, கோபாலசமுத்ரம் தெற்குவீதி, மேலவீதி, ஒத்தை தெரு, முதல் தெரு, ரெண்டாம் தெரு, புதுத் தெரு, ஹவுசிங் யூனிட், அசேஷம், மீன் மார்கெட், பெரியக் கடைத் தெரு, கீழப்பாலம், தஞ்சாவூர் ரோடு, மூணாம் தெரு, வாணக்கார தெரு, விளக்காரத் தெரு, திருமஞ்சன வீதி, உப்புக்கார தெரு, பிருந்தாவன் நகர், கான்வென்ட் ரோடு, பாலக்ருஷ்ணன் நகர், பூக்கொல்லை, வ.வு.சி ரோடு, சந்தைப்பேட்டை, நாலாந் தெரு, லக்ஷ்மி தியேட்டர் ரோடு,........ நிறையா இருக்கு.....
யப்பா அம்பி திருப்பாற்கடல் மிஸ்ஸிங்க் ...அங்க எல்லாம் சுத்தலாயா பக்றூதீன் நினைப்பு இருக்கா
பாய் ஞாபகம் இல்லாமலா? ;-) கடைசியாக ட்ராவல்ஸ் வைத்ததாக தகவல். கம்மாளத் தெருவின் அந்த கடைசியில் வீடு. மூளை இன்னும் ஃப்ரெஷ்ஷா நினைவுகளை தேக்கி வச்சுருக்கே..
பக்ருதீன் டிராயர் போட்ட அழகே தனி இல்லையா? சிராஜுதீன் கூடத் தான் ஞாபகம் இருக்கு.
அம்பி என்று விளிக்கும் தம்பி யார்? ;-)
அன்பு வெங்கட்
நிறைய விஷயங்கள் மாறி இருக்கு ..........
அதிலொன்று ......... முதலில் பேட் செய்தது நங்கள் தான் ( ஹெச் சி சி நார்த் ) நானும் , ஆர். ஸ்ரீராமும் தான் ஒபெனிங்
// A.R.RAJAGOPALAN said...
"அன்பு வெங்கட்
நிறைய விஷயங்கள் மாறி இருக்கு ........"//
ஆர்.வீ.எஸ்.எம்... கொபிலி சொல்வது உங்க காதுல விழுதா.. ?
@ கொபிலி.. --- நீங்கள் சொல்லிய 'நிறைய' என்பதில் -- அந்த ஆட்டத்தின் வெற்றியும் அடங்குமோ ?
//Anonymous said...
யப்பா அம்பி திருப்பாற்கடல் மிஸ்ஸிங்க் ...அங்க எல்லாம் சுத்தலாயா பக்றூதீன் நினைப்பு இருக்கா //
பக்ருதீன் அலி அஹமத் ?
எனக்கு நினைவிருக்கிறது..
அந்த பெயரைப் கேட்டு, வகுப்பில் தமிழாசிரியர் முன்னால் ஜனாதிபதியை நினைகூர்ந்ததாகவும் நினைவு..
Post a Comment