Wednesday, September 22, 2010

கப்பலில் ஒரு கபடி

kabadikappalகப்பலோட மூக்கு நுனிக்கு வந்து மேலே ஏறி நின்று கை ரெண்டையும் பரப்பி ஏசுநாதர் சிலுவையில் நின்றதுபோல் காதலி நிற்க அப்படியே பின்னாடி வந்து காதலன் நிற்பது போன்ற கப்பல் நாம டைட்டானிக் படத்தில் பார்த்தோம். பார்த்ததோட மட்டும் இல்லாமல் கேட் வின்சலேட் மாதிரி நமக்கு ஒன்னு ஆம்புடாதான்னு அலைந்தோம். கடைசியில் கப்பல் உடைந்து சமுத்திரராஜன் பல பேரை சாப்பிட்டதையும் பார்த்தோம். அதுபோல ஒரு சம்பவம் நடுக்கடலில் நடந்திருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார்கள்.

இந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி 1732 பயணிகளுடன் பசிபிக் சன் என்ற கப்பல் நியூசிலாந்திர்க்கு வடக்கே நானூறு மைல்களில் வனாட்டு தீவுகளுக்கு பயணித்துக்கொண்டிருந்தது. உல்லாசமாக எட்டு இரவுகள் கழிக்க சென்ற பயணிகளுடன் 25 அடி உயர ராட்சத அலைகள் எழும்பி கப்பலை ஆட்டி நடுக்கடலில் எல்லோரையும் இங்குமங்கும் கபடி ஆடி விட்டது. டேபிள் சேருக்கும் பயணிகளுக்கும் நடந்த ரூல்ஸ் இல்லாத முரட்டு கபடி ஆட்டம் இது. டைடானிக் படத்தை ரீலில் பார்த்த ரசிகப்பெருமக்களுக்கு இது ஒரு ரியல் அனுபவம். இந்த 1732 பேரின் ஜாதக விசேஷம் ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை. ஒரு 42 பேருக்கு மட்டும் ஏழரை சனி அதுவும் மங்கு சனியாக ஆட்சி நடத்தியமையால் ஒன்றிரண்டு சிராய்ப்பு மற்றும் காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.  கீழ் காணும் வீடியோ மேற்கண்ட செய்தி இல்லாமல் படித்தால் இது ஒரு நகைச்சுவை காட்சி. நியூஸ் தெரிந்ததனால் ஒரு திகில் காட்சி. ஆரம்பத்திலேயே ஒரு டை கட்டிய குண்டு ஆசாமி தூரத்தில் இருந்து கேமரா பக்கத்தில் இருப்பவர்களிடம் "உக்காரு... உக்காரு.." அப்படின்னு சவுண்டு விடறது தெரியுது. அப்புறம் அவரும் சேர்ந்து தொட்டிலாட்டப்படுகிறார்.




இந்தப் பதிவிற்கு எந்தவிதமான சம்பந்தமே இல்லாமல்...
கட்டில் கப்பல் ஆடுமே...
மானம் கப்பல் ஏறுமே....
ஏட்டுப் பாடங்கள் ஏதும் இல்லாத வீட்டுப் பாடம் இது.....

என்று மது பாலக்ருஷ்ணன் சாதனா சர்கம் ஆகியோர் பாடி வித்யாசாகர் இசையமைத்த டூயட் தவறாமல் நினைவில் வந்து நிற்கிறது. மிக நல்ல வரிகள். இந்தப் பதிவிற்கு வந்த கடனிற்கு இதையும் கேட்டு வையுங்கள்.



ஏம்பா கப்பல் ஆடுமேன்னு பாட்ல வந்தா அதையும் இதோட சேர்ப்பியா. இது கொஞ்சம்  ஓவரா இல்ல என்று கேட்க நினைத்து கேட்காமல் விட்டவர்களுக்கு ஒரு கேள்வி

ரொம்ப நேரம் மனதில் கப்பலாடும் பாட்டு இல்ல?
 -

13 comments:

மோகன்ஜி said...

கொஞ்சம் பதட்டம் தரும் வீடியோ ஆர்.வீ.எஸ். கப்பல்ல போகணுங்கிற ரொம்ப நாள் ஆசையை, தற்காலிகமாய் ஒத்திப போட்டுவிட்டேன். சொல்லித் தரவா.. ஆஹா! ஆஹா!! வேணாம்னா சொன்னேன்??

சைவகொத்துப்பரோட்டா said...

நீங்க வார்த்தைகளில் கபடி ஆடி இருக்கீங்க :))

RVS said...

நன்றி சை.கொ.ப.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

மோகன்ஜி... இந்த பத்துவ எங்கயாவது பார்த்தீங்களா... ஆளையே காணோம்... சரியான பாட்டு அது.... காதலும் காமமும் இணைந்த வரிகள்.. இதுபோல கூட சில பாடல்கள் கலெக்ஷன் இருக்கு...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Chitra said...

க(ப்)ப(ல்)டி ...சூப்பர்!

Madhavan Srinivasagopalan said...

அது ஏன் இப்படி சொல்லுறாங்க, 'கப்பலே கவிழ்ந்தாலும், கன்னத்துல கை வெக்கக் கூடாது'

பத்மநாபன் said...

Post a comment ....சரியான பிரச்சனை பண்ணுது..... உள்ளூர் வலையின் அலை தகராறா இருக்கும்.... இரண்டு வரி அடிப்பதற்க்குள் நான்கு தடவை வெளிய வீசிறுச்சு. டைட்டானிக் தாக்கமாவும் இருக்கலாம்.....
அப்ப,டைட்டானிக் பார்ட் -2 விரைவில் எதி்ர் பார்க்கலாம்.
ஆடியோ, விடியோல நெட்டு ஒவராவே தகராறு செய்யுது.... சரியான பிறகு வர்றேங்க,,,,

RVS said...

வாழ்த்துக்கு நன்றி சித்ரா..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

மாதவா... ஏன்னா கவிழும் போது கன்னத்துல கை வச்சா... எதையும் பிடிச்சிகிட்டு தப்பிக்க முடியாது.. நீச்சல் அடிக்க முடியாது.... இதுமாதிரி பல அசௌகரியங்கள் இருக்கு...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

ஓ.கே பத்மநாபன்... வலைக்கு அலை ஒத்துப் போக மாட்டேங்குது போலிருக்கு.. ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஹேமா said...

ஆர்.வி.எஸ்...கப்பல் கபடி ஆடினாலும் நீங்க தந்த பாட்டு மனதில் நிற்கிறது ஆடாமல் !

RVS said...

சமீபத்திய இசை அமைப்பாளர்களில் வித்யாசாகர் கவனிக்கப்பட வேண்டியவர். ராகத்திற்கு முக்யத்வம் கொடுப்பவர். நன்றி ஹேமா..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

இப்பதான் விடியோ பார்க்க முடிஞ்சுது..... கப்பலுக்குள்ளே பொருளலைகள்......அப்படியும் இப்படியும் அந்த ஆட்டத்தில் எப்படி பொறுமையா படம் எடுத்தாங்களோ......

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails