Monday, September 13, 2010

எந்திரா....

turban rajiniஎந்திரனின் பிரம்மாண்டத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. எந்திரன் பட ட்ரைலர் விழா. எந்திரன் சம்பந்தமாக எதை எடுத்தாலும் களை கட்டுகிறது. இன்னும் ரஜினி படத்துக்கு எதற்ககெல்லாம் விழா எடுப்பார்களோ தெரியவில்லை. ஆண்பாவம் படத்தில் படப் பொட்டி கொண்டு வரும்போது ஊரே திரண்டு நின்று வேட்டு போட்டு விழா கொண்டாடுவது போல நடந்தாலும் நடக்கும் போலிருக்கிறது. நடக்கட்டும். நடக்கட்டும். நிறைய உழைப்பு வாங்கியிருக்கிறது எந்திரன். ஒவ்வொருத்தர் முகத்திலும் அது தெரிந்தது. நேற்று நடந்த சன் டி.வி ஒளிபரப்பு பார்த்தவர்கள் இதோடு இந்த பதிவிலிருந்து எகிறிக்கலாம். என்னை கவர்ந்த சில எந்திரன் ட்ரைலர் விழா அம்சங்கள்...

எந்திரனில் ரங்குஸ்கி என்று ஒரு கொசு பாத்திரம் வருகிறதாம். (கொசு பாத்திரம் என்றால் சின்ன பாத்திரம் இல்லைங்க. நிஜமாகவே ஒரு இயந்திர கொசு பாத்திரமாம்) ஷங்கர் மறைந்த நம்ம வாத்தியாரிடம் "இது என்ன சார். வித்தியாசமான பேரா இருக்குதே. அப்படின்னா என்ன?" என்று கேட்டதற்கு சுஜாதா "சின்ன வயசுல, என்னை எல்லோரும் இப்படித்தான் கூப்பிடுவாங்க." என்று சொல்லி சிரித்ததாக பகிர்ந்தார்.

பார்த்திபன் தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் ஆரம்பித்தார். "மேன்மக்கள் மேன்மக்களே" அப்படின்னு சொன்னவுடன் அனைவரும் சைலென்ட். "நான் யாரை சொல்றேன்றேன்னா... அதோ அந்த மேல் வரிசையில் உட்கார்ந்து கைதட்டி பார்க்குறீங்களே... ரசிகர்கள்... நீங்கள் தான் மேன்மக்கள்...." அப்படின்னு ஒரு வார்த்தையில் எல்லோரையும் தன்னுடன் இழுத்து பேச ஆரம்பித்தார். சன் பிக்சர்ஸ்க்கு அவர் அளித்த விளக்கம் அற்புதம். முரசொலி மாறன் 'சன்', ராமோஜி ராவ்ன் 'சன்', மற்றும் ஆறுமுகம் 'சன்' என்ற மூன்று சன்களின் படம் இது என்றார் பலத்த கரகோஷத்திர்க்கிடையே. அது போல "தலை இருந்தா தலைப்பா கட்ட முடியாது" என்று ரஜினி தனது மகள் திருமணத்தில் கட்டியிருந்த தலைப்பா படத்தை பார்த்து பேச ஆரம்பித்த பார்த்திபன்... " சில பேர் தலைப்பா கட்டினா பந்தாவா இருக்கும்.. ஆனா ரஜினி கட்டியிருந்தது பந்தாவுக்கு தலைப்பா கட்டின மாதிரி இருந்தது" என்றார். மீண்டும் அரங்கம் அதிர்ந்தது.

கவிப்பேரரசு வைரமுத்து ரஜினியின் உழைப்பை பற்றி சிலாகித்தார். ஆங்கில படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவது போய் எந்திரனை ஆங்கிலத்தில் டப் செய்யும் நிலைமை வரும் என்று அசாதாரண நம்பிக்கை தெரிவித்தார். அதோடு நெட்டில் உலவிய கீழ் காணும் ஜோக் ஒன்றை சொன்னார்.

அமிதாப்பும் ரஜினி இருவரும் ஒபாமாவை பார்க்கச் சென்றார்கள். வேலையில் இருந்த ஒபாமா இருவரையும் பார்த்துவிட்டு "ஆ.. வாங்க வாங்க.. ரஜினி..." என்று அழைத்துச் சென்றுவிட்டார். அமிதாபுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. அங்கிருந்து கிளம்பி வாடிகனில் போப்பை பார்க்க இருவரும் சென்றவுடன், போப் மேடையிலிருந்து கீழே பார்த்து "அடடே... ரஜினி வாங்க வாங்க.. ஏன் அங்கேயே நிக்கிறீங்க..." என்று இறங்கி வந்து தோள் மேல் கைபோட்டு அழைத்துச் சென்று விட்டாராம். அப்ப கூட அமிதாப் கொஞ்சம் தான் டென்ஷன் ஆனாரு. ஆனா அதை விட ஒரு ஸ்டேஜில் மயக்கம் வர மாதிரி ஆகி விட்டது அமிதாபுக்கு. ஏன் என்றால், பக்கத்தில் கியூவில் நின்றிருந்த ஒருவன் அமிதாப்பை தட்டி "ஆமாம் மேடை மேல ரஜினி பக்கத்துல ஒருத்தர் நிக்கிறாரு அவர் யாரு" அப்படீன்னு போப்பை பார்த்து கேட்டானாம்.
இதே ஜோக் நெட்டில் வேறு மாதிரி இரு வருடங்களுக்கு முன்னர் வந்தது.

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினி பேசினார். ஆட்டோ டிரைவர், ரிக்ஷாக்காரன், கண்டக்டர், பால்காரன் போன்ற வேடங்களுக்கு எதுவா இருக்கும் என்னை சைன்டிஸ்ட் வேடத்தில் நடிக்க வைத்த ஷங்கருக்கு நன்றி என்றார். அவர் சிம்பிள் ஆக இருப்பதை பலரும் பாராட்டியதை குறிப்பிட்டு, ரொம்ப உயரத்தில் இருப்பதால், விழுந்தால் அடி பலமாக இருக்கும். அதனால் சிம்பிள் ஆக இருக்குறேன் என்றார். கருணாசும், பாக்கியராஜும் கூட நன்றாக பேசினர். ஒரு காட்சிக்காக ஏழு மணி நேரம் ஒரு பெட்டிக்குள் பாம்பாக அடங்கி உட்கார்ந்திருந்த ரஜினியின் உழைப்பை கருணாஸ் சொன்னதும், நிச்சயம் இவ்வுழைப்புக்கேற்ற வெற்றி கிடைக்கவேண்டும் என்றும் நினைத்தேன். இதில் நம் வாத்தியார் சுஜாதா இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று என் பாழாய்ப் போன மனது அடித்துக்கொண்டது.

சூப்பர் ஸ்டாரின் எந்திரன் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பட உதவி: ndtv.com

21 comments:

Chitra said...

சூப்பர் ஸ்டாரின் எந்திரன் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.


..... Best wishes!!!!!!!!!! :-)

RVS said...

நன்றி சித்ரா...:):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

ரஜினியின் உழைப்போ, சிறந்த மனித குணமோ / பண்போ - சந்தேகப் பட வேண்டிய அவசியமில்லை..
எனினும் 'இந்திரன்' வெற்றி பெறுவதால், இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடையப் போகிறதா..?
சும்மா ரஜினியோட உழைப்பு மட்டும் இருந்தா அவரு மட்டுமே முன்னேருவாறு.. (இப்ப சன் பிக்சர்சும் முன்னேறும்..)
போங்க அப்பு.. புள்ளை குட்டிய படிக்க வையுங்க.எல்லாருகிட்டேயும் உழைப்பு இருந்தாத்தான் சமுதாயம் முன்னேறும்....

RVS said...

மாதவன் உங்களோட சமூக அக்கறை என்னை புல்லரிக்க வைக்குது. சினிமாவை சினிமாவாய் பார்க்காத சமூகம் என்றைக்கும் திருந்தாது. யாராலும் திருத்த முடியாது. புள்ள குட்டிய படிக்க வைக்காம இப்ப யாரும் சினிமா பார்க்க போறதில்லை. கட்அவுட் அபிஷேகம் பண்ற ஆட்கள் கூட ஏதோ ஒரு வேலை பார்த்துக்கிட்டு தான் அதை செய்யுறாங்க. லாபம் இல்லாமல் யாரும் தொழில் பண்றதில்லை. இந்தியப் பொருளாதாரத்தை எப்படியெல்லாம் முன்னேற்றலாம்ன்னு நீங்க ஒரு தனி பதிவு எழுதினால் நன்றாக இருக்கும். இந்தப் பதிவே சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிரத்தானேயன்றி இது ஒன்றும் எந்திரன் பட ப்ரோமொஷனல் பதிவு அல்ல. தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்கு நன்றி. :):):):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்

Madhavan Srinivasagopalan said...

//இந்தியப் பொருளாதாரத்தை எப்படியெல்லாம் முன்னேற்றலாம்ன்னு நீங்க ஒரு தனி பதிவு எழுதினால் நன்றாக இருக்கும். //

அந்த அளவுக்கு அறிவு தெறமை இருந்தா, நா ஏன் மொக்கையா மொக்குறேன்..
Thanks for having high impression about me.. :-) :-)

RVS said...

உங்க தெறமை மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை மாதவன்... :):):):):):))

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அண்ணாமலை..!! said...

பார்த்திபனின் வசனங்கள்
"பச்"-சென்று ஒட்டிக்கொள்கிறது!

RVS said...

ஏற்ற இறக்கங்களுடன் அவர் பேசுவதை... நாம் சொல்லவா வேண்டும். நன்றாக இருந்தது அண்ணாமலை. அதற்காகவே இந்தப் பதிவு.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

suneel krishnan said...

மிகவும் ஆவலாக படத்தை எதிர் நோக்கி இருக்கிறேன் , அதுவும் ரஜினியின் வில்லன் கேரக்டர் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு ...

RVS said...

பார்க்கலாம் டாக்டர்... ஏற்கனவே பயங்கர எதிர்பார்ப்புடன் வெளியான ஒரு ஏஸ் மணியான டைரக்டர் படம் ஊத்திகிச்சு... பார்க்கலாம் :-);-);-)

அன்புடன் ஆர்.வி.ஏஸ்.

பத்மநாபன் said...

டிரையலர் பார்க்காத குறையை போக்கிவிட்டீர்கள் ஆர்விஸ்...
படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துவதற்கு பல காரணங்கள். தயாரிப்பாளரும் நடிகர்களும் கோடி கோடியாக சம்பாரித்தாலும், தமிழக கோடியில் கிராம திரையரங்குகளில் முறுக்கு விற்பவருக்கும், சுற்றி டீக்கடை வைத்திருப்பவர்களுக்கும் ரஜினி படம் வெளியானால் பிழைப்பு ஓடும் என்பார்கள்... அப்புறம் திரைத்தொழிலை நம்பி சுற்றிலும் பேனர் முதல் ஆட்டோகாரர் வரை எல்லார்க்கும் சற்று வியாபாரம் கூடும் அதற்காகவே வாழ்த்துவோம்... மாற்றுத்தொழில் பரிசீலக்கலாம், நம்மாட்களுக்கு பொழுது போக சினிமாவும் வேண்டுமே....

வாழ்த்துவதற்கு அடுத்த காரணம் வாத்தியார் கதை...
வாழ்த்துக்கள்...

பார்த்திபன் இருந்தால் நக்கலுக்கு குறைவு இருக்காது..


ரங்குஸ்கியை தொடர்ந்து, இன்னோரு நகைச்சுவை.
ஜோ வென மழை பெய்தாலும் நம்ம ரங்கராஜன் நனைய மாட்டான்பா மழை சந்துக்குள்ளேயே பூந்து வருமளவுக்கு ஒல்லியான உடல்வாகு என்று அக்காலத்து ஸ்ரீரங்கத்து தெரு நண்பர்கள் சொல்வதாக,வாத்தியாரே அவரை பற்றி சொன்ன இன்னோரு நகைச்சுவை.

மோகன்ஜி said...

நீங்கள் சொன்னதுபோல் நானும் சுஜாதா இருந்திருந்தால்
நல்லா இருந்திருக்குமேன்னு நினைச்சுகிட்டே இருந்தேன். அவர் இல்லாத வெறுமை மனசை நெருடுகிறது..

RVS said...

பத்மநாபன் ... அது எப்படி சார். எந்த டாபிக் எடுத்தாலும் நான் இதை விட்டுட்டேனோ அப்படிங்கற மாதிரி கமென்ட் போடறீங்க. :):) மழையில் நனையாத சுஜாதா பற்றி சொல்லி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். வாத்தியார் பற்றி பேசுவதே ஒரு இன்பம். எமன் அல்பாயுசில் கொண்டு போய்விட்டான். :(

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

சுஜாதா இல்லாதது எனக்கு கழுத்தளவு வருத்தம் மோகன்ஜி. :(:(

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Anonymous said...

Andha vilakkalil enakku kaetadhu jaalraa sattham mattume

Unknown said...

Endhiran alias ROBOT will be a super hit movie in indian cinema. my best wishes for the whole team

Anonymous said...

san pictures know how to make money from everything ..Rajini,Sankar and others are tools to make money.THE DISTRIPUTERS AND THE THEATRE OWNERS ARE THE ONLY PERSONS TO SUFFER WITH THIS EXPERIMENT..

Anonymous said...

All the best for the movie. Like Sivaji, it should also do well in Box Office. Will be a boost for industry.

Anonymous said...

Thalaivar SUPER STARI in ENTHIRAN vettripera vazhthukal.
R.N.RajiAroul.

R.Gopi said...

அடுத்தவர்களை வாழ்த்துவதற்கும் ஒரு நல்ல மனது வேண்டும்... அது உங்களுக்கு இருக்கிறது ஆர்.வி.எஸ்...

எந்திரன் மாபெரும் வெற்றி அடையும்... பல சாதனைகளை படைக்கும்... இது நிச்சயம்... இப்போது, நீங்கள் வாழ்த்தியது கண்டு எனக்கு மகிழ்ச்சி...

எல்லோரும் எந்திரன் பற்றி கன்னாபின்னாவென்று எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நான் படித்த ஒரு பாசிட்டிவான பதிவு இது...

நன்றி தலைவா...

RVS said...

எப்போதுமே ஒரு காரியத்தில் நொள்ளை சொல்றது ஈசி. பண்றது கஷ்டம். இது நம்மளோட பாலிசி கோபி. எந்திரன் ஹிட் ஆகும்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails