Monday, September 6, 2010

ஒரு குடும்பத்தை உருவாக்கச் சொன்னா..

zuma
கட்டழகனும் கட்டழகியும்
தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி இக்காலத்திலும் மன்னர் போல ஆட்சி செலுத்துபவர். மக்களிடம் நியாயமான வரி வசூல் செய்து, தன் பிள்ளையாண்டான் ரேஷ் டிரைவிங் செய்து தேர்க்காலில் அரைத்த கன்றுக்குட்டிக்காக பசுவின் முன்பாக அவனை தேர்க்காலில் இட்டு,  புகழ்ந்து பாட வந்த களைப்படைந்த மோசுகீரனாருக்கு முரசுக்கட்டில் கொடுத்து, காற்றில் வளைந்து அலைந்து ஆடிய முல்லைக்கு மெர்சிடஸ் பென்ஸ் கொடுத்து, சத்துணவு போட்டு நாட்டுமக்களின் பசிப்பிணி போக்கி,  இப்படியெல்லாம் மன்னராட்சி நடத்துகிறார் என்று எண்ணிவிடாதீர்கள்!!. இவர் ஜாலினோ ஜிம்கானா ராஜா. 'அந்த' விஷயத்தில் அசத்துகிறார். அந்தப்புரம் அமைத்து நிறைய ஆசைநாயகிகளை மணந்து கொண்டு கணக்குவழக்கில்லாமல் பிள்ளை பெற்று தள்ளுகிறார் இந்த மனுஷன்.

அவர்கள் நாட்டில் உள்ள ஜுலு கலாச்சாரத்தில் பலதாரமணமும், பன்னிக்குட்டி போல் பெற்றுதள்ளுவதர்க்கும் தடை ஏதும் இல்லை என்ற காரணத்தினால் அந்த நற்செயலுக்கு தானே ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் இந்த 68 வயது 'இளைய' ஜனாதிபதி. இவர் பெயர் ஜுமா. என்ன மந்திரம், சொக்குப் பொடி போடுகிறாரோ தெரியவில்லை ஃபிகராக வந்து மடிகிறது இவரிடம். இப்போது இவருக்கு பிறக்கப்போவதுடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 22. பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் இவரது இரண்டாவது துணைவியார் மூலமாக 21 வது பிறந்ததாம். நம்ம லல்லு கண்ல இவரை காட்டக்கூடாது. தற்சமயம் கடைக்குட்டியாக பிறந்துள்ள இளவரசன், இவரோடு சமீபத்தில் சீனா சென்றுவந்த இவரின் வுட் பி சம்சாரம் Bongiwe Gloria Ngema என்ற பெண்மணிக்கும் பிறந்ததாம். இதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த புதுவரவு இப்பெண்மணிக்கும் இவரது பாடிகாடுக்கும் பிறந்தது என்று சுற்றுவட்டாரத்தில் பேசிக்கொள்ளவே வைத்தார் ஒரு பெயர் இந்த பிள்ளைக்கு. என்ன தெரியுமா? Manqoba Khol wani என்று. இதற்க்கு என்ன அர்த்தம் என்றால் "believe it".
zuma1
களியாட்டத்தில்...
ஒரு உபரி தகவல் என்னவென்றால் இவரது அந்தப்புரத்தை அலங்கரிக்கும் நாயகிகளுக்கும், இவர் உற்பத்தி செய்த 22 பிள்ளைகளுக்கும் அந்த நாட்டின் வரிப்பணம் £1.3m செலவாகிறதாம். இதெல்லாம் சரி, இந்த அரசியல்வாதிக்கு சில அடிப்படை கேள்விகள்.

1. ரோடு போடுதல், பாலம் கட்டுதல் காண்ட்ராக்ட் வந்தால் எந்த வரிசையில் புதல்வர்களுக்கு பிரித்து கொடுப்பீர்கள்?
2.  எந்த மனைவிமாரின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
3. மொத்தம் எத்தனை பெரிய வீடுகள் மற்றும் சின்ன வீடுகள் நாட்டில் எந்தெந்த தெருவில் வைத்திருக்கிறீர்கள்?
4. நாட்டு நலன்களை மேற்ப்பார்வை இடுவதற்கு எப்போது நேரம் செலவழிப்பீர்கள்?
5. எதிர்காலத்தில் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று நினைத்து ஒரு ஓட்டு வங்கி உருவாக்குகிறீர்களா?
6. உங்களது பிள்ளைகள் தான் என்பதற்கு என்ன அடையாளம் வைத்திருக்கிறீர்கள்?
7. குடும்பமாக ஒரு கல்யாணத்திற்கு கூப்பிட்டால் பஸ் வைத்துக்கொண்டு போவீர்களா?
8. எப்போது அரை செஞ்சுரி போடுவீர்கள்?

தழுவாத கைககள் படத்தில் வரும் ஒரு குடும்பத்தை உருவாக்கச் சொன்ன ஒரு கிராமத்தை உருவாக்கி தந்தார் எங்கப்பா.. என்று ஒரு பாடல் வரும். கிடைத்தால் அதை இங்கு போட்டிருப்பேன். நெட்டில் கிடைக்கவில்லை. எது எப்படி ஆனால் என்ன? நம்ம வேலையை நாம பார்ப்போம், அவர் 'வேலையை' அவர் பார்க்கட்டும்.

14 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல வேலைதான்!!

RVS said...

என்ன ஜுமா கட்சியா நீங்க சை.கொ.ப :):):)
அன்புடன் ஆர்.வி.எஸ்.

வெங்கட் நாகராஜ் said...

ஜுமா - ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை! :):)

RVS said...

அப்டி போடுங்க வெங்கட்... :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

கிராமம் என்ன நகரம் , நாடு என போய்க்கொண்டே இருப்பார் போல இருக்கிறது..சிறந்த அரசன் தன் நாட்டு மக்களை தன் சொந்த மக்களை போல் பார்த்துக்கொள்வான் என்பதை சரியாக புரிந்துக்கொண்டு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இந்த ஆப்பிரிக்க ஜனா.

RVS said...

பத்மநாபன்...அவருடைய சொந்த ஜனங்களின் ஜனா...:):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

R.Gopi said...

வெங்கட் சொன்னது போல் - ஜூமா ஒரு “தீராத விளையாட்டு பிள்ளை”

அவர் பல்லிருப்பவர் பக்கோடா பொட்டலங்களை விழுங்குகிறார்.... நாம அட்லீஸ்ட் வேடிக்கை பார்ப்போமே ஆர்.வி.எஸ்....

ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ
ஜூமா வீட்டினில் பூத்தது ஏராளம்

கண்ணா கண்ணா என்ன சொல்ல
காரணம் ஜூமா உன் மனது தாராளம்

(இதுவும் தழுவாத கைகள் படத்தின் ஒரு பாட்டு தான்)...

RVS said...

"ஏழெட்டு பிள்ளைக்கு தகப்பனையா இன்னமும் அடங்கலையா..."
அப்படின்னு அம்பிகா பாட.. பாட்டு சூப்பரா இருக்கும். ஆனா ஜனாவோடது மிகப்பெரிய வேலை. அதுக்கு அந்த டூயட்டை போடா வேண்டாம்ன்னுதான்... போடலை கோபி... ஏம்பா நீங்களும் வெங்கட்டும் தீ.வி.பியை போட்டு அடிச்சு துவைக்குறீங்க...நாம் பாவம். விட்ருங்கப்பா... :):):):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Seshan/dubai said...

RVS

PAll irukku pattani sapederan. hmmmmmmmmm

RVS said...

சேஷா...சிலபேருக்கு பல் இருந்தும் பட்டாணி சாப்பிட மாட்டேங்ரான்... என்ன பண்றது... :):):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்

மோகன்ஜி said...

//பல்லிருக்கிறவன் பட்டாணி சாப்பிடுறான்..// சேஷன் கமெண்ட்டை ரசித்தேன்.நானும் ஏன் பங்குக்கு "முடி இருக்கிறவன் குடுமி வச்சுக்கிறான்"ன்னு சொல்லவந்து ஜுமா படத்த பாத்தா,மழமழன்னு மொட்டைத்தலை. படிக்கிற நமக்கே மூச்சு வாங்குதே... ஜூமாவுக்கு...

RVS said...

விடுங்க... மோகன்ஜி... மொட்டையா இருக்குருவன் தலைல சந்தனம் வச்சுக்குறான்.. அப்படின்னு ஒரு புதுமொழி சொல்லிடுவோம்.. :):):):)
ஆனா... ஜுமாவை தீராத விளையாட்டுப் பிள்ளை அப்டின்னு இந்த சங்கத்துல சிலபேர் சொல்றது ரொம்ப அநியாயங்கோ....

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அமைதி அப்பா said...

நெல்சன் மண்டேலா ஊர்தானே இது?!

RVS said...

அமைதி அப்பா...பாவங்க மண்டேலா... அவரை விட்ருவோம்... :))))))

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails