“புள்ளயாடீ பெத்து வச்சிருக்கே? தறுதல.. தறுதல...”
அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது.
“நம்ம பிள்ளையை கரிச்சு கொட்டறதே உங்க வேலையாப் போச்சு.. அப்படி என்ன தப்புத்தான் என் மகன் பண்ணிட்டான்?”
அம்மா யானை சலித்துக் கொண்டது.
"உன் புத்திர சிகாமணி என்ன காரியம் பண்ணியிருக்கான் தெரியுமா? ஆத்தங்கரையோரமா வந்த கோயில் பெண் யானை குட்டியைப் பார்த்து “36000=28000=36000”ன்னு மார்க் போட்டிருகாண்டீ. வெளிய தல காட்ட
முடியல.".
“பின்னே உங்க பிள்ளை உங்களை மாதிரிதானே இருப்பான்?. உங்களை முதன் முதலா பார்த்தப்போ என்கிட்டே’நான் தான் குருவாயூர் கேசவன்’னு பொய் சொல்லி தானே என்ன கரெக்ட் பண்ணீங்க?வயசு பையன் அப்படித் தான் இருப்பான்.விடுங்க”
இது மோகன்ஜி அவரோட ப்ளோக்ல போட்ட யானை ஜோக். அவரது தளத்தில் அதற்க்கு பின்னூட்டமிடப்போய் நானும் பத்மநாபனும் அந்தக் கரும்பு தின்னும் குறும்பு யானையிடம் வசமாக மாட்டிக்கொண்டோம். இதனால் என்னோட ப்ளாக்கில் சரிவர தொடர்ந்து எழுதமுடியவில்லை. ஒரே யானைத் தொல்லைப்பா... மோகன்ஜி மற்றும் பத்மநாபன் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்ற அஸாத்திய தைரியத்தோடு.... அந்த யானைப் பதிவின் கமெண்ட்டுகளே ஒரு பதிவாக.. இங்க... படிங்க மேல...
- ஆஹா RVS..நீங்க குடுக்குற பரபரப்புல எனக்கு இப்போ பொறுப்பு ஜாஸ்தியாயிட்ட மாதிரி இருக்கு. நம்ம ஏதோ சிறுசுகளை சேத்து வைக்கலாம்னு அந்த கோயில் பெண் யானை கிட்ட பேசி பாக்கப் போனேன். அதென்னவோ கைல வச்சிருந்த சில்லறைய வாங்கி பாகன்கிட்ட குடுத்துட்டு தும்பிக்கையால தலையில தட்டிட்டு அடுத்தாளை பாக்க திரும்பிருச்சு . நம்ம பையனுக்கு நீங்க சொன்னாமாதிரி ஆப்ரிகா தான் தகையும் போலருக்கு.ரெஜிஸ்தர் ஆபீஸ்லே சிம்பிளா முடிச்சிட்டு தேன் நிலவுக்கு அதுங்களை தேக்கடிக்கு அனுப்பிட வேண்டியது தான்!
- மோகன்ஜி ஆர்.வி.ஸ்... நீங்க ரெண்டு பேரும் செய்யற யானை அலப்பற சிரிப்ப அடக்க முடியல போங்க .... காதல் யானை ரெமோ, ஆப்ரிக்கயானை, ரிஜிஸ்டர் திருமணம், தேக்கடி தேனிலவு ......ஜோர்,
22 comments:
இப்படியே... யானைக் கதை போய்க்கொண்டு இருக்கிறது...
முதல் பாகம் இதோடு முற்றும்.
இப்பவே கண்ணைக் கட்டுதே.. யானை சும்மா பூந்து விளையாடுது..
ஹா ஹா ஹா... முடியலங்க...
உண்மையில் ரசித்து சிரித்தேன்.. :-)))
ரிஷபன்... ரெண்டாம் பாகம் தொடருமான்னு பார்ப்போம். வெண்கல ப்ளாக்குள்ள யானை பூந்தா மாதிரி இருக்கா? மோகன்ஜியும் பத்மநாபனும் ரசிகமணிகள். பிச்சு உதருவாங்க. ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஒரு சிரிப்பு யானையோடு இந்த ப்ளாக்கிற்கு முதன் முதலாக வந்துருக்கீங்க ஆனந்தி.. சந்தோஷம்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
கலக்கல் "கும்மி"
முதல் பாகம் இதோடு முற்றும்.
அப்படின்னா இன்னும் இருக்கா.? ஒரே சிரிப்பா வருகிறது.
நன்றி சித்ரா.. இது "சிரிப்பு கும்மி"
அன்புடன் ஆர்.வி.எஸ்.
இளங்கோ எங்காவது ஊரை விட்டு ஓடி விடாதீர்கள்.. யானை மிரட்டல் இன்னும் இருக்கும் போல் தெரிகிறது...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
முதல் பாகம் இதோடு முற்றும்.///
என்னது அப்போ இன்னொரு பாகம் இருக்கா
முதல் பாகமே இவ்ளோ...இப்பிடி இருக்கே !
அருமையான பின்னோட்டத் தொடர்... ரசித்து மாளவில்லை. பதம் நாபன், மோகன்ஜி, எல்லோருக்கும் யானை சைஸ் நன்றிகள்.
மோகன்ஜி, 36k/28k/36k - funny joke in recent times!
மூழாம்பழம்?
என்னங்க இப்படி ஒரு பழம் நிஜமாவே இருக்கா? என் தாத்தா நிமிட்டாம்பழம் தரேன்னு ஆசைகாட்டி கடைசியில் மோசம் போன கதை நினைவுக்கு வருதே?
நோ எஸ்கேப் சௌந்தர். ரெண்டாவது பாகம் சுடச்சுட ரெடி ஆகிக் கொண்டிருக்கிறது. ப்ளீஸ் வெயிட்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
முதல் பாகமே இவ்வளோ. அப்படின்னு யானை மாதிரி வாயை பிளந்தா எப்படி ஹேமா? இன்னும் கூத்து இருக்கே.. ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
சாமியோவ்! என் ப்ளாக்ல தான் யானை ரவுசா இருக்கே.. உங்க ப்ளாக்ல வந்தாவது வேற சீன் பாக்கலாமேன்னு வந்தா.. நம்ம கும்மியே இங்கயும் ஷகீலா படமாட்டம் இல்ல ஓடிக்கிட்டிருக்கு?! இன்னும் ஒரு பதிவுக்கு மேல இன்னும் என் ப்ளாக்ல மேட்டர் சேர்ந்திடிச்சே..கொஞ்சமாவா கரகம் ஆடியிருக்கோம்?அடுத்ததையும் போட்டுடுங்க . தூங்கலாமான்னு பார்த்தேன்.சைக்கிள் கேப்புல எனக்கு " யானை மேல் (துஞ்சிய )தூங்கிய மோகனசோழன்"னு ஸ்லைட் போட்டுராதீங்க பிரதர்
புள்ளிவெச்சா, கோடு இழுத்து , அந்த கோட்டுல ரோட்டை போட்டு , கோட்டையை பிடிக்கறரவரு ஆர்.வி.எஸ் ன்னு...நானும் என் மச்சான் மோகன்ஜியும் இப்பத்தான் பேசீட்டு இருந்தோம்....சரியாத்தான் இருக்கு ...வசமா வத்தி வச்சிருக்கேன் போய் பாருங்க....
( ரொம்ப மகிழ்ச்சி ...பதிவே கும்மியாக , கும்மியே பதிவாக )
///ஒரு சிரிப்பு யானையோடு இந்த ப்ளாக்கிற்கு முதன் முதலாக வந்துருக்கீங்க ஆனந்தி.. சந்தோஷம்.///
மீண்டும் வருகிறேன் :-))))
அப்பாதுரை சார் பாராட்டுக்கு நன்றி.. இந்தப் பழம் மேட்டர் பத்மநாபன் தான் விளக்கனும். நானு அதுல பழம். ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
நீங்கள் என்ன ராஜ ராஜ சோழன் வம்சமா. மோகன சோழன் என்று நீங்களே உங்களுக்கு பெயர் வைத்துக் கொள்கிறீர்கள். சாரி.. இந்த மாதிரி உங்க பதிவுலதான் பின்னூட்டம் இடனும் மோகன்ஜி. அடுத்த கட்டத்துக்கு கதையை நகர்த்தி கொண்டு வந்துருக்கேன். உங்க யானை லிஸ்ட் பதிவை பாருங்கள். ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
வத்திக்கு எதிர் வத்தி இருக்கு மாமோய். மோகன்ஜி யானைப் பதிவுல போய் இப்புடு சூடுங்க... நா வர்ட்டா பத்மநாபன்... ;-) ;-)
எல்லோரும் கும்மி அடிப்போம்... பின்னூட்டக் கும்மி..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஆஹா... இப்படி ஒரு யானை கதை வாழ்க்கைல படிக்கல போங்க
பார்ட் டூ இருக்கு. அவசியம் வாங்க அ.தங்கமணி. ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment