ரெண்டு நாள் முன்னாடி சினிமா டூயட்டுகளில் கண்ணன் பதிவில் சுகாசினி மனதில் உறுதி வேண்டும் படத்தில் ஆடியதை பார்க்கவும் மனதில் உறுதி வேண்டும் என்று நான் அடித்த கமெண்ட்டுக்கு கக்கு சிரித்து சின்னாபின்னமானதை தொடர்ந்து, நம் தமிழ் சினிமாக்களில் அட்டகாசமான குதியாட்டம் போட்ட நடிகர்கள் மற்றும் பாடல்கள் ஒரு தடவை பார்க்கலாம் என்று இந்த முயற்சி.
இந்த மாதிரி ஆடல் கலையில் வல்லவர்... முதலிடம் பிடிப்பவர்... நம்ம முருங்கைக்காய் இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள். நிறைய பாடல்களில் அவருடைய உடற்பயிற்சி திறமையை காண்பித்தபோதும் இந்த கீழ்கண்ட பாடலில் அவரது அபார திறமை நமக்கு நன்கு விளங்கும். இவ்வளவு தேகப்பயிற்சி மேற்கொண்டும் உடம்பு ஒன்றும் தேறவில்லை. இதில் அதிக விசேஷம் என்னவென்றால் அவருடைய அந்த கூலிங் க்ளாஸ். பாடல் ஆரம்பத்தில் உடற்ப்பயிற்ச்சிக்கு ஆயத்தமாக நிற்கும் டான்ஸ் பாக்கியராஜை பார்க்கும் போதே நமக்கு சிரிப்பு வந்துவிடும். பார்க்க பார்க்க மனதை கொள்ளை கொண்டு போகும் ஹோலி ஹோலி.. ஹோலி... ஒரே ஆறுதல் எஸ்.பி.பி பாடியது.
அடுத்ததா நாம பார்க்கப்போறது புலியூர் சரோஜாக்காவின் நடன இயக்கத்தில் பிரபு அம்பிகா கையை சொடுக்கி சொடுக்கி ஆடும் ஓ. மானே மானே.. மானே.. உன்னைத்தானே.. இந்தப் பாடல் எடுத்து முடித்தவுடன் அம்பிகாவும், பிரபுவும் விரல்களுக்கு பாண்டேஜ் போட்டுக்கொண்டதாக ஒரு உபரி தகவல். எவ்வளவு முறை பார்த்தாலும் கை சொடுக்கி அவர்கள் இருவரும் கூப்பிடும் அந்த விரலைத் தவிர்த்து மனசு எங்கேயும் செல்லாமல் அடம்பிடிக்கிறது. பாடல் பூராவும் அதிரடி உடற்பயிற்ச்சிகள் உத்தரவாதமாக இருக்கும்.
மேலே பார்த்த இரண்டு ரகளைக்கு பின்னர் போட்டி பாட்டு. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்.. இல்லைனா ஆம்பளிக்கும் ஆம்பிளைக்கும்.. இதை விட காமடி சீன் படத்தில யாராலும் வைக்கவே முடியாது. ஆம்பளைக்கும் போம்பளைக்கும்ன்னா ஆம்பளை சட்டைய கழட்டி போட்டுட்டா பொம்பளை கழட்ட முடியாது உடனே அவங்க தோத்துட்டாங்கன்னு அர்த்தம். ஆம்பளைக்கும் ஆம்பளைக்கும்ன்னா ஒருத்தர் வழுக்கி கீழ விழுந்துட்டா இல்லைனா கால் சுளுக்கிபோற அளவுக்கு நெளிக்க முடியலைனா இன்னொருத்தர் ஜெயித்ததா அர்த்தம். ரெண்டுக்கும் ரெண்டு சாம்பிள் கீழே.. முதல்ல ரஜினியும் பூர்ணிமா பாக்கியராஜும். நம்ம ட்ரில் மாஸ்டரோட திருமதி... டார்ஜான் கணக்கா நம்ம சூப்பர் ஸ்டார் கயித்துல தொங்கி வந்து குதிச்சு ஆடுற பாட்டு..
அடுத்ததா... கல்லூரி வாசல் படத்தில் பிரசாந்த் குடுமி வச்சுகிட்டு காலேஜுல போட்டி டான்ஸ் ஆடுறது. இந்தப் பாட்டை பிரசாந்த் ஆடி முடிக்கும் போது பூஜா பட் ஒரு பார்வை பார்ப்பாங்க பாருங்க.. அதுக்கே அவ்வளவு டான்சும் போச்சு... இந்த படத்துல ஹிட் ஆன பாட்டு என் மனதை கொள்ளை அடித்தவளே... நல்லா இருக்கும்...
அடுத்ததா நம்ம கேப்டன்... வாயை சுழிச்சி... "ஹா.ம்ம்..." சொல்லி சண்டையையும், ஆட்டத்தையும் ஒன்றாக பாவிப்பவர். அண்ணனுக்கு சொல்லிக் கொடுத்த நடன இயக்குனர்களுக்கு ஒரு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம். ஷோபனா ஒரு உலக மகா நாட்டிய மங்கை... அவரோடு பொன்மனச் செல்வனில் ஆடும் கேப்டன் இந்தியக் கொடி பிடித்து ஒரு கையை நேராக வைத்து நடந்து செல்லும் இராணுவ சிப்பாய் போல செய்யும் நடன அசைவுகள் திரை நாட்டிய உலகில் ஒரு உச்சம். ஆனால்... பாட்டு சூப்பர். ராஜாவின் இசை.
இன்னும் வேற யாரு... நம்ம தகடு தகடு சத்யராஜ்... நக்மா கூட வில்லாதி வில்லனில் வித்யாசாகரின் அதிவேக டியூனுக்கு ஒரு ஃபாஸ்ட் ட்ரில். ஆடும் போது மூஞ்சியை சீரியசாக வைத்துக்கொள்ளும் சத்யராஜ் ஒருக்கால் டான்ஸ் மாஸ்டரை மனதில் திட்டிக்கொண்டு டான்ஸ் ஆடுகிறார் போலும். விதி யாரை விட்டது. அதையும் பார்ப்போம்.
கடைசியாக.. இருதய பலகீனம் உடையவர்கள் இதைப் பார்க்காமல் தவிர்ப்பர்களாக.. தங்கச்சிக்காக நம்ம டி.ஆர் ஆ..ஆ...ஆ..டிய பாட்டு. அப்பப்பா.. ஒரு ஐந்து நிமிடம் முழு காமடி விரும்புவோர் பார்க்கவேண்டிய பாடல்... தயவு செய்து யாரும் இதுபோல் கழுத்தை ஆட்டி ஆட வேண்டாம் என்று ஒரு டிஸ்கி போட்டிருக்கலாம் படத்தில். இந்த படம் வந்த புதிதில் ஐந்தாறு பேருக்கு இதுபோல் கழுத்தை ஆட்டி மூளைக்கு செல்லும் நரம்பு பிசகி, லூஸ் ஆகிவிட்டதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தஞ்சாவூரு மேளம்... தாலிகட்டும் நேரம்... கீழே கண்ட டியோவில் வரும் டைட்டிலை கவனிக்கவும். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்...
எப்படி இந்த டான்சு உடான்சு.... கலக்கலா?
பட UDHAVI: mundanestuff.wordpress.com
26 comments:
சரியான குறும்பு :))
பாக்யராஜ் - கையை காலை ஆட்டி பயமுறுதியது பார்த்ததிலிருந்து இன்னும் மீளவில்லை! நல்ல பகிர்வு!
வெங்கட்.
டான்ஸ் உடான்ஸ் ஒரே கலக்கல் .
அந்த ராசுக்குட்டி டான்ஸ் சூட்டிங்கை ஊட்டி பைகாரா நீர்விழ்ச்சியில் நேரில் பார்த்து நொந்தவன் நான்.
பாக்யராஜ் நகைச்சுவை காட்சி வைப்பதில் கில்லாடி,அதைவே நடன காட்சியிலும் அமைத்து நமது வயிறு குலுஙக வைப்பவர்.
என்ன இருந்தாலும் சிம்பப்பாவின் தன்னம்பிக்கை யாருக்கும் வ்ராது.
நன்றி சை.கோ.ப :) :)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ரொம்ப பயந்துட்டீங்கன்னா கூழ் மோர் காய்ச்சி குடிங்க.. சரியாயிடும்... :):):)
கருத்துக்கு நன்றி..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
//சிம்பப்பாவின் தன்னம்பிக்கை யாருக்கும் வ்ராது. //
பத்மநாபன்... சிம்பப்பா.. என்ன ஒரு சொல் ஆளுமை... :):):) பிரமாதம்...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
சிரிச்சு சிரிச்சு பல்லு சுளுக்கிடுச்சுங்கோய்.
ஆம்பிளங்க ஆடுறது இந்திய சினிமாக்கள்ல அவஸ்தை - பாக்குறவங்களுக்கு. ரஜினி இவ்வளவு ஆடியிருக்கிறது ஆச்சரியமா இருக்கு (முத்துனு ஒரு படம் பாத்து ஹார்ட் அட்டேக் வந்துடுச்சு - பக்கத்து சீட் காரருக்கு தான்). ஆனா இந்த சீன்ல பூஜெ விட ரஜினி பெடரா ஆடியிருக்காரோனு தோணுது. அந்தம்மாவுக்கு நடிப்பும் வரலே நடனமும் வரலே.
ஒண்ணு கவனிச்சிங்களா? ரோட்டுல தனியா நடந்து போயிட்டிருப்பாங்க ஹீ ஹீ ரெண்டு பேரும், பாட்டு பாடத் தொடங்கினதும் ஒரு அம்பது பேரு எங்கந்தோ குதிச்சு க்குமு தக்கா க்குமு தக்கானு ஆட்டம்..இருபது வருசமா இந்த ட்ரென்ட் மாறவே இல்லியே?
ரசிக்கும்படியான ஆண் நடனம்னா எம்.ஜி.ஆர் மட்டும் தான்னு நினைக்கிறேன். வடக்கே ஷம்மி கபூர், சமீபத்துல at times ரிதிக் ரோஷன்.. பாக்யராஜுக்கு இணையா மரநாட்டியம் ஆடின இந்தி நடிகர்கள் அமிதாப், ராஜேஷ் கன்னா. அது தான் கெட்ட சொப்பனம்னா கரடியாட்டம் இன்னும் கொடுமை.. அதான் டி ராஜேந்தர்.. ஒரே ஒரு படம் தான் பாத்தேன், அதுல அவர் டேன்ஸ் ஆடும் போதெல்லாம் பல்லாவரம் லட்சுமி தியேடர்ல கதவை அடைச்சுருவானுங்க..sick, twisted minds.
டேன்ஸ் பதிவு coincidental.
அப்பாதுரை சார்.. உங்களை மகிழ்வித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.. ஒன்னு ரெண்டு கதை எழுதிருக்கேன்.. உங்களோட மேலான கருத்துக்கள் ப்ளீஸ்..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
அந்தக் காலத்து ரவிச்சந்திரன் பாடல் காட்சிகள் எதுவும் கிடைக்கவில்லையா? (கும்தலக்கடி கும்தலக்கடி கும்மா !)
ஒரு குறிப்பிட்ட கால அளவில் உள்ள படங்களாக தேர்வு செய்தேன் kggouthaman சார்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஆடவரலாம் ஆடவரலாம்..பாக்கியராஜ் ஆட வரும்போது யார் வேணாம் ஆடலாம் என்று கூறுவது போல இருக்கிறதே.. அதிர்ச்சியோடு இன்னும்...பதிவு அருமை..
ஆதிரா... பதிவு தந்த கடைசி அதிர்ச்சியிலிருந்து நீங்க மீளலைன்னு நினைக்கிறேன்.. ரிலாக்ஸ்... இன்னும் இதுபோல நிறைய அழிச்சாட்டியங்கள் கைவசம் உள்ளது. :):)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
பாக்யராஜின் டிரில்ல பத்தி சொல்றதா? இல்ல ராஜேந்தரின் கரடிஆட்டம் பத்தி சொல்றதா. எங்கண்ணே இதெல்லாம் புடிக்கிறீங்க. சிரிச்சு வயிரெல்லாம் வலிக்குது.
ஹா ஹா ஹா... முடியலைங்க... சிரிச்சு சிரிச்சு முடியல... அதுலயும் டி.ராஜேந்தர் பத்தி சொனனது... ஹா ஹா ஹா
//இந்த படம் வந்த புதிதில் ஐந்தாறு பேருக்கு இதுபோல் கழுத்தை ஆட்டி மூளைக்கு செல்லும் நரம்பு பிசகி, லூஸ் ஆகிவிட்டதாக//
இப்ப எங்களுக்கு தான் சிரிச்சு சிரிச்சு நாக்குக்கு போற நரம்பு என்னமோ டமாஜ் ஆய்டுச்சு... ஹா ஹா ஹா
உலகத்திலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கறதுதான்.. சந்தோஷமடைந்து பாராட்டிய அப்பாவி தங்கமணி, மோகன்ஜி இருவருக்கும் நன்றி.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
சிரிப்பு...!
அந்தக் காட்சியில் ஏதோ ஒரு வகையில் ரசிகர்கள் ரசிக்கணும்... இந்த வகைல ரசிக்க வச்சிட்டாங்க..!
ஆட்டத்துல அசைவுகளையும், பாட்டுல சங்கதிகளையும் ரசிக்கணும்.. ரைட்டுதான்... அவங்களோட அங்க அசைவுகளை நாம சிரிச்சு ரசிக்கிறோம். கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
சிம்பப்பா :) அருமையான பேருங்க :) மானே மானே பாடு கேட்டு இருக்கேன் இப்பதான் பாக்குறேன் :) புதுசா சாம் அன்டேர்சன் வந்துருகாறு பாக்கியராஜ் எல்லாம் ஒன்னுமே கிடையாது ..இந்த சுட்டியை பாருங்கள் http://www.youtube.com/watch?v=HwjszYVHVUA&feature=related
வலிப்பு வந்தது போல அந்த கைய ஏன் இப்படி ஆட்றாரு சாம். இதுக்கு பேர்தான் டான்சுக்கு எதிர் டான்சு போடறதா. ரொம்ப அழும்பு டாக்டர் சுனில் உங்களுக்கு..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
என்ன கொடுமை சார் இது ?
சாய். இதையே சந்திரமுகி பிரபு பாணியில.. "என்ன கொடுமை சரவணன் இது?" அப்படின்னு கூட கேட்கலாம்... :) :) :)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஆர்.வி.எஸ்.சார்....
நடன மன்னர்கள் பதிவு குபீர் சிரிப்பை வரவழைத்தது..
இந்த பதிவை படித்தவுடன் :
என் உச்சி மண்டையில கிர்ருங்குது
கரடி, பாக்யராஜ் வரிசையில் நான் குறிப்பிட விரும்பும் இன்னொரு பிரபலம் ஜெய்சங்கர்...
ஜெய்சங்கரின் அதிரடி நடனம் கண்டு களிக்க “சூப்பர் ஸ்டார்” நடித்த அருணாசலம் படத்தில் வரும் மாத்தாடு மாத்தாடு மல்லிகே பாடல் பார்க்கவும்...
மாத்தாடுல மக்களை பந்தாடுவார் ஜெய்சங்கர்.. ரைட்டு. கோபி :):):)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
kgg..ரவிச்சந்திரன் போல் சுத்தி சுத்தி டேன்ஸ் ஆடியவர்கள் ரொம்பக் கம்மி... குமரிப்பெண் படத்துல அவர் ஆடியிருக்கும் டேன்சை ஜெயலலிதா கூட ஈடுகொடுக்க முடியாமல் தவிப்பதைப் பார்க்கலாம். (வருஷத்தைப் பாரு, அறுவத்தியாறு பாட்டு)
திரையில் டான்ஸ் என்றால் வெகு சிலரே ரசிகர்களை தங்களின் திறமை, நளினம் மற்றும் வனப்பு இவைகளால் கட்டிபோட்டவ்ர்கள்.
குமாரி கமலா, வைஜயந்திமாலா. இ .வி. சரோஜா, பத்மினி, எல் .விஜயலஷ்மி பின்னர் .......ரேவதி. அதன்பின்னர் யாரும் இல்லை.
நடிகர்களில் எம்.ஜி.ஆர். நாகேஷ்,சந்திரபாபு,ரவிச்சந்திரன் பின்னர் ............ பிரபு தேவா...... விஜய். (அரை மனதுடன் ) அவ்வளவுதான்.
மற்றதெல்லாம் பார்த்தால் "மல பந்தனம் " வந்து தொலையும்.
நம்ம பொட்டி மக்கர் பண்ணிக்கிட்டு இருக்கு. அதனால தொடர்ந்து வர முடியல தலைவா.
லேடிஸ் ஆடும் அற்புத நடனங்கள்... ஒரு தனி பதிவுக்கு ரெடியா கக்கு?
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment