Wednesday, September 1, 2010

சினிமா டூயட்டுகளில் கண்ணன்

கிருஷ்ண ஜெயந்தி வந்து கண்ணன் மூடை கிளப்பி பாடாய் படுத்துகிறது. நம்ம கோடம்பாக்கத்துக்காரர்கள் கண்ணனை பாட்டுடைத்தலைவனாக வைத்து நிறைய காதல் ரசம் சொட்டும் பாட்டுக்கள் புனைந்து பின்னி பெடலெடுதிருக்கிரார்கள். அப்படியே நம்முடைய ரொமான்ஸ் சுவிட்சை ஆன் செய்து, மூளையில் ஞாபக அடுக்குகளில் இருக்கும் பல சினிமா பாடல்களை "சர். சர்...." என்று திருப்பி பார்த்தலில் கிடைத்த சில கண்ணன் காதல் பேசும் அற்புத பாடல்களை உங்களுடன் இங்கே பகிர்கிறேன்.  இப்பாடல்கள் முழுவதும் கண்ணனை மட்டும் தான் பாடும் என்பதில்லை. ஆனால் நிச்சயம் காதல் ததும்பும்.

பத்ரகாளி சிவக்குமார் தான் இங்கே கண்ணன்.



காணன் கமல் ராதை ராதாவுடன்....



ராஜாவின் மாஸ்டர்பீஸ்.. பாலமுரளி பட்டைய கிளப்பும் சின்ன கண்ணன் அழைக்கிறான். முதலில் வரும் ஃப்ளுட்டுக்கே நம் சொத்தை எழுதி வச்சுறலாம்.



கமல் கீதாவுடன் நடனமாடும் சலங்கை ஒலி கோபாலன். எஸ்.பி.பியின் காதல் குரலில்... வான் போலே வண்ணம் கொண்டு...



மனதில் உறுதி வேண்டும் (சுகாசினி ஆடுவதைப் பார்ப்பதற்கு கூட) படத்தில் கண்ணா வருவாயோ... இளையராஜா யேசுதாஸ் பாலச்சந்தர் கூட்டணியில்



வித்யாசாகர் இசையில், பாடல் வைரமுத்து என்று நினைக்கிறேன்... ராதையின் நினைவில் கண்ணன் வரும் காதல் தருணங்கள்... நல்ல பாடல்..



ராதிகா மைக் பிடித்து பாவாடையுடன் ரெட்டை வால் குருவியில் பாடும் கண்ணன் வந்து பாடுன்கின்றான் காதல் சொன்னான்... ஸ்டார்டிங் சாக்ஸ்சஃபோன் அற்புதம். ராஜாவுக்கு ஒரு கோயில் கட்டலாம்.



ஒரு ரொம்ப ஓல்ட் சாங். கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி எஸ்.எஸ்.ஆருடன் ..... கண்ணான கண்ணனுக்கு அவசரமோ....



இன்னும் கை வசம் நிறைய கண்ணன் பாடல்கள் இருக்கிறது. யூடுயூபில் இல்லை. முடிந்தால் நெட்டில் ஏற்றி வெளியிடுகிறேன். நன்றி.

35 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அத்தனையும் அருமையான தேர்வுகள்.. மீண்டும் மீண்டு கேட்கத் தூண்டும் பாடல்கள்..

RVS said...

நன்றி வெறும்பய..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பொன் மாலை பொழுது said...

காப்பியை விழுங்கும்போது தானா ஸ்க்ரோல் பண்ணியதை படித்து தொலைப்பேன்.
// மனதில் உறுதி வேண்டும் (சுகாசினி ஆடுவதைப் பார்ப்பதற்கு கூட) //
இதை கண்ணுற்றதும் வாய் வெடித்து சிதறி என் மடி கணனியின் விசைபலகை திரை எல்லாம் பி-பெரி காப்பி அபிஷேகம்.
க்ளாஸ் கிளீனர் போட்டு துடைத்து சுத்தம் செய்துவிட்டு காய வைத்தேன்.
நீங்க ரொம்ப வில்லத்தனமான ஆல்தானையா RVS :)
தொகுப்பு பிரமாதம். நமக்கு அந்த கடைசி பாட்டு ......அது ரொம்ப இஷ்டமாகும்.

RVS said...

கக்கு..நிஜமாகவே சுகாஸினி ஆம்பிளை பாக்கியராஜ். ஓ.கே ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

geethappriyan said...

நண்பரே,கண்ணன் ஸ்பெஷல் பாடல்கள் தேர்வு மிக அருமை,ஃபாலோவரும் ஆகிவிட்டேன்.

பொன் மாலை பொழுது said...

/ கக்கு..நிஜமாகவே சுகாஸினி ஆம்பிளை பாக்கியராஜ். ஓ.கே ;-) ;-)//

அடித்த இடத்திலேலே துடைத்து விட்டு மீண்டும் அதே இடத்தில் அடிப்பது.

பாக்கியராசுக்கும் "டான்ஸ் " பெப்பேதான் கண்ணா! :))

RVS said...

நன்றி கீதப்ப்பிரியன். இளையராஜாவோட பர்த்டேவும் எஸ்.பி.பியோட பர்த்டேவும் ரெண்டு பதிவுகளா கொண்டாடியிருக்கேன். படிச்சீங்களா...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

கக்கு.. இந்த டான்ஸ் மேட்டரை வச்சு ஒரு பதிவு பண்ணட்டா.. தூக்கலா இருக்கும்... என்ன சொல்றீங்க?

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

நீல வண்ண கண்ணனை யாருக்கும் விட மாட்டிங்க போல...

பாட்டுக்கள் எல்லாம் போட்டு அசத்தறிங்க..
பத்ரகாளி—காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா.......

ராதே என் ராதே – கண்ணன் வேஷத்துக்கு எல்லா வகையிலும் கமல் தான் பொருந்துவார்.

சின்ன கண்ணன் அழைக்கிறான் –பாலமுரளி கிருஷ்ணா+ இளையராஜா உச்சம்.

வான்போலே வண்ணம் ...கோபலான்...ஸ்டெப்பு..ஸ்டெப்பு கமல் ரகளை அட்டகாசம்.

சுஹா அக்காவுக்கு தேவை இல்லாத முயற்சி.. அதுக்காக பாக்யராஜ் அளவுக்கு போய்ட்டிங்க....அவரு டிரில் எக்ஸைஸ் பண்ணுவாரு.

நன்றிங்க யுடுயூப்ல ஏத்தி விடுவதற்கு.....

RVS said...

நன்றி பத்மநாபன்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஸ்ரீராம். said...

கண்ணன் மன நிலையே தங்கமே தங்கம், கண்ணன் சொன்ன கீதை, கண்ணா உனைத் தேடுகிறேன், கண்ணனை நினைக்காத நாள் இல்லையே, கங்கையிலே ஒடமில்லையோ, கண்ணன் வருவான் கதை சொல்லுவான், கங்கைக் கரைத் தோட்டம், யமுனா நதி இங்கே, கேட்டதும் கொடுப்பவனே, .........

RVS said...

சரி.. சரி.. ஒ.கே ஒ.கே ஸ்ரீராம்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பொய்யனும்,கயவனும் மலிந்த இந்நாளில்,
செய்வது அறியாமல் திகைக்கும் நல்லவன்..
கையறு நிலயில் அவனைக் காக்கவே,
அய்யனும் வருவானோ ஆயர்பாடியில்?


அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.

RVS said...

ஆர்.ஆர்.ஆர். சார் தன்யனானேன். மட்டற்ற மகிழ்ச்சி. என்னுடைய ஒரு சிறுகதை ஒரு சஞ்சிகையில் பிரசுரமாகி இருக்கிறது. உங்களது குட்டுக்கள் அல்லது ஷொட்டுக்கள் ப்ளீஸ்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பொன் மாலை பொழுது said...

//கக்கு.. இந்த டான்ஸ் மேட்டரை வச்சு ஒரு பதிவு பண்ணட்டா.. தூக்கலா இருக்கும்... என்ன சொல்றீங்க? //
R V S.

அப்படியே ஆகட்டும் பிரபோ!

ஜூட்.............................

நா இனிமே காபி கப் அ தூக்கிண்டு லேப் டாப் பக்கமே வரமாட்டேன்கானும் ஒய். :)

RVS said...

ஓய் கக்கு. நீர் தீராத விளையாட்டு பிள்ளையை தூண்டரீர்... ஜாக்கிரதை... லோகத்தில யாரும் இனிமே ஷேமமா ப்ளாக் படிக்க முடியாது ஆமாம்..... :-) :-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

sakthi said...

நல்லதொரு பகிர்வு

RVS said...

நன்றி சக்தி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Chitra said...

Good collection. :-)

RVS said...

Thank you Chitra :-)

anbudan RVS

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எந்த சஞ்சிகையில் RVS?

RVS said...

ஆர். ஆர். ஆர் சார் கீழ் கண்ட முகவரியை பார்க்கவும்...

http://mannairvs.blogspot.com/2010/09/blog-post.html

அன்புடன் ஆர்.வி.எஸ்.

சாய்ராம் கோபாலன் said...

Kaettadhum koduppavanae krishna krishna - How can you miss that ??

RVS said...

காதல் ரசம் ததும்பும் டூயட் போட்டேன் சாய். அதனாலதான் இதெல்லாம் இடம் பெறவில்லை... ஒ.கே

அன்புடன் ஆர்.வி.எஸ்.

வெங்கட் நாகராஜ் said...

கண்ணன் பாடல்களின் தொகுப்பு அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

வெங்கட்.

RVS said...

நன்றி வெங்கட்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை said...

'கண்ணன் என்னும் மன்னன் பேரை..' பாட்டு டேன்ஸ் படப்பிடிப்பு எல்லாமே டாப்ஸ் (ஸ்ரீகாந்த் உம்மணாமூஞ்சி தவிர) - இந்தப் பதிவைப் படிச்சதும் வெண்ணிற ஆடை பாட்டை ஒரு தடவை பாக்கணும் போல தோணிடுச்சு... (ப்ர்ர்ர்ர்... சுகாசினி டேன்ஸா... பாப்பாரப் பேய் தயிர் கேக்குது டோய்னு எங்க ஊர்ல பேயோட்டும் போது பூசாரி கத்துவாரு.. அதை ஞாபகப் படுத்திட்டீங்களே.. விபூதி இட்டு வேப்பலை அடிக்க இப்பல்லாம் ஆளு கிடைக்காது ஸ்வாமி)

RVS said...

அப்பாதுரை சார்...சுகாசினி ஆடும் போது அந்தப் பாட்டுல நல்ல டான்சரா அந்த ஆம்பிளை ஆடும் போது சுகாசினி மனசு என்ன பாடு பட்டிருக்கும். நினைக்கவே நெஞ்சு நடுங்குது..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை said...

கூட ஆடுற அந்த ஆளு நெஞ்சுனு சொல்லுங்க சார்... நாமளாவது கண்ணை மூடிக்கலாம், அந்த ஆளு பாவம் கூடவே ஆடியாகணும் (சுகாசினியோட டேன்ஸ் ஆடுற காட்சி இருந்தா தனியா கூடுதல் காசு கேட்டிருப்பாங்களோ?)

RVS said...

ஹா.. ஹா.. நல்ல ஹாஸ்யம் அப்பாதுரை சார்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை said...

'கண்ணன் எங்கே..ராதை மனம் ஏங்குதம்மா'னு ஒரு பழைய்ய்ய பாட்டு - சங்கர் கணேஷ்? - இந்திப் பாட்டு மெட்டைத் திருப்பிப் போட்டு இந்தியை விட அமக்களமா அமைஞ்ச பாட்டு. எஸ்பிபியோட இடைக்கால ஹிட். எத்தனையோ நாளாச்சு கேட்டு.

RVS said...

அப்பாதுரை சார்.. எங்கயாவது கிடைக்குமான்னு ட்ரை பண்றேன்... என்கிட்டே பழைய எஸ்.பி.பி கலெக்ஷேன் இருக்கு. "அன்பு மேகமே..."ல ஆரம்பிச்சு... யுடியுபுல நிறைய கிடைக்கமாட்டேங்குது. மக்கள் நிறைய குப்பை மியூசிக் கேட்கறாங்க.. :( அதிசயமா "படைத்தானே பிரம்ம தேவன்.. " கிடைச்சது.. அதுவும் ஓட மாட்டேங்குது.. பார்க்கலாம் ஒரு குட் ஓல்ட் எஸ்.பி.பி. கலெக்ஷன் போடா முடியுதான்னு...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

அப்பாதுரை சார் படைத்தானே பிரம்ம தேவன் இங்கே.. http://www.youtube.com/watch?v=U0YfsSFqSZQ

அன்புடன் ஆர்.வி.எஸ்.

R.Gopi said...

இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறதோ ஆர்.வி.எஸ்.?

இந்த பதிவின் பாடல்கள் அனைத்தும் பலே ஜோர் ரகம்..

அதிலும், நீங்கள் சொன்னது போல், சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடலில் வரும் அந்த ஃப்ளூட் பிட்..

நேற்று இல்ல, நாளை இல்ல, எப்பவும் நீ ராஜா..ன்னு சொல்ல வைக்குது...

RVS said...

ராஜாவின் ஆரம்பகால ஹிட்ஸ் ஒன்று போடலாம் என்று எண்ணம். பார்க்கலாம் கோபி. :):):)
ராஜா பிறந்தநாளுக்கு ஒரு பதிவு போட்டேன்.. அதையும் படிச்சு பாருங்க கோபி.. :) :):)
http://mannairvs.blogspot.com/2010/06/blog-post_02.html
அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails