இந்த பக் கடிப்பதற்கு முன்:
இது நான் எழுதி இரண்டாவதாக அச்சு ஊடகத்தில் வெளி வருவது. முன்னதாக ஒரு கதை, இப்போது இந்தக் கட்டுரை. தற்போது கடைகளில் கிடைக்கும் சூரியகதிர் இதழில் இக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. நமது ப்ளாக் மக்களுக்காக இதோ...
இந்தியா சுகாதாரத்துக்கு பேர் போன நாடு என்று அனைவருக்கும் தெரிந்த கதை தான். சாப்பிடும் இடத்திலேயே கழுவவும், கழுவின இடத்திலேயே படுத்துறங்குவதுமாக வாழ்க்கையை அசால்ட்டாகவும் அழுக்காகவும் கழிக்கும் பெரும்பாலான மக்கள் வசிக்கும் இந்தியாவில் விசேஷ மருத்துவம் செய்துகொள்ள படை படையாய் வெளிநாட்டிலிருந்து வெள்ளை, சிகப்பு, கருப்பாக அனுதினமும் வந்திறங்குகிறார்கள். என்னதான் இத்திருநாட்டின் வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களுக்கு மருத்துவ வசதிவாய்ப்புகள் மங்கலாக இருந்தாலும் வெளிநாட்டவருக்கு இங்கே செய்து தரப்படும் வசதிகள் தாராளம் தான். படுக்கையில் லாவண்டர் வாசனையோடு குளிர் சாதன வசதி பொருத்தப் பட்ட டீலக்ஸ் அறைகள் எல்லா கார்பொரேட் மருத்துவமனைகளிலும் அந்நிய நாட்டவர்க்கு அப்போதே தயார் நிலையில் உள்ளன. இன்பச் சுற்றுலாவிற்க்காக குடும்பம் குட்டியோடு நாம் வெளிநாடு சென்றால் அவர்கள் மருத்துவச் சுற்றுலாவிற்க்காக இந்தியா வந்து ஆஸ்பத்திரி வாசலில் இறங்குகிறார்கள்.
இப்படி இருதயமோ, கை கால் மூட்டு சிகிச்சையோ, குடல் கல்லீரல் போன்ற உடலுறுப்புகளில் கோளாறுகள் இருப்பவர்கள் தங்கள் வியாதிகளை சொஸ்த்தப்படுத்திக்கொண்டு லண்டன் திரும்பியவுடன், சிலரை அந்நாட்டு உள்ளூர் வைத்தியர்கள் பிடித்து சோதனை செய்து இவர்களுக்கெல்லாம் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு "பெப்பே" காட்டும் ஒரு வித அடங்காப்பிடாரி உயிர்மம் வளர்வதாக ஒரு ஆராய்ச்சி அதிர்ச்சி ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். கைக்காசையும் பர்சையும் பதம் பார்க்காமல் எளிய முறையில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்துக்கொள்ள வரும் இந்த வெள்ளைக்கார ம.சுற்றுலா பயணிகளின் மூலமாக இந்தியாவிற்கு வரும் வருமானத்திர்க்கு இந்த ஆய்வு முடிவுகள் பெரிய ஆப்பு வைத்திருக்கிறது.
இந்த Super Bug - கிற்கு நாமகரணம் சூட்டியிருப்பது பற்றி லண்டன் கார்டிஃப் பல்கலைக்கழக ப்ரோஃபசர் வால்ஷ், "எந்த ஊரிலிருந்து இது பிறந்து பரவுகிறதோ அந்த ஊரின் பெயரை இந்த கிருமிக்கு வைப்பது முறையே" என்று நாம் சிதம்பரம், பழனி, டில்லி பாபு என்று பெயர் வைப்பது போன்று கூறுகிறார். 1997 ல் Verona Integron encoded metallo-beta-lactamase 1 (VIM1) என்று பெயர் கொண்ட உயிர்மம் இத்தாலியின் வெரோனா நகரத்திலிருந்து புறப்பட்டது. The German Imipenemase1 (GIM1) என்ற இந்த பாக்டீரியா 2002 ல் ஜெர்மனியிலிருந்து உலகத்திற்கு இறக்குமதி ஆயிற்று. அதுபோல இந்த சூப்பர் பக் (Super Bug) எனப்படும் இந்த உயிர்மத்திர்க்கு New Delhi metallo-beta-lactamase, or NDM-1 என்று நம்நாட்டின் தலைநகர பெயரை இணைத்து இட்டிருக்கிறார்கள். இந்த NDM-I சுய உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் மிக ஸ்ட்ராங்கான ஆண்டிபயாடிக் மருந்துகளைக் கூட வேலை செய்ய விடாமல் செயலிழக்க செய்துவிடும் என்கிறார்கள். இன்னொரு தொல்லை என்றால் மற்ற பாக்டீரயாக்களுடன் தோளில் கை போட்டு தோழமை கொண்டு அதனோடும் ஒட்டி உறவாட ஆரம்பித்துவிடுமாம்.

இது ஒரு தொற்று வியாதி. ஒருவருக்கொருவர் உடலால் உரசிக்கொண்டால் இது பட்டென்று மற்றவருக்கு தொற்றிக்கொள்ளும். வழக்கமான ஜுரம், குமட்டிக்கொண்டு வருவது, உடம்பு முழுக்க சிறு சிறு சிவப்பு கொப்பளங்கள் தென்படுவது, நல்ல காய்ச்சல் போன்றவை பொதுவாக இந்த வியாதியின் அறிகுறிகளாக டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். சில கேஸ்களில் இது H1N1-ஐ விட பன்மடங்கு வீரியம் மிகுந்ததாக இருக்கிறது என்றும் கருத்து நிலவுகிறது. உடலில் இந்த நோய் தீவிரமடைந்தால் ஒவ்வொரு உடலுருப்பாக செயலிழந்துகொண்டு வந்து முடிவில் இந்நோய் தாக்கியவருக்கு வெகுவிரைவில் மரணம் சம்பவிக்கலாம் என்று இந்நோயின் வீரியம் மற்றும் தீவிரம் பற்றி குறிப்பிடுகிறார்கள். ஆனால் சில விஷயாதி இந்திய மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்நீச்சல் போடும் பாக்டீரியாக்கள் முதன் முதலில் பெனிசிலின் கண்டுபிடித்த 1940 ம் வருடத்திலிருந்து நடக்கும் விஷயம்தான் என்று தெகிரியமாக சொல்கிறார்கள். ஆன்டிபயாடிக் மருந்துகளை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே இது போன்ற பாக்டீரியாக்களின் கொட்டத்தை அடக்க உதவும் என்றும் சொல்கிறார்கள்.
இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான செலவு மற்ற தேசங்களைவிட பத்தில் ஒரு பங்குதான் என்று பல புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேர்ந்த மருத்துவர்கள், உடனடி கவனிப்பு, தேர்ச்சி பெற்ற நர்சுகள், சகல வசதிகளும் கூடிய மருத்துவமனைகள் என்று மருத்துவத் துறையின் அணைந்தது பிரிவுகளிலும் கொடி கட்டி பறக்கிறது இந்தியா. இதோடு மட்டுமல்லாமல் மருத்துவத்தோடு கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீகம் என்று பலவழிகளிலும் சுற்றுலா வரும் பன்னாட்டவரையும் கட்டி இழுக்கிறது நம்நாடு. 2008-ல் ஒரு ஸ்வீடன் தேசத்தவருக்கு இந்தியாவில் நடந்த அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்டபோது கண்டுபிடித்த இந்த பாக்டீரியாவிற்கு நம் தலைநகரத்துடன் சேர்த்து இந்தப் பெயர் வைத்துவிட்டார்கள். இதற்கிடையில் சமீபத்தில் ஜப்பானில் NDM-I பாக்டீரியா தாக்கிய ஒருவரை விரட்டி கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பல உலக நாடுகளின் அலறல்களை செவிமடுத்து உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த ஆட்கொல்லி பாக்டீரியாவை எதிர்த்து உலக நாடுகள் போராடவேண்டும் என்றும் அதற்க்கான நடவடிக்கையில் முழுமூச்சில் இறங்க வற்புறுத்தி உள்ளது. எல்லா நாடுகளும் கீழ்காணும் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு பணித்துள்ளது.
நன்றி சூரியகதிர். அட்டகாசமாக படம் போட்ட சூரியகதிர் வரைகலை நிபுணருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
ஸ்பெஷல் பின் குறிப்பு: நான் வெள்ளை கோட் மாட்டிய டாக்டர் அல்ல. எப்பயாவது வெள்ளை சட்டை போடும் என்ஜினியர். பல இடங்களில் படித்து தெரிந்துகொண்ட விஷயங்களை இங்கே கட்டுரையாக பகிர்ந்தேன்.

- அயராத தொடர் விழிப்புணர்வோடு கூடிய கண்காணிப்பு
- தேவைக்கேற்ற அளவு ஆன்டிபயாடிக் உபயோகம்
- மருந்து சீட்டு இல்லாத ஆன்டிபயாடிக் விற்பனைக்கு எதிரான சட்ட நடவடிக்கை
- ஆஸ்பத்திரிகளில் நோய் தொற்றாவண்ணம் சுத்தமாக கை கழுவுதல் போன்ற செயல்கள் முழு உறுதியுடன் பின்பற்றப்படவேண்டும்.
நன்றி சூரியகதிர். அட்டகாசமாக படம் போட்ட சூரியகதிர் வரைகலை நிபுணருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
ஸ்பெஷல் பின் குறிப்பு: நான் வெள்ளை கோட் மாட்டிய டாக்டர் அல்ல. எப்பயாவது வெள்ளை சட்டை போடும் என்ஜினியர். பல இடங்களில் படித்து தெரிந்துகொண்ட விஷயங்களை இங்கே கட்டுரையாக பகிர்ந்தேன்.
29 comments:
உங்கள் கட்டுரை அச்சு ஊடகத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி. மருத்துவச் சுற்றுலாவுக்கு எதிரான விஞ்ஞானிகளின் சதி என்று கூட செய்திகள் வெளிவந்தனவே.
ஆமாம் புவனேஸ்வரி ராமநாதன். ஆனால் அப்படியும் இருக்குமா என்று தெரியவில்லை.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
சூரிய கதிரில் வெளியான கட்டுரைக்கு வாழ்த்துக்கள்! சூப்பர்!
வாழ்த்துக்கு நன்றி சித்ரா...;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
சூப்பர் பக் பற்றிய, சில மேலதிகமான தகவல்களை உங்கள் பதிவு மூலம் அறிந்து கொண்டேன்.
தகவலுக்கு நன்றி .. good & informative
//"எந்த ஊரிலிருந்து இது பிறந்து பரவுகிறதோ அந்த ஊரின் பெயரை இந்த கிருமிக்கு வைப்பது முறையே"//
like mannairvs, mannaimadhavan ?
நீங்க மருத்துவம் படிக்கலேன்னு எனக்குத் தெரியும்.. ஆனால் எப்போலேர்ந்து இஞ்சினியரு ஆனீங்க...?
இவள் புதியவளுக்கு அடுத்து சூர்யகதிரா..... புது பயணம், புது மீடியா, புது சப்ஜக்ட் . ஆர்.வி. எஸ் கலக்கிறிங்க ஆர்.வி எஸ்.
ஆமாங்க , இந்த ஓமன் நாட்டிலிருந்து மக்கள் கழுத்து சுளுக்கிலிருந்து, கண் அறுவை சிகிச்சை வரை இந்தியாவுக்குத்தான் படையெடுக்கறாங்க.அதிலும் குறிப்பா சென்னைக்கு வர்ராங்க .....நமக்கு பெருமையான விஷயம்.
ஆட்கொல்லி பாக்டிரியா வைப்பற்றி...நல்லதொரு எச்சரிக்கை தகவல்...
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.....கரப்பையும் ஒழிச்ச மாதிரி ஆச்சு ..அதுல உள்ள மருந்த எடுத்து பாக்டிரியாவை ஒழிச்ச மாதிரியும் ஆச்சு...
என்ன, அது ஒன்ன வச்சு நாம பூச்சாண்டி காட்டிட்டு இருந்தோம் அதுக்கு வழியில்லாம ஆச்சே.......
ஒ.கே தமிழ் உதயம்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
மாதவா நம்மளையும் பக் ஆக்கிட்டியே... நியாயமா... நான் என்னதான் உதவி பொது மேலாளரா இருந்தாலும் மனசுக்குள்ள இன்னும் எஞ்சினியர் தான் ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
பத்மநாபன்... அடுத்தது என்னோட ஃபீல்ட்லேர்ந்து ஏதாவது எழுதலாம்ன்னு இருக்கேன். நீங்க ஒரு தெம்பு டானிக் சார் எனக்கு. நன்றி.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
oh! really it should be "We are not 'bugs' - but 'debuggers'(of programs - scripts - softwares)"
-- :-)
Great Madhava :) You compensated your earlier comment. Yes DEBEGGERS.... sorry Debuggers... ha ha ha .... ;-) ;-)
anbudan RVS
மென் பொருள் துறை பற்றிதானே ஜோரா தொடங்குங்க... அதுல..நான் கை நாட்டு ...எதாவது கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம். வாழ்த்துக்கள்..நன்றி.
நன்றி பத்மநாபன். மோகன்ஜி ப்ளாக்ல "யானை ஊர்வலம்" நடந்துகிட்டு இருக்கு. போய் கலந்துக்கோங்க...;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
சூரிய கதிரில் உங்கள் கட்டுரை பிரசுரமானதுக்கு வாழ்த்துக்கள் RVS. நான் இது பற்றி படித்த பல செய்திகளை வைத்து, இது ஏதோ சதி வேலை என்றே தோன்றுகிறது. ஆனா ஒண்ணு,நம்மாளுங்களை இந்தக் கிருமி ஒண்ணும் பண்ணாது. சுதேசிக் கிருமி வாழ்க!!
எல்லா நாட்டையும் இந்த விஷயத்தில் வேற விதத்துல சந்தேகப்படறோம் மோகன்ஜி ஆனால் நாமளும் சுத்தமா இருக்கறதில்லை. அதனால தான் அந்த மாதிரி "எதிரி நாட்டு சதி" விஷயங்களை டச் பண்ணாமா டெக்னிகல் விஷயங்களை மட்டும் எழுதினேன். வாழ்த்துக்கு நன்றி. ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
உங்கள் கட்டுரை அச்சு ஊடகத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி.
சூரியக் கதிரில் வந்தமைக்கு பாராட்டுக்கள்.
எதற்காக இந்தப் பெயர் வந்தது என்று புரியாமல் இருந்தேன்.இப்ப புரிஞ்சிகிட்டேன்.
நல்ல விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள். இதை வெளியிட்ட சூரிய கதிருக்கும் நன்றி.
நன்றி சே.குமார்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
நன்றி ஸ்ரீராம். ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
பாராட்டுக்கு நன்றி அமைதி அப்பா...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
மருத்துவச் சுற்றுலாவுக்கு எதிரான சதி!சரி விடுங்க ...bug எல்லாம் bug செய்தார் மேலவாம் ..
சரி விட்டுட்றேன் போகன். ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஏதோ பக் பக்ன்னு இருக்கு பயமான பதிவாக்கும்ன்னு பயந்து பயந்து படிக்கத்தொடங்கினேன்.அருமையான விளக்கம்.வாழ்த்துகள் தோழரே.
நன்றி ஹேமா... யாமிருக்க பயமேன். ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
பக் என்று முதல் பார்த்ததும் பக்பக்பக் பக்கும் பக்கும் மாடப்புறா பாட்டு பற்றியோன்னு :))
அதையும் போட்டுட்டா போறது. நமக்கு பாட்டு போடறதுன்னா அச்சுவெல்லம் சாப்பிடற மாதிரி பத்மா... ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
you missed out totally on the young scientist from chennai who published it in lancet. a grave error in journalistic parlance!
Post a Comment