இப்படித்தான் சினிமா பார்க்கணும்.... இந்தக் குரூப்புல கோயிந்து எங்கே என்று கண்டுபிடிப்பவருக்கு தக்க சன்மானம் வழக்கப்படும். |
சமீப காலமாக, எந்திரன் படத்துக்காக ஊரை ரெண்டு பண்ணிக்கிட்டு சன் அண்ட் கோ அடிக்கிற கொட்டத்தை பார்த்து போஸ்டர் ஒட்ரவன்லேர்ந்து ராக்கெட் தயார் பண்ணி மூனுக்கு நாலுக்கு அனுப்பற விஞ்ஞானி வரைக்கும் படம் எடுக்குரவங்களுக்கு ஒரே அட்வைஸ் மழை. தமிழ் சினிமா எடுங்க. தமிழ்ல எடுங்க. தமிழ எடுங்க. (சீ..சீ.. ஆளை விடுங்க....அப்படின்னு ரெண்டு பேர் சொல்றாங்க) தமிழ் கலாச்சாரத்தை ஒட்டி படம் எடுங்க...அப்புறம் தமிழ் வாசனையோட எடுங்க... மண்ணோட மனம் இல்லாம எடுத்தா தமிழ் திரைச் சூழல் நறுமணத்தை இழந்து நாற்றம் எடுத்து விடாதா, எங்களோட தமிழ் ரத்தம் இதைப் பார்த்து சூடேருது, தமிழை தோலுரிச்சுட்டாங்க, துகிலுருச்சுட்டாங்க, உண்மையிலே இந்த மாதிரி படம் எடுப்பவர்கள் பச்சை தமிழர்கள் தானா? என்று சகட்டு மேனிக்கு சங்கத் தமிழ் நக்கீரன் ரேஞ்சுக்கு நெஞ்சை நக்கும் கேள்விகள் பல கேட்கிறார்கள். கன்னா பின்னா என்று ப்ளாக்கிலிருந்து குட்டிச் சுவர் வரை எல்லாவற்றிலும் எழுதி கிறுக்குகிறார்கள்.
படத்தை பார்த்து திருந்துகிற ஜென்மங்களாக இருந்தால் பழைய சம்பூர்ண ராமாயணம் பார்த்த பின்னாடி எல்லோருக்கும் "பிறன் மனை நோக்கா பேராண்மை" வந்திருக்கணும். அப்படி ஆச்சா. இல்லையே.. பிறன் மனை நோக்கினால் தான் பேராண்மை அப்படின்னு வந்து கள்ளக் காதலும், கள்ளப் புருஷனும் தான் நாட்ல ஜாஸ்த்தியாயிருக்கு. ஓடிப்போய் ஒரே கோயில்ல அம்மாவும் பொண்ணும் ஒரே முகூர்த்தத்ல வேற வேற ஆம்பிளையை (நல்லவேளை! வேற வேற) கண்ணாலம் கட்டிக்கிறாங்க. ஒரே நாஸ்த்தியாயிருக்கு. கப்படிக்குது. காந்தி படம் எடுத்தாங்க. எவ்வளவு பேர் பார்த்து அதை வெள்ளி விழா படமா ஆக்கினாங்க. எங்க ஊர்ல காந்தியும் ஆப்பரேட்டரும் தான் தியேட்டர்ல இருந்தாங்க. ரிலீஸ் ஆன அன்னிக்கி ஊருக்கே 144 போட்ட மாதிரி இருந்தது. வேற ஈ காக்கா இல்லை. கடைசில டிஸ்கவுண்டு ரேட்ல ஸ்கூல் ஸ்கூலா அரை நாளு லீவு வுட்டு பசங்களை யூனிஃபோர்ம்ல வரிசையா வரச்சொல்லி போட்டுக்காட்டினாங்க. அடுத்ததா வந்த நம்ம "பாரதி"க்கு என்னாச்சு. "அச்சமில்லை... அச்சமில்லை.. அச்சம் என்பதில்லையே..." என்று திரைக்கு வந்த பாரதி, "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்..." அப்படின்னு பதறி அடிச்சு முண்டாசு அவிழ ஓடற அளவுக்கு நம்ம ஊரு தமிழ் சினிமா பித்தர்கள் அடிச்சு துரத்திட்டாங்க. அப்படி தியேட்டரை விட்டு போன பாரதியை விடாமல் இழுத்து வந்து விஜய் டி.வி ஐம்பது முறை போட்டுக் காட்டி புண்ணியம் கட்டிக் கொண்டது. இது சும்மா சாம்பிள். இதுபோல பல உதாரணங்கள் இருக்கு.
தம்பி பொண்டாட்டிய அபகரிக்க நினைக்கும் "வாலி" அண்ணன் நல்லா ஜெயிச்சு அவரோட வீரத்தை நிலை நாட்டினாரு. சினிமாவிலிருந்து மெசேஜ் எடுத்துக்கணும் அப்படின்னு ஆரம்பிச்சா எந்த சீனையும் நமக்கு சாதகமாவும் பாதகமாவும் எடுத்துக்கலாம். "உன்னால் முடியும் தம்பி" ஒரு நல்ல படம். "மானிட சேவை துரோகமா.." அப்படின்னு கமல் சோஷியலிசம் பாடுவாரு. சமுதாயத்துக்காக பாடுபடுற கேரக்டர் அப்படின்னு சில பேர் சொல்லலாம். "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"யை மீறின வேஷம் பண்ணினார் கமல் அப்படின்னும் சில தூய வெள்ளை உள்ளம் படைத்தோர் சொல்லலாம். வன்முறை வேண்டாம்ன்னு சொல்ற படம் பூரா வன்முறை இருக்கு அப்படீன்னு புலம்பறாங்க. அதுக்காக வன்முறை கூடாதுன்னு சொல்ற படத்துல அடிதடி காண்பிக்காம எப்படி நிறுத்துன்னு சொல்றது. வலிச்சாதானே அடிச்சான்னு சொல்றோம்.
எல்லா வகையறாக்கள்ளையும் படம் ரிலீஸ் ஆகுது. யாரும் யாரையும் வந்து கையை பிடிச்சு இழுத்து படக் கொட்டாய்க்கு கூட்டிகிட்டு போய் கண்ணிமைக்கு நடுவில குச்சி வச்சு கண்டிப்பா பார்த்தே ஆவணும் அப்படின்னு கட்டாயப் படுத்தல. நம்ம நாக்குக்கு தேவைங்கிற மாதிரி சைவம் அசைவம் சாப்பிடறதில்லையா. அது மாதிரி தான் சினிமாவும். "U" வா இருந்தா குடும்பத்தோட கும்பலா போய் பார்ப்போம். அசைவம் தனியா சாப்பிடனும் போல இருந்தா தனியா போய் "A" இல்லைனா "X" பார்ப்போம். இல்லையா பட்டினி போட்டுடுவோம். சும்மா "தமிழ்", "கலாச்சாரம்", "பண்பாடு" அப்படின்னு ஜல்லியடிப்பதை நிறுத்திவிட்டு நல்ல படங்கள் என்று ஒட்டுமொத்தமாக எல்லோரும் விரும்புவதை ஆதரிப்போம். தயவு செய்து சினிமா என்பது பொழுதுபோக்கே தவிர பாடம் சொல்லிக்கொடுக்கும் டுடோரியல் காலேஜ் அல்ல என்பதை உணர்ந்து உள்ளத் தெளிவுருவோம். படம் பார்க்கப் போனா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.
பின் குறும்பு:
சாரு நிவேதிதா, கேபிள் சங்கர்( இவர் தான் பதிவுலக ஷங்கராம்!) போன்ற சினிமா பற்றி விமர்சனம் எழுதும் ஜாம்பவான்கள் இருக்கும் ப்ளாக் உலகில் இதுபோன்றதொரு பதிவு எழுதுவதற்கு உனக்கு என்ன துணிச்சல் என்று அநியாயத்தை தட்டிக் கேட்கும் கனவான்களே... மன்னிக்கவும். கொஞ்ச காலமாக சினிமாவின் சமூக பயன்பாடுகள் பற்றி விலாவாரியாக நிறைய பேர் எழுதியதால் ஏற்பட்ட பின்விளைவே இது. இனிமே இது போல் நடக்காமல் இருப்பதற்கு நாயகன் பட பாலகுமாரன் வசனம் தான்... "அவனை சும்மா இருக்க சொல்... நான் சும்மா இருக்கேன்...". வணக்கம். (பின்னாடிலேர்ந்து யாரோ "நீங்க நல்லவரா? கெட்டவரா? அப்படீன்னு கேக்கறா மாதிரி இருக்கு.. விடு ஜூட்...)
பட உதவி: ejumpcut.org
பின் குறும்பு:
சாரு நிவேதிதா, கேபிள் சங்கர்( இவர் தான் பதிவுலக ஷங்கராம்!) போன்ற சினிமா பற்றி விமர்சனம் எழுதும் ஜாம்பவான்கள் இருக்கும் ப்ளாக் உலகில் இதுபோன்றதொரு பதிவு எழுதுவதற்கு உனக்கு என்ன துணிச்சல் என்று அநியாயத்தை தட்டிக் கேட்கும் கனவான்களே... மன்னிக்கவும். கொஞ்ச காலமாக சினிமாவின் சமூக பயன்பாடுகள் பற்றி விலாவாரியாக நிறைய பேர் எழுதியதால் ஏற்பட்ட பின்விளைவே இது. இனிமே இது போல் நடக்காமல் இருப்பதற்கு நாயகன் பட பாலகுமாரன் வசனம் தான்... "அவனை சும்மா இருக்க சொல்... நான் சும்மா இருக்கேன்...". வணக்கம். (பின்னாடிலேர்ந்து யாரோ "நீங்க நல்லவரா? கெட்டவரா? அப்படீன்னு கேக்கறா மாதிரி இருக்கு.. விடு ஜூட்...)
பட உதவி: ejumpcut.org
21 comments:
கோயிந்துவின் பார்வையில் பதிவு நன்றாக இருந்தது.
"நீங்க நல்லவரா? கெட்டவரா?"
தெரியலையே......சித்ரா ....;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
நன்றி தமிழ் உதயம்...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
நம்ம மக்கள் கிட்ட எந்த மூட நம்பிக்கையை ஒழிக்கிறார்களோ இல்லையோ....சினிமான்னாலே மக்கள திருத்தறதற்கு த்தான் எடுக்கணும்ங்ற நம்பிக்கையை ஒழிக்கணும்.... இந்த விஷயத்தை நல்ல நகைச்சுவை ஃப்ளோவில் அடிச்சு விட்டிருக்கிங்க ஆர்விஎஸ்.
அப்புறம் கோயிந்து யாருன்னு கேட்டிங்கல்ல..... குவார்ட்டர் கோயிந்தா இருந்தா, அதா, மேல பாருங்க ..மட்டை யாயிருக்கல்ல ரெண்டு, அதுல ஒன்னு..
// தெரியலையே // சிவாஜிவிவேக் ஸ்டைல்ல தானே....
பார்வை அற்புதம்.நீங்க நல்லவர்தான் !
நியாயமான கேள்வி கேட்டீங்க..எனக்கு ஜெயகாந்தனின் 'சினிமாவுக்கு போன சித்தாளு'எனும் சிறுகதை நினைவுக்கு வந்தது.. சினிமாவின் தாக்கத்தால் மக்கள் மாறிவிட்டார்கள் என்று நாமும், மக்களோட தாக்கத்தில தான் இப்படி சினிமா எடுக்கிறோம்னு சினிமாக்கார்களும் மாறி மாறி சொல்லிக்கொள்ள வேண்டியது தான்."உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய்"ன்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியது தானோ?
ரொம்ப சொரியறாங்க... முடியலை அதான் பொங்கிட்டேன் பத்மநாபன். :):):)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
நன்றி ஹேமா... :):):)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
கரெக்ட் மோகன்ஜி... மூஞ்சில அடிச்சா மாதிரி சொன்னீங்க...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஸ்மைலிக்கு எதிர் ஸ்மைலி வச்சுக்கோங்க ஸ்ரீராம். :):):):)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
நல்லாயிருக்கு சார் பதவு..
http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_12.html
ரொம்ப நியாயமான கேள்வி , சினிமா ,இலக்கியம் போன்ற விஷயங்களில் பொது கருத்துக்கு அவசியமே இல்ல, அது எல்லாம் தனி மனித ரசனையை சார்ந்தது , கொத்து பரோட்டா பெருசா , மேக் டொனல்ட்ஸ் சிக்கன் பெருசா என்பது எப்படி அபத்தமான வாதமோ ,அதே போல் தான் இதுவும் , நான் பார்பதும் படிப்பதும் மட்டும் தான் உலகத்தில் சிறந்தது என்று எண்ணலாம் தப்பு இல்ல , ஆனால் அதையே தான் எல்லாரும் ரசிக்கணும் என்று எதிர்பார்ப்பது சரி அல்ல , அதை ரசிக்காதவர்கள் எல்லாம் முட்டாள் என்று காட்சிப்படுத்த படுகிறது .ஹ்ம்ம்
நன்றி ரியாஸ்....
அன்புடன் ஆர்.வி.எஸ்.
கருத்துக்கு நன்றி டாக்டர்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
இந்த போட்டோவை எங்கிருந்து புடிச்சீங்க..
அஹமது இர்ஷாத் ejumpcut.orgங்கற இடத்திலிருந்து புடிச்சேன்... நல்லா இருக்கா? ;-) ;-) ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
தமிழ் உதயம் சொன்ன அதே கருத்து தான் நானும் சொல்கிறேன்.
விஜீஸ்கிட்சன் தமிழ் உதயத்துக்கு சொன்ன அதே நன்றி உங்களுக்கும் சொல்றேன்... ;-) ;-) ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
சார்...
எந்திரன் படத்திற்கு அப்புறம் சன் பிக்சர்ஸ்க்கு ஒரு படம் பண்றீங்களா??
பேச்சு வார்த்தை தொடங்குவோம்...
எம் மேல வச்ச நம்பிக்கைக்கு நன்றி கோபி...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment