Friday, October 8, 2010

லவ் லெட்டர்

என் ப்ரியமான மீனாவிர்க்கு,

luv letterஎப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலை. என்ன எழுதறதுன்னு தெரியலை. இதுக்கு முன்னாடி யாருக்கும் நான் லவ் லெட்டர் எழுதினதும் இல்லை. இதான் என்னோட கன்னி முயற்சி. ஒவ்வொரு நாளும் நீ என் வீட்டை கடக்கும் போது என் கண்ல பளிச் பளிச்சுன்னு மின்னல் வெட்டுது. நீ அசால்ட்டா திரும்பி பார்க்கும் போது நெஞ்சு படக் படக்ன்னு அடிச்சு சட்டை பாக்கெட்டையே அதிர வைக்குது. முந்தாநாள் நீ சிரிச்சியா? யாரடா என் செல்போன்ல காலர் டியூன்  மாத்தினதுன்னு நினைச்சேன். நேத்திக்கு நீ இந்தப் பக்கம் திரும்பும் போது தான் பார்த்தேன். இந்த முறை ஏன் இன்னும் ஐப்ரோ த்ரெட்டிங் பண்ணிக்கலை. அந்த வில் போன்ற புருவங்கள் ரெண்டும் காடாய் வளர்ந்து மோகன்லால் மீசை மாதிரி புஷ்டியா ஆயிடுச்சு. உனக்கு யார் மரகதப் பச்சை கலர்ல கண்ணாடி வச்ச சுடிதார் வாங்கிக்கொடுத்தா? சுத்த ரசனை கெட்ட ஜென்மங்கள். யாராவது ரெண்டு பேர் அதைப் பார்த்து தலை வாரிக்கவா? உன்னோட தம்பி தடித் தாண்டவராயனுக்கு அவனோட ப்ரெண்ட்ஸ் பார்த்துக்கூட இதிலெல்லாம் அறிவு வளரலையே. ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான் வளர்ச்சி. இனிமே அந்த ஓசியில் கிஃப்டா வந்த அரதப்பழசு ஹைதராபாத் வளையல் போட்டுக்காதே. ஒன்னுரெண்டு முத்து உதுந்து பல்லு போன உங்க பாட்டி வாய் மாதிரி இருக்கு. உன் கைழகையே கலங்க அடிக்குது. நீ சிரிக்கும் போது உன்னை உத்து உத்துப் பார்த்து முத்தை கண் குளிர பாத்துக்கிறேன். காதுக்கு அந்த குடை மாதிரி இருக்குற ஜிமிக்கிதான் நல்லா இருக்கு. இமிடேஷன் போட்டு காதை கடித்துவிடப் போகிறது. கவனமாக இருக்கவும். கால் கொலுசு ஏன் இப்படி கருத்துப் போச்சு. உடம்பு சூடாயிடுச்சுன்னு நினைக்கிறேன். வாராவாரம் சூடுபறக்க உச்சந்தலையில் எண்ணெய் தேச்சு குளிக்கறதில்லையா. உன் அம்மாவுக்கு என்மேல் அக்கறையே இல்லையா?

போன வாரம் ஒருநாள் பஸ்சுக்கு லேட் ஆயிடிச்சுன்னு நீ வேகமா ஓடினபோது எனக்கு மூச்சு வாங்கிச்சு தெரியுமா? அப்படி நீ ஓடும் போது மூளையில்லாத பெரிய கல் ஏதாவது வழியில கிடந்து உன்னை தடுக்கி விட்ருச்சுன்னா என்ன பண்றது. இனிமே அப்படி ஓடாதே. உனக்கு லேட் ஆயிடுச்சுன்னா நம்ம தெருவுக்கு தண்ணீ லாரி வரலைன்னு ரோடுல தற்காலிக தர்ணா பண்ணிடலாம். கவலைப்படாதே. அந்த முட்டை முழி திவ்யா உன்கூட வரும்போது கண்ணை உருட்டி என்னை முழுச்சு முழுச்சு பார்க்கறா. அவளோட பார்வையே சரியில்லை. கல்யாணத்துக்கு அப்புறம் கல்யாண ராமனாகப் போற இந்த தசரத ராமனை கவுக்கப் பார்க்கறாளே. சண்டாளி. நேத்திக்கி உனக்கு முன்னாடியே பஸ் ஸ்டாப் வந்த திவ்யா என்ன பண்ணினா தெரியுமா மீனா? என்ன பார்த்து "ஏய். நீ சிகரெட் பிடிப்பியா" அப்படின்னு வலிய வந்து பேசி வம்புக்கிழுக்கரா. ஏன் கேக்கற அப்படின்னு கேட்டா கீழ இருக்கிற பிட் சிகரெட்ட காமிக்கறா. அவ பெரிய கைகாரி. கண்லயே தெரியுது. எதுக்கும் நீயும் ஜாக்கிரதையா இரு. உன்னோட இல்லை என்ற தலையாட்டுதலில் என்னை தவிக்கவிடாமல் ஆமாம் என்று ஆட்டி என்னை ஆட்கொள்ளவேண்டும்.

ஆயிரம் டன் ஆசையுடன்.....
உன் அன்பு
அன்பு.

கடிதத்தை இரண்டு மூன்று முறை வாசித்துப் பார்த்தான். நன்றாக இருப்பது போலத் தான் பட்டது. என்னதான் ஈமெயில் கலாச்சாரம் வளர்ந்துவிட்டாலும் கையால் எழுதிக் கொடுப்பதுதான் உசிதம் என்று எண்ணினான். இன்றைக்கு நிச்சயம் கொடுத்துவிட வேண்டும் என்று தவித்தான். பஸ் நிறுத்தத்திற்கு போவதற்குள் பின்னாலேயே சென்று மீனாவை துரத்தி பிடித்தான். லெட்டரை எடுத்து நீட்டினான். திறந்து பார்த்த மீனா பூவிலிருந்து பூகம்பத்திற்கு தாவினாள். "ச்.சீ போடா பொருக்கி..." என்று திட்டிவிட்டு அந்த லெட்டரை எடுத்து மூஞ்சியில் சொத்தென்று அடித்தாள். அவளது அன்பு முகத்தில் அராஜகம் குடியேறியது. அவமானத்துடன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஓட்டமும் நடையுமாக வீட்டை அடைந்தான். கணினியில் சேமித்து வைத்திருந்த "Love-Meena.doc"ஐ ஓபன் செய்தான். டாக்குமென்ட் முழுக்க இருக்கும் மீனாவை திவ்யாவாகவும், திவ்யாவை மீனாவாகவும் மாற்றினான். பச்சை சுடிதாரை சிகப்பு சுடிதாராக மாற்றினான். ஹைதராபாத் வளையல் சீமா ஃபேன்சி ஸ்டோர் வளையல் ஆயிற்று. ஒரு பிரிண்ட் எடுத்துக்கொண்டு திவ்யா போய்விடக்கூடாதே என்ற கவலையில் கண்ணாடியில் தலையை சரிசெய்துகொண்டு பறந்து ஓடினான்.

பின் குறிப்பு: கடைசியில் "Love-Dhivya.doc" என்று பெயர்மாற்றம் செய்து ஒரு புதிய டாக்குமென்டாக சேமித்து வைத்துவிட்டுத்தான் திவ்யாவிற்கு லெட்டர் கொடுக்க ஓடினான் அன்பு.

பட உதவி: thevarguy.com

33 comments:

Chitra said...

என்னதான் ஈமெயில் கலாச்சாரம் வளர்ந்துவிட்டாலும் கையால் எழுதிக் கொடுப்பதுதான் உசிதம் என்று எண்ணினான்.

.....அதானே - நேரடியாக re"action" தெரிந்து கொள்ளலாமே....... உடனடியாக "பதிலடியும்" கிடைக்கும். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

சைவகொத்துப்பரோட்டா said...

ஆழ்வார்பேட்டை ஆண்டவா, பாடல் நியாபகத்தில் வந்து போகிறது!

ஸ்ரீராம். said...

காதல்....காதல்...காதல்....காதல் போயின் இன்னொரு காதல்.

இளங்கோ said...

:)

RVS said...

பாய்ண்டை பிடிச்சீங்க சித்ரா... ;-)

RVS said...

ஒரு டாக்டர் போனா நர்ஸ் உண்டுன்னு சொல்றீங்க சை.கொ.ப. ;-)

RVS said...

ஆமாங்க ஸ்ரீராம். கரெக்ட்டுதான். ;-)

RVS said...

;------))))))) இளங்கோ..

பத்மநாபன் said...

காதல் சொட்ட சொட்ட கடிதம் நன்றாக இருந்தது... இங்கு சிறப்பாக காதல் கடிதம் வரைந்து தரப்படும்னு தாராளமா விளம்பரம் செய்யலாம்..டேட்டா குடுத்தா ஒரு லெட்டர் வர்ற மாதிரி ஒரு ப்ரொக்ராம் வச்சுருப்பிங்க போல.....

இது கணினி யுகம் அல்லவா..... ஒரு ப்ரொக்ராம் கரப்ட் ஆனா அடுத்தத இன்ஸ்டால் பண்ணிக்கறாங்க.... சில ப்ரொக்ராம் அன் இன்ஸ்டால் கேட்கும் . சில கூடவே இன்ஸ்டால் பண்ணிக்கலாம்... நம்ம மக்கள் பேக் அப் எடுத்து வெக்கறதுல கில்லாடிகளாச்சே.....

RVS said...

பத்துஜி... ரெண்டாவது பாரால பேக்கப் ஸ்ட்ராடஜி பற்றி சொல்லிறீங்களே... அது சாஃப்ட்வேருக்கா இல்லை.....இல்லை... லைஃப்வேருக்கா? கொஞ்ச தெளிவா சொன்னீங்கன்னா உங்க வீட்ல போட்டுக் கொடுக்க சௌரியமா இருக்கும். ப்ளீஸ்.

suneel krishnan said...

எனக்கு பிடிச்ச வரி
//இந்த முறை ஏன் இன்னும் ஐப்ரோ த்ரெட்டிங் பண்ணிக்கலை. அந்த வில் போன்ற புருவங்கள் ரெண்டும் காடாய் வளர்ந்து மோகன்லால் மீசை மாதிரி புஷ்டியா ஆயிடுச்சு. //
:):) இப்டி நெஜத்துல இருந்தா எப்டி இருக்கும்னு நெனைச்சு பாத்தேன் :)

RVS said...

கண்ணுக்கு மீசை முளைச்சது மாதிரி இருக்கும் டாக்டர். ;-)

மோகன்ஜி said...

சுவாரஸ்யமா கடிதத்தைக் கொண்டு போயிருக்கீங்க! பேர் மாற்றி பேக்கப் எடுத்து... சுவையான திருப்பம்.உங்க படத்துலே ஒன்றுக்கு இரண்டாய் இதயங்கள்... கதைக்கும் அது பொருத்தமானதாய் இருக்கிறது.

அப்பாதுரை said...

முட்டை முழி கண்ணிமைப்பில் முத்து மொழியாக மாறுவது தான் காதல். சரியாச் சொன்னீங்க... இதைப் போய் அமரத்துவம் ஆழ்ந்த புண்ணாக்குனு சொல்லிக்கிட்டு திரியறவங்களை என்ன சொல்ல? இமெயில் வசதி அந்த நாள்ல இல்லாம போயிடுச்சே? அப்பல்லாம் ஒரு கண் காதலிக்கிறவளைப் பாத்துட்டிருக்குறப்ப இன்னொரு கண் வரிசைல அடுத்தவங்களைப் பாத்துட்டு இருக்கும்.. அப்படி ட்ரெயினிங்க் கொடுத்த வச்ச கண்ணுங்க..

காதல் பெண் சிரிப்பில் செல்போன் ரிங்டோன் - நயமான கற்பனை.

RVS said...

மோகன்ஜி கூகுள்ள ரெண்டு இதயம் இருக்கறா மாதிரி அலைஞ்சு திரிஞ்சி எடுத்த படம். அந்த கோணத்தில் கண்ணுற்ற உங்களால் எனக்கு மகிழ்ச்சி. ;-)

RVS said...

இரண்டு கண்கள் இரண்டு ஃபிகர் காண முடியுமா... அப்பாஜி... அப்பன்னா அது கண்ணல்ல "மெஷின் கண்".... நீங்க எழுதின லெட்டர் கதை டேஸ்ட்டுக்கு இல்லைன்னாலும் ஏதோ சுமாரா வந்திருக்குன்னு உங்க பாராட்டுல தெரியுது. நன்றி. ;-) ;-)

மதுரை சரவணன் said...

nalla samippu. thanks for sharing

RVS said...

முதல் வார்த்தை புரியலை மதுரை சரவணன். பகிர்வு நன்றிக்கு நன்றி.

பத்மநாபன் said...

//உங்க வீட்ல போட்டுக் கொடுக்க சௌரியமா இருக்கும்.//

பதின்மங்களில் தான் இந்த தடுமாற்ற மாற்றங்கள். அவங்க வெளயாட்டை சொன்னேன் ஆர்.வி.எஸ்.... உடனே ஒலையைக்கட்டி புறாவை ஊரபாக்கத்துக்கு, ``தெரியுமா சங்கதின்னு`` அனுப்பிருவிங்க போல....

இப்ப.. ``காற்று வெளியிடை கண்ணம்மா – நின்றன் காதலையெண்ணிக் களிக்கின்றேன்`` .....முண்டாசை இருக்க கட்டி பாடிக்கொண்டிருக்கிறேன்.....

ப்ரியமுடன் வசந்த் said...

ஓஹ் திவ்யா ஓஹ் திவ்யா நீ நடமாடும் நைல் நதியா?

RVS said...

யே.. அப்பா... என்ன பயம். "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே... உச்சி மீது அப்பளாக்கட்டை வீழும் போதும் அச்சமென்பதில்லையே" அப்படின்னு இருக்கவேண்டாமா பத்துஜி? "சம்சாரம் என்பது வீணை. சந்தோஷம் என்பது ராகம்" அப்படின்னு பாடுங்க. இன்னும் பொருத்தமா இருக்கும்.

RVS said...

வாங்க கற்பனையின் காதலரே! லவ் லெட்டர் அப்படின்னதும் எட்டிப் பார்க்கறீங்க. இவ்ளோ நாளா தலையை காட்டாம. நாங்களும் கடைய விரிச்சி வச்சுருக்கோம். அப்பப்ப எட்டி பாருங்க. பாட்டு சூப்பர். ;-)

ஹேமா said...

எனக்கு அந்தப் படம்தான் பிடிச்சிருக்கு ஆர்.வி.எஸ்.

நான் இரவே வாசிச்சிட்டேன்.பேசாமப் போய்ட்டேன் !

RVS said...

லெட்டர் பிடிக்கலையா ஹேமா? ;-) ;-)

ஹேமா said...

லெட்டர் கொஞ்சம்தான் பிடிச்சிருக்கு.காதல் விளையாட்டாப் போச்சு உங்களுக்கு !

RVS said...

ஹி ஹி... ஹேமா ஹேமா ;-)

அப்பாதுரை said...

ரெண்டு கண்ல ரெண்டு பொண்ணைக் காண முடியாதா? சைட் அடிக்கச் சொல்லிக்கொடுக்கலாம் போலிருக்கே?

RVS said...

சொல்லிக் கொடுங்க.. ப்ளீஸ். நா சின்னப் பையன். ;-)

அப்பாதுரை said...

இரண்டு கண்ணில் இரண்டு காட்சி காண முடியுமா எல்லாம் புலம்பல் பாட்டுக்குத் தான் சரி. ஒரு கண்ணுல மூணு காட்சி கண்டாத்தான் கடலைச் சுறுசுறுப்புங்க.

அப்பாதுரை said...

அதுக்கென்ன கத்துக் கொடுத்து கத்துக்கிட்டாப் போச்சு. இப்ப மெட்ராசுல பத்துக்குப் பத்து தேறும்னு சொல்றாங்க.. சும்மா விடலாமா? அடுத்த வருசம் சென்னை வரப்ப செசன் வச்சுக்குவோம். இப்பல்லாம் மெரினா பக்கம் குளுகுளுவா இல்லை மால்னு சுத்துறாங்களா மின்மினி பார்டீஸ்?

RVS said...

ஸ்பென்சர் மாதிர் எக்ஸ்பிரஸ் அவின்யூ கட்டியிருக்காங்க. எல்லாத்தையும் விட பெருசு. தியேட்டர், கடலை, சுடலைன்னு ஒரே கூட்டம். குணா கமல் ஆடி ஆடி பாடறா மாதிரி "பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க..."ன்னு அந்தாதி பாடி அத்தனை பிகரையும் அள்ளலாம். ரெண்டாவது ஆட்டம் எந்திரன் குடும்பமா போயிட்டு எந்திரன் மட்டும் பார்த்துட்டு வந்தேன். வாங்க அப்பா சார்... வாங்க... படிச்சுக்கறேன்..... ;-)

Manisekaran said...

enna sir, romba anubavichi irupeenga pola....

anbudan,
Mani

RVS said...

அன்பை அனுபவிக்காதவன் உலகத்தில் உண்டா மணி?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails