முரளி வெகு காலத்திற்கு கோடம்பாக்கத்துகாரர்களுக்கு கல்லூரிக் கதைகளின் நாயகன். மிக இளவயதில் நடிப்பு துறையில் கால் பதித்த முரளி அவருடைய இயல்பான நடிப்பால் பல வெற்றிப் படங்களை கொடுத்தார். ஒரு பெரிய நட்சத்திர அந்தஸ்த்து அவருக்கு கிடைக்காவிடினும் தென்னக சினிமாத் துறையில் ஒரு நல்ல பெயர் இருந்தது. கை காலை வைத்துக்கொண்டு பல வினோத சேஷ்டைகள் செய்யாமல் அமைதியாக நடித்து புகழ் பெற்றவர் முரளி. இவர் நடித்து ஹிட் ஆன சில பாடல்களை இங்கே பதிக்கிறேன். திரையில் எண்ணற்ற மக்களை குஷிப்படுத்திய நடிகருக்கு மரியாதையாக இறந்த பின்னும் அவர் உங்களை மகிழ்விக்க இங்கே....இந்த இளம் வயதில் இறந்த இக்கலைஞனுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.
ராஜாவின் இசையில் முரளி...
பாடகர் முரளி புதியவன் திரைப்படத்தில்..
குயிலியுடன் ஆத்தாடி பாவாடை காத்தாட...
டாக்டர் முரளி ஹீராவுடன் இதயத்தில்.....
குறும்புக்கார முரளி ரேவதியுடன் "சின்ன பசங்க நாங்க"ளில்...
மண்ணுக்குள் வைரமாக முரளி.. இதழோடு இதழ் சேருமில்....
அதர்மம் திரைப்படத்தில் ரஞ்சிதாவுடன் முத்து மணி முத்து மணி பாடல்..
Muthu Mani Muthu Mani
Uploaded by jorasious. - Watch more music videos, in HD!
இப்போதைக்கு கிடைத்த இது என்னுடைய இரங்கற்ப்பா முரளிக்கு. இது ஒரு இசைவழி இரங்கல்.
10 comments:
ஒரு கலைஞனுக்கு, அவரின் பாடல்களையே போட்டு இரங்கல் சொல்லி இருக்கிறீர்கள். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
வெங்கட்.
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி
ஒரு நல்ல நடிகராக, நல்ல மனிதராக வாழ்ந்த முரளியின் திடீர் மரணம் வேதனையானது.
சென்ற வாரம் கூட டி. வி. யில் தன் மகனுடன் வந்து Coffee with Anu நிகழ்ச்சியில் கலந்துகொண்டு
கலகலப்பாக, இயல்பாக பேசினார்.
its shocking news. :(
ஒரு ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான நல்ல நடிகரை தமிழ்த்திரையுலகம் இழந்துவிட்டிருக்கிறது.
தங்களின் இசை இரங்கற்பாவிற்கு மிக்க நன்றிகள் பல!!
நடிகர் முரளி இடைப்பட்ட காலங்களில் யாவர்க்கும் திகட்டாமல் , போரடிக்காமல் , அலட்டலின்றி நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்..சிறப்பானதோரு அஞ்சலியை பதிவாக வெளியிட்டுள்ளீர்கள்...
அவர் நமது தெருவொன்றிலிருந்து கல்லூரிக்கு செல்லும் நபராகவே தோன்றும் அளவுக்கு ஒரு இனிமையை பார்ப்பவர்களுக்கு பரப்பியவர்.
எனக்கு பிடித்த பாடல் இந்த நேரத்தில் , ஒரு கல்யாண ஊர்வலத்தில் ஆர்கெஷ்ட்ரா பாடகராக
``வெண்ணிலவே, வெண்ணிலேவே வெட்கம் ஏனம்மா`` யேதார்த்தமான நடிப்பு.
'எங்கள்' அனுதாபங்கள். சுந்தரா ட்ராவல்ஸ் கூட ஒரு மறக்க முடியாத படம்.
omg! is he dead? sad. எப்பவோ மறந்த முகம் என்றாலும் வருத்தப்படுகிறேன்.
ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்த வெகு சில நடிகர்களில் முரளியும் ஒருவர்....
இளைய வயதிலேயே மறைந்து விட்டார்....
ஓரிரு நாட்களுக்கு முன், அவரை ரஜினியின் மகள் திருமணத்தில் பார்த்தது....
விஜய் டி.வியில் நேற்று "நம்ம வீட்டு கல்யாணம்" நிகழ்ச்சியில் ரஜினி வீட்டு கல்யாணம் காண்பித்தார்கள். மிகவும் சிம்ப்பிளா வந்து கூட்டத்தோடு உட்கார்ந்தார். நினைக்க நெஞ்சு கனத்தது கோபி. :(:(:(
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment