Wednesday, October 13, 2010

தொலைநோக்குப் பார்வை

poweroftenலிகோத்பவனான சிவனாரின் அடிமுடி காண ப்ரம்மா அன்னப்பறவையாகவும் விஷ்ணு பன்றி வடிவத்திலும் உருமாறி புறப்பட்டார்களாம். படாதபாடுபட்டும் இருவருக்கும் வெற்றி கிட்டவில்லை.  அடிமுடி காண முடியவில்லை. ஆனால் இந்த கிராபிக்ஸ் யுகத்தில் ப்ரம்சும் விஷியும் அனிமேஷன் கொண்டு சிவனின் அடிமுடித் தரிசனம் பெற்றுவிடலாம். சில நாட்களுக்கு முன் பூமியை அனிமேஷனில் நிறுத்திப் பார்த்து என்னவெல்லாம் நிகழும் என்று வெளிநாட்டவர் ஒருவர் மல்லாக்க படுத்து ஆராய்ச்சி பண்ணிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தேன். அதுபோல இதுவும் கொஞ்சம் சயின்ஸ். இப்ப விஷயம் என்னான்னா பூமியிலேர்ந்து பத்தின் மடங்காக மேலே மேலே மேலே போய்கிட்டே இருந்தா என்ன வரும். என்ன தெரியும். இரண்டு பத்தின் மடங்கா வீட்டு மொட்டை மாடி மேலே ஏறி நின்னா பக்கத்து வீட்டு பாத்ரூம் தெரியும் அப்படிங்கற லெவெல்ல நாம யோசிச்சாலும் சில சிந்தனாசிற்பிகள் மொட்டை மாடிக்கு மேலே யோசிக்கிறார்கள்.

நிறைய இடங்கள்ள நாம கொசுவத்தி சுத்திதான் பார்த்திருக்கோம். இங்க கட்டம் கட்டமா கட்டம் கட்டி அடுத்ததடுத்த கட்டத்திற்கு மேல கொண்டு போகிறார்கள். சிகாகோல ரெஸ்ட்டுக்கு வானத்தை பார்த்து படுத்திருக்கும் ஒருவரை காண்பித்து ஒவ்வொரு பத்து செகண்டிர்க்கும் மேன் மேலே போய் நம்முடைய அண்ட பகிரண்டம் எல்லாம் தாண்டி, பால் வீதி தாண்டி, மோர் வீதி இன்னும் மோர் போய்.. போய்... போய்க்கொண்டே இருக்கிறார்கள். கடைசியாக துக்குணூண்டு பென் டார்ச் வெளிச்ச புள்ளியாய் நம்ம நட்சத்திர மண்டலம் தெரியுது. இந்திரன், நாரதர் மற்றும் இதர தேவாதி தேவர்கள் தெரியலை.  முடிந்தால் அதையும் காண்பித்திருக்கலாம். போற வழிக்கு புண்ணியம். அதுக்கு மேலே போக வேண்டாம்ன்னு முடிவு பண்ணி ரோலர் கோஸ்டேர்ல அடிவயிறு கலகலக்க சரேல்ன்னு இறங்கறா மாதிரி நேரே கீழ பூமிக்கு கொண்டு வந்து படுத்துக்கொண்டிருந்த மனுஷனின் கைக்குள்ள படம் புடிச்சு காட்றாங்க. அங்கேயும் குடைஞ்சு குடைஞ்சு உள்ள போய் வெள்ளை ரத்த அணுக்கள் உள்ளே இருக்கும் டி.என்.ஏவை அடைந்து அதற்குள் இருக்கும் கார்பன் மூலத்தில் குடிகொண்டுள்ள ப்ரோடான் வரைக்கும் செல்கிறார்கள். உங்கள் ஆயாவிற்கும் ஐஸுக்கும் இது ஒரே மாதிரி தான் இருக்குமாம்.



இவ்ளோ தூரம் காமிச்சவங்க அப்படியே "காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை" அப்படின்னு எந்திரன்ல சூப்பர் ஸ்டார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருக்கலாம்ல.

-
-

29 comments:

இளங்கோ said...

//இரண்டு பத்தின் மடங்கா வீட்டு மொட்டை மாடி மேலே ஏறி நின்னா பக்கத்து வீட்டு பாத்ரூம் தெரியும் அப்படிங்கற லெவெல்ல நாம யோசிச்சாலும் சில சிந்தனாசிற்பிகள் மொட்டை மாடிக்கு மேலே யோசிக்கிறார்கள்.//
உண்மைய வெளிய சொல்லக் கூடாதுங்க :).

பதிவு சூப்பர்.

RVS said...

சரி. இனி உண்மையையை வெளிய சொல்லலை. முதல் கருத்துக்கு நன்றி இளங்கோ ;-)

இளங்கோ said...

//உங்கள் ஆயாவிற்கும் ஐஸுக்கும் இது ஒரே மாதிரி தான் இருக்குமாம்.//
இப்போ ஆயாவா ஐசுங்கரிங்களா, இல்ல ஐயுசுவ ஆயாங்கரிங்களா?
ஹஹஹ்ஹா :)

RVS said...

ஐசு ஆயாவானாலும் இப்படித்தான் இருக்குமாம் இளங்கோ. ;-)

பொன் மாலை பொழுது said...

என்ன ஓய்..... நம்ம பக்கம் ஆளையே காணோம்?
ஆத்துக்காரி அம்மா வூட்டுக்கு போயிட்ட அபடித்தான்கணம் இருக்கும்.
வேல அதிகமாத்தான் இருக்கும் ஓய். செத்த வந்துட்டு சட்டுன்னு போயிடாம் காணம்.
வரச்சே நல்ல ஸ்ட்ராங்கா பில்டர் காப்பி போட்டு கொண்டுவாரும் அய்யா.
உம்ம வீட்டு காப்பின ..ஆஹா.. பிரமாதமொனோ!!

RVS said...

ப்லூம் பாக்ஸ் ஒரு ஆர்டர் கொடுத்திருக்கேனே கக்கு பார்க்கலை... ;-)

பொன் மாலை பொழுது said...

Its a Good post R V S.

RVS said...

Thanks Kakku

பொன் மாலை பொழுது said...

//உங்கள் ஆயாவிற்கும் ஐஸுக்கும் இது ஒரே மாதிரி தான் இருக்குமாம் //.

அட எங்க ஆயா பேரும் ஐசுதான் கிறேன். அது எப்டி இவருக்கு தெரியும்?

பொன் மாலை பொழுது said...

ஆஹா மாட்டிகிட்டாரு. இன்னா ஆணி நொம்ப இல்லியா கண்ணு?

பொன் மாலை பொழுது said...

You will enjoy a nice song there.

RVS said...

ஒரு ஆணி புடுங்குறதுக்கும் மறு ஆணி புடுங்குறதுக்கும் மத்தியில கிடைக்கற டயத்துல நாங்க கமெண்டு அடிப்போம். அவ்வளவு தெறம எங்களுக்கு உண்டு.. ஹுக்கும்.... கக்கு..

Anonymous said...

அண்ணே கலக்கல் வீடியோ..
இவ்ளோ பெரிய அண்டத்துல நாமெல்லாம் ஒரு புள்ளி அளவு கூட இல்லன்னு நினைக்கும் போது, ஏதேதோ எண்ணம் ஓடுது உள்ள...
சூப்பர்

Anonymous said...

அண்ணே நான் போட்ட கமெண்டு காணோம் :(

RVS said...

ஆமாம் பாலாஜி தம்பி. "அணுவிற்கும் அணு" என்று நாயன்மாரோ ஆழ்வாரோ பாடியதா நினைவடுக்குகளில் எங்கயோ இருக்கு. வெளிய வர மாட்டேங்குது.

மோகன்ஜி said...

அண்ட முதலாம் அனைத்தையும் உட்கொண்டு
கொண்டத்தைக் கொள்ளாதே உந்தீபற
குறைவற்ற செல்வமென்று உந்தீபற
(திருவுந்தியார் )

(இவ்வுலகம் முதலாக அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் இப்பிரபஞ்சத்தைக் கூட மெய் என்று கொள்ளக் கூடாது.அப்படி இருப்பதே குறைவற்ற செல்வம்.)

பால்வீதி எனும் மில்கி வேயை சூரியன் ஒரு சுற்று வர இருபத்திரெண்டரைகோடி வருஷம் ஆகுமாம்..

'இதெல்லாமே பொய் பிரதர்'ன்னு நாயன்மார்கள் ஆழ்வார்கலெல்லாம் சொல்லிட்டு போயிருக்காங்க !

வீடியோ சுவாரஸ்யமாக இருந்தது ஆர்.வீ.எஸ்!

Chitra said...

இவ்ளோ தூரம் காமிச்சவங்க அப்படியே "காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை" அப்படின்னு எந்திரன்ல சூப்பர் ஸ்டார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருக்கலாம்ல.

......ஹா,ஹா,ஹா,ஹா,.....சரியா போச்சு!

பொன் மாலை பொழுது said...

தேடி தேடி ஒரு நல்ல இந்தி மெலடி பாட்ட போட்டு வெச்சா....காதுல ஈயத்த காய்ச்சி ஊத்திகிட்டு வருதுங்க இந்த புள்ளைங்க, எல்லாம் கலி காலம்டா சாமி!

RVS said...

யாரு சார் இந்த திருவுந்தியார்? இதுவரைக்கும் கேள்விப்படாத பேரா இருக்குதே.

RVS said...

கேள்வி கரெக்டா இல்லையா சித்ரா. ;-)

RVS said...

ஜூலி பாட்டு இப்பதான் கேட்டேன்... சாரி கக்கு.. மெலடி அருமை. ஆபிஸ்ல ஸ்பீக்கர் ஆஃப். தலைய மேல தூக்கி பாக்கலைப்பா... ;-)

Madhavan Srinivasagopalan said...

//திருவுந்தியார்?//
"பொன்னியின் செல்வன்" - காரக்டறு போல இருந்தாலும்.. அப்படி ஒரு காரக்டறு பொன்னியில் செல்வன்ல இல்லியே..

confused ?

பத்மநாபன் said...

எனக்கு மிகவும் பிடித்த சப்ஜக்ட் இது..... நுண்ணோக்கியிலும் தொலைநோக்கியிலும் அணுவின் குறுஅணு முதல், அகிலாண்ட கோடி பிரமாண்ட அண்டம் வரை அழைத்து சென்று வந்ததற்கு மிக்க நன்றி...

வாத்தியார் வேறு ஒரு தலைப்பில் ஏன் என்ற அதி ஆச்சர்யம் நிச்சயம் மிச்சம் இருக்கிறது என்று முடித்திருப்பார்...

பிரபஞ்சத்தை பொறுத்தவரை எப்படி எனும் ஆச்சர்யம் நம்மை பிரமிக்க வைத்துக்கொண்டேயிருக்கிறது.....

பத்தாங்கிளாஸில் படித்த முதல் செய்யுளில் வரும் வரியான `` அலகிலா விளையாட்டுடையவர்....நினைவுக்கு வருகிறது....

RVS said...

பத்துஜி வாத்தியார் இந்த மாதிரி விஷயங்களை பிரிச்சு மேஞ்சிருப்பார். ;-)
நம்ம டார்ச் லைட் தூரத்துக்கு போனதுக்கப்புறமும் கோடி ஸூர்ய ப்ரஹாசமாக அலகில்லாமல் எங்கும் நிறை ப்ரம்மம் இருப்பதை எந்த டெக்னாலஜியிலும் காட்ட முடியாது.

RVS said...

மாதவா! திருவுந்தியார் பற்றி முத்தமிழ் அறிஞர் மோகன்ஜி தான் திருவாய் மலர்ந்தருளனும். ;-) பொறுத்திருந்து பார்ப்போம்.

விஷாலி said...

என்னமோ போங்க உலகம் ரொம்ப சின்னதா போகுதோ

RVS said...

ஆமாங்க ம.நண்பரே! வெரி ஸ்மால் வேர்ல்ட்டுங்க ;-) ;-)

மோகன்ஜி said...

'திருவுந்தியார்' என்பது பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பட்ட சைவ சித்தாந்த நூலாகும். இவ்வகையைத் தாழிசைப் பாடல்கள் என்பர். கேள்வியும் பதிலுமாய்'உந்தி' எனும் விளையாட்டை விளையாடும் சிறுமிகள் ஒருவருக்கொருவர் கேட்டு கொள்வது போல் அமைந்த பாடல்கள்.(கால்களை உந்திய படி கைகளை இறக்கைகள் போல் விரித்து பறப்பது போன்ற பாவனையுடன் 'உந்தி பற'என்றவாறு முடிக்கும் கேள்வி பதில் விளையாட்டு )இதை எழுதியவர் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார்.

கொஞ்சம் அறுத்துட்டேனோ? ஆனாலும் அழகான பாடல்கள் ஆர் .வீ.எஸ்.
மாதவன் சார்,பொன்னியின் செல்வனில் திருவுந்தியார் என்ற கதாபாத்திரம் ஏதும் கிடையாது.
அன்புடன்
மோகன்ஜி,ஹைதராபாத்

RVS said...

அருமை அருமை மோகன்ஜி. இதுவரைக்கும் நான் கேள்வி கூட பட்டது கிடையாது. அட்டகாசமான பாடல். இந்த புக்கெல்லாம் எங்க கிடைக்கும் மோகன்ஜி!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails