Saturday, October 9, 2010

அழகிய தீயே

ஊர்ல சொக்கப்பானை கொளுத்தும் போது பக்கத்துலயே போக முடியாது. சட் பட் பட்டுன்னு வெடிச்சு சிதறும். கை கால்ல பட்டுச்சுன்னா குளிக்கும் போதும் சோப்பு போடும் போதும் திகுதிகுன்னு எரியும்.ஒரு பத்தடி தள்ளி நின்னு தான் வேடிக்கை பார்ப்போம். சில சமயம் இந்த கல்யாண சமையலில் ஈடுபடும் நளன்களைப் பார்த்து "இப்படி அடுப்பில் வெந்து சாகிறார்களே" என்று வருத்தப் பட்டதும் உண்டு. கரண்டி பிடித்த அன்னபூரனர்கள் அநேகம் பேர் சாதத்தோடு அவர்களும் வேகிறார்கள். எங்கேயோ லட்சக்கணக்கான கி.மீ தொலைவிலிருந்து  சூரியப் பந்து பத்தி எரியறது இங்க எல்லாரையும்( ஆண்கள் மட்டும்) சட்டையையும் கழட்டிட்டு ஆத்துக்குள்ளேயே குந்தி இருக்கச் செய்யுது.

என்னதான் "தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" என்று முண்டாசு மீசை முறுக்கி பாடினாலும், ஹோமத்தீ தேவர்களின் வாய் என்றும் அதன் முலமாக நாம் ஹோமத்தில் ஆஹுதி இடுவது அவர்களைப் போய் சேருகின்றது என்று ரிக் வேதம் கூறினாலும், அக்னி கொழுந்து விட்டு எரியும்போது அதனை அண்டுவது அவ்வளவு சுலபமில்லை.வள்ளுவர் கூட "அலகாது அணுகாது தீக்காய்வார்" போல வேந்தர்களிடத்தில் பழகனும் அப்படின்னு தான் சொல்லியிருக்கார்.

ஆனால் இங்க ஒரு ஆள் எரிமலை பக்கத்துல போய் நின்று படம் பிடிக்கிறேன் பேர்வழி என்று நிற்கிறார். "ஏ... அழகிய தீயே.." என்று பக்கத்தில் நின்று பாடுகிறார். இதைவிட பக்கத்தில் ஒரு எரிமலைக் குழம்பை படம் பிடிக்க முடியாது என்று இவர்கள் மார் தட்டிக் கொள்கிறார்கள்.

எரிமலை பெயர்: மரும். எங்கே இருக்கு? அம்ப்ரிம் தீவுகள் ( Ambrym Islands)

 

மேலே பார்த்தது
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்.....
நிலமகளின் சுட்டெரிக்கும் கோபாக்னி....

அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன் அக்கினி அடங்கலையே..... அப்படின்னு எந்திரத்தனமா பாடினாலும் அணையாது போலிருக்கே!!

சரி...சரி.. ரொம்ப சூடாப் பார்த்தாச்சு... அப்படியே 'அணைக்கிறதையும்' பார்த்துடுவோம்!!!

தீ சொல்லி அணைக்கும் திருடா திருடா.. தீ தீ தித்திக்கும் தீ...



அப்புறம் தீயை அணைத்து குஷ்புவை அணைக்கும் தீயணைப்பு வீரர் கமலின்..


ஃபயரையும் ஃபயர் எஞ்சின் ஒட்ரவரு ஆடறதையும் பார்த்து ரசிச்சீங்களா? ஃபயர்ன்னதும் தீபா மேத்தாவும், ஷபனா ஆஸ்மியும் நந்திதா தாஸும் தான் சட்டுன்னு யார் புத்திக்கு உரைக்குதோ அவங்களுக்குள்ளே காமாக்னி கொழுந்து விட்டு எரியறதா "தீ"ம்பாவனி எழுதிய "தீ"ரமாமுனிவர் அதில சொல்லியிருக்கிறார்.
-

20 comments:

Madhavan Srinivasagopalan said...

//தீயை அணைத்து குஷ்புவை அணைக்கும் தீயணைப்பு வீரர் கமலின்.. //

தீயணைப்பு வேலைய ஒழுங்கா செய்யுறாரோ இல்லையோ.. அப்பப்ப, 'அணைக்கும்' பணிய செய்யாம விடமாட்டாரே அவரு..

RVS said...

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் வச்சா பத்திக்கொள்ளுமே ... அவரு என்ன பண்ணுவாரு மாதவா...

ஹேமா said...

குறும்பு கூடிப்போச்சு ஆர்.வி.எஸ். உங்களுக்கு !

Chitra said...

பதிவில், "பொறி" பறக்குது. :-)

RVS said...

ஹி ஹி... ஹேமா.. ;-)

RVS said...

நாங்க நடந்து வரும்போதே கால் ரோடுல உரச உரச தீப்பொறி பறக்கும்ல சித்ரா... ;-)

சைவகொத்துப்பரோட்டா said...

"சூடா"ன பதிவா இருக்கே!

RVS said...

சூடான பரோட்டாவா இருக்குமோ... ஹி ஹி ...சை.கொ.ப

Anonymous said...

ஹேமா said..
//குறும்பு கூடிப்போச்சு ஆர்.வி.எஸ். உங்களுக்கு//
ரிப்பீட்டு :)

ப்ரியமுடன் வசந்த் said...

தீண்டாய் அப்படின்ற பாட்டையும் போட்ருக்கலாம்ல தல!

RVS said...

முதல் முறை இந்தப் பக்கம் எட்டிப்பார்த்து ரிப்பீட்டு போட்ட பாலாவிற்கு நன்றி.... ;-)

RVS said...

ப்ரியமுடன் வசந்த்... அதைவிட தீண்டி தீண்டி... ஞாபகம் வந்தது. போட்டா அடல்ட்ஸ் ஒன்லி பதிவோ போய்டும் பயம் பாஸ்... தீண்டி தீண்டி மாதிரி ஒரு "பத்துப்பாட்டு" வச்சிருக்கேன். காட்சி அமைப்புகள் ஏடாகூடமா இருக்கறதுனால பதிய பயமா இருக்கு. இதுல தீண்டாய் ஒன்னும் 'ஏ' பாட்டு கிடையாது. ;-) ;-)

மோகன்ஜி said...

பெரிய இரும்பு உருக்காலைகளில் பர்னஸ்க்கு இருபதடி தூரத்தில் கூட நம்மால் நிற்க முடியாது. ஆனால் அதன்
விளிம்பில் நின்ற வண்ணம் இரும்புக் கனிமத்தை உள்ளேயிடும் கலாசி தொழிலாளர்களை கண்டு வியந்ததும்,எல்லாம் வயிற்றுப்பாட்டுக்குத் தானே என்று மனம் குமைந்ததும் உண்டு. அதை நினைவுறுத்தி விட்டீர்கள். மை.மா.கா.ரா கிளிப்பிங்குக்கு நன்றி ஆர்.வீ.எஸ்!

பத்மநாபன் said...

திகிலாக இருந்தது ..இவ்வளவு ரிஸ்க் எப்படி எடுத்தாரோ அந்த நபர் .. வால்கனோ விடியோவும் இப்பொழுது தான் பார்க்கிறேன் .நன்றி...

நம்ம குறும்பு நாயகனின் பம்பம் பாட்டு போட்டு தீ ப்பதிவை முழுமை படுத்திவிட்டீர்கள்.....

சாய்ராம் கோபாலன் said...

//ஃபயர்ன்னதும் தீபா மேத்தாவும், ஷபனா ஆஸ்மியும் நந்திதா தாஸும் தான் சட்டுன்னு யார் புத்திக்கு உரைக்குதோ அவங்களுக்குள்ளே காமாக்னி கொழுந்து விட்டு எரியறதா "தீ"ம்பாவனி எழுதிய "தீ"ரமாமுனிவர் அதில சொல்லியிருக்கிறார்.//

ஏலே ஆர்.வி.எஸ்., அந்தாக்ல உமக்கு நினைவுக்கு "அது" வர எல்லாவற்றையும் நீர் எழுதிவிட்ட- இது போங்கு.

RVS said...

ரம்..பம்..பம்.. ஆரம்பம்.. ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே... மோகன்ஜி நல்லா இருந்ததா?

RVS said...

பார்க்கும் போதே எனக்கு பத்திக்கிச்சு பத்துஜி ;-)

RVS said...

சாய்... ஹி ஹி ஹி...... நான் சொல்லை சாய்.. "தீ"ம்பாவணி எழுதிய "தீ"ரமானிவர் தான்..... சரி சரி சரி.. அடிக்க வராதீங்க... ;-)

அப்பாதுரை said...

தீக்குள் விரலை வைத்தால் சேக்குபியரில கூட இருக்கு.. பானி-எம் பாட்டுலயும் இருக்கு. சமையலுக்கும் தீ; மையலுக்கும் தீ. இந்தத் தீ பத்தீ ஒரு புராணக்கதை இருக்கு.

RVS said...

கொஞ்சம் புராணத் தீ பற்றி சொல்லுங்களேன் அப்பாஜி ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails