ஜடப்பொருளாய் இருந்த PC நான்
உயிர்கொடுத்த OS நீ
வன்பொருளாய் திரிந்த என்னை
மென்பொருளாய் திருத்தியவள் நீ
எம்ப்டி சிடியாக இருந்த என்னை
சங்கீத பேச்சினால் எம்பி த்ரீ ஆக்கியவள் நீ
கணினி இயக்கும் உன் உள்ளங்கைக்குள்
கண்ணியமாய் சிறைபடும் மவுஸ் நான்
நீ இழுக்கும் திசைக்கு வரும்
ஜாய்ஸ்டிக் அடிமை நான்
நீ மடி கொடுப்பாய் என்றால்
உன் லேப்டாப்பாய் நான்
டைப் அடிக்கத் தெரியாத உன் பிஞ்சு விரல்களால்
செல்லக் குட்டுகள் பெறும் கீபோர்டு நான்
உன் ஸ்பரிசம் எனை அழுத்தும் என்றால்
கணினியின் ஆன்(ண்) சுவிட்ச் நான்
நீ உற்று ரசிப்பாய் என்று தெரிந்திருந்தால்
ஒரு மானிட்டராயேனும் நான் பிறந்திருப்பேனே
ஷட்டவுன் ஆகப் போனவனன் உனைப்
பார்த்த கணத்தில் ரீபூட் ஆகிப்போனேனே!
கண்ணே! நீ சூடுவாய் என்றால்
நான் தான் உனக்கு வலைப்பூ
முப்போதும் என் மனத்திரையில் ஓடும்
யூட்யூப் வீடியோ நீ
அரட்டை பெட்டியில் வரும் ஸ்மைலி நீ
அனுதினமும் நான் தேடும் கூகிள் நீ
என் ஹார்ட்டிஸ்க் நிரப்பிய ஒரே கவிதை நீ
என் அறிவுக்கண்ணை திறந்த விக்கிபீடியா நீ
என் சொப்பனங்களை ஆக்ரமித்த ஸ்க்ரீன் சேவர் நீ
இருபத்து நான்கு மணிநேரமும் என்னுள் ஓடும் செர்வர் நீ
என் உள்ளத்தை அச்சடித்த கலர் பிரிண்டர் நீ
வைரஸ் தாக்கும் வரை தாமதிக்காதே
விரைந்து வா! நீயும் நானும் இந்த
இணையத்தால் இணைவோம்
பி.கு: மேற்கண்டதிர்க்கும் தலைப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்று நினைப்பவர்கள் தயவுசெய்து கீழே இப்பதிவின் Labelஐ பார்க்கவும்.
பட உதவி: cs4fn.org
-
பட உதவி: cs4fn.org
-
40 comments:
கவிதை மாதிரியா, மாதிரிக் கவிதையா?
Nice kavithai..
reminds me of
----
Aன் உயிரின்
Bம்பமாய் விளங்கும்.. உன்
Cங்காரப் பார்வையிலே
Dசெம்பர் பூ தழவுதடி..
........
gவ்வென குளிருதடி..
......
Y__________
Z__________ .
-----------
could not remember in full
நன்று!......''fatal error'' என்று பதில் கவிதை வராமலிருந்தால் சரி
ஹி ஹி... கவிதை மாதிரியான கவிதை.. புவனேஸ்வரி ராமநாதன்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
மாதவா ஹை.... இது கூட நல்லாஇருக்கு...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Hang ஆகாம போனாலே பெருசு சித்த மருத்துவரே!
அன்புடன் ஆர்.வி.எஸ்.
நல்லாயிருக்குங்க கவிதை!
கவித...கவித...அருவி மாதிரி கொட்டியிருக்கு!!
நன்றி எஸ்.கே கவிதைன்னு ஒத்துக்கிட்டதுக்கு ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
சை.கொ.ப நீங்களும் எஸ்.கே மாதிரி கவிதைன்னு ஒத்துக்கிட்டீங்க.. ரெண்டு ஆளு ஆச்சு. குணா கமல் சொல்றமாதிரி இருக்கே... ;-) ;-)
நன்றி.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஹ ஹ ஹ ஹ ஹா
ரொம்ப நல்லாயிருக்கு
நன்றி வேலு.ஜி
அன்புடன் ஆர்.வி.எஸ்.
காதலிகளை விட கணிணி மேல் என்று நினைத்து விட்டீர்களா ?..
கவிதை நன்று.
இளங்கோ... நான் நினைக்கவில்லை... யாரோ ஒரு கம்ப்யூட்டர்காரன் நினைக்கிறான். (புள்ள குட்டி எல்லாம் இருக்கு.. ஆளை விடுங்க...) ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
//புள்ள குட்டி எல்லாம் இருக்கு..//
Hahahhaha :D
நல்ல கற்பனை..எந்திரனுக்கு ஏதேனும் உறவோ??
ஆமாம் எந்திரனும் கம்ப்யூட்டர்காரனும் தாயாதி பங்காளி உறவு முறை காயத்ரி...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
//மடி கொடுப்பாய் என்றால் உன் லேப்டாப்பாய்...
... அப்ளாம், வடை.
ஆசையும் தோசையும் யாருக்கு அப்பா சார்?
அன்புடன் ஆர்.வி.எஸ்.
//கவிதை மாதிரியா, மாதிரிக் கவிதையா?
classic.. புவனேஸ்வரி ராமநாதன்!
இப்படித்தான் இருபத்தைந்து வருடங்களாக கணணி, ப்ளாக்பெரி என்று யூஸ் பண்ணி
இப்போ
கர்பால் tunnel சிண்றோம் !
எல்பௌ ப்ரோப்ளேம் !
தோள் ப்ரோப்ளேம் !
இப்போ எனக்கு முள்ளும் மலரும் ரஜினி போலவோ / பாகப்பிரிவனை சிவாஜி மாதிரி கை போயிடும் போலிருக்கு
அடப்போங்கையா !
ஆனா
////மடி கொடுப்பாய் என்றால் உன் லேப்டாப்பாய்...//
பெங்களூரில் முதன் முதலில் 86-87 கம்ப்யூட்டர் துறையில் நுழைந்தவுடன் இப்படிதான் ஆச்சு !
ஒரு சின்ன பெண் "ஏய், சாய்ராம் எனக்கு கம்ப்யூட்டர் கத்துக்கொடு என்று !"
நாம சும்மா இருப்போமா ! வயசு வேற - "முடியும் ஆனால் மடியில் உட்கார்ந்து படித்து - அவ்வபோது தூக்கிப்போடும் !! பரவாயில்லையா என்றேன் !!"
ஒ ஒ ஓஒ ஓஓ ஓ............... சாய் அப்படியா சங்கதி!!!
அன்புடன் ஆர்.வி.எஸ்.
உங்க கவிதை " பிரௌசிங்" கலக்கலா இருக்கு. சாய்
பதிவைப் பாத்துட்டு "பாஸ் வேர்டை" மறந்துடாதீங்க! அந்தப் பக்கம் "ரோம் மெமரி" அதிகம். எனவே சொல்ற பொய்யை எல்லாம் ஞாபகம் வச்சிக்குங்க. பொய்ன்னு மாட்டிகிட்டா மொத்த மேட்டரும் "ஹேங்" ஆகிடப்
போகுது..
ரொம்ப ரசிச்சேன் ஆர்.வீ.எஸ்.
ஃபிளாஷ் மெமொரியை ஃபிளஷ் பண்ணிடலாம் மோகன்ஜி... ப்ராப்ளம் இல்லை டெக்னாலஜி நம்ம கைல..
எதுவும் வைரஸ் தாக்காத வரையில் ஹாங் ஆகாம ஓடும். கவலையில்லை.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
கணினி தெரிஞ்சவங்க டெக்னிகலா பேசறீங்க
தமிழே தெரியாத தற்குறி பேந்த பேந்த முழிக்கிறேங்க
கத்துக்கொடுத்தா கொறஞ்சா போயிடுங்க
காட்டான் நானும் சந்தோசபடுவேங்க..
ஆர் யு எஸ்னு கேக்கிறேங்க
ஆர் வி எஸ்னு சொல்லுங்க
எஸ். are we yes... o.k ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்லீங்கோ... சும்மா எல்லோரும் ஜல்லி அடிக்கறோம் அவ்வளவுதான். நன்றி pazhaselvaraaju
அன்புடன் ஆர்.வி.எஸ்.
”கவித... கவித... கம்யூட்டர் கவித...”
நல்லா இருக்கு.
வெங்கட்.
நன்றி வெங்கட்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
கணினி கவிஜை அருமை..... கணினி வித்தக கவிராயர் ஆகிவிட்டீர்...
Home edition ல் இந்த கவிதை சரி...professional edition க்கு upgrade செய்தால் சிஸ்டம் கரப்ட் ஆகிவிடும்....
என்பங்குக்கு இரண்டு வார்த்தை....
சிவம் --- வன்பொருள்.....
சக்தி --- மென்பொருள்...
பத்து ....
நீங்கள் ஒரு வார்த்தை டேட்டாபேஸ்
உங்கள் இருவரி லிமரிக் என்னை அபேஸ் செய்துவிட்டது...
நன்றி
//நீ உற்று ரசிப்பாய் என்று தெரிந்திருந்தால்
ஒரு மானிட்டராயேனும் நான் பிறந்திருப்பேனே.
மன்னிகவும்..
(பெண்..)
நீ ஊற்றி ருசிப்பாய் என்று தெரிந்திருந்தால்
ஒரு மானிட்டராய் நான் பிறந்திருப்பேனே.
//ஷட்டவுன் ஆகப் போனவனன் உனைப்
பார்த்த கணத்தில் ரீபூட் ஆகிப்போனேனே!//
மறுபடியும் மன்னிகவும்.....
சாங் ஆக உன் பேச்சு
ஹாங் ஆகிப்போச்சு என் மூச்சு.
கவிதை மிகவும் அருமை...
வாழ்த்துகள்...
ஒரு கம்ப்யூட்டர்காரியின் காதல் கவிதை அப்படின்னு ஒன்னு ட்ரை பண்ணுங்க க.மு.சுரேஷ்.நல்லா இருக்கு. பாராட்டுக்கு நன்றி. ;-)
தலைப்புக்கு கொடுத்து என்னை ஊக்கபடுத்தியதற்க்கு நன்றி..
அசத்துங்க க.மு.சுரேஷ்.
உழுதவன் விதைத்துவிட்டு மாதங்கள் காத்திருப்பான் அறுவடைக்கு ...
பூத்து பிஞ்சாகி காயாகி கனியாகி கதிராகி அறுவடை நாள்வரைக்கும் ...
ஐயோ அது அன்னையின் பிரசவ வேதனைதான் .....
இங்கோ விதைதவுடன் அறுவடை ...
வலைபூவாய்....
முண்டாசுக்காரன் ஏர் உழும் வேளையிலே
கண்டான்கிசெலைக்காரியுடன் கதைத்தபின் காதல் வரும்
இந்த கம்ப்யுடர் காரருக்கு
தட்டச்சை தொட்டவுடன் காதல் வருது..
காதலும் கவிதையும் எந்தவடிவில் இருந்தாலும் இனிமை தான்...
இங்கு எழுதியவர்களோடு என்னையும் ....
ஆர் வீ எஸ் இன்னும் காதலியுங்கள் .....
அரும்பாகி ... பூவாகி.. காயாகி... கவிதை நல்லா விளைஞ்சிருக்கு... Pazhaselvaraaju வாழ்த்துக்கள்... ;-)
கவிதை இது கவிதை.
கணணிக் கவிதை.
ஆர்.வி.எஸ் .... !
கவிதாயினி ஹேமாவின் பாராட்டுக்கு நன்றி.. ;-)
//சிவம் --- வன்பொருள்..... சக்தி --- மென்பொருள்...
எங்கே போறாரு பாருங்க...
பத்தன்னே போற போக்கு ஒன்னும் சரியில்லை அப்பா சார்..
Post a Comment