Wednesday, September 1, 2010

நானும் ஒரு எழுத்தாளி

நாய் சேகர் வடிவேலு போலீஸ் ஜீப்பில் அழும்பாக தொற்றிக்கொண்டு, "யே நானும் ரௌடிதான்யா.." என்று அழுக்கு கோட்டு போட்ட அரை பாடியை வெளியே காட்டி தொங்கிக்கொண்டு கையாட்டி டேசனுக்கு புறப்பட்டதை போல இந்த டைட்டிலை எனக்குள்ளே ஒன்றிரண்டு முறை படித்துப் பார்த்தேன். அட. அசல் அப்படியே இருக்குதுப்பா.  இந்த நாய் சேகர் உதாரணத்தையும் பிரபல எழுத்தாளர்கள் இணையத்தில் கட்டி உருண்டு புரண்டு சண்டை இடுவதையும் யாரும் கனவில் கூட சம்பந்தப்படுத்தி பார்ப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என்னுடைய ராட்ஷச ஷாப்பிங் என்ற சிறுகதை இவள் புதியவள் என்ற பத்திரிக்கையில் இந்த மாதம், அதாவது செப்டெம்பர்  2010 இதழில் வெளிவருகிறது. சூரியகதிர் என்ற அரசியல் மாதமிருமுறையின் பெண்களுக்கான பத்திரிகை இவள் புதியவள். எடுத்தவுடனேயே ஒரு மகளிர் பத்திரிக்கையில் என் கதை இடம் பெறுவது நான் செய்த பாக்கியமே. தாய்க்குலங்களின் பேராதரவுடன் வெற்றி நடை போடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, உங்கள் வாழ்த்துக்களுடனும் தான். என் கதைக்கு ஒரு ஓவியரை வைத்து இரண்டு படம் போட்டு.....இரண்டு பக்கத்துக்கு... என்னமோ நடக்குது..
 
கதை பெயரில் தர்மபத்தினி பெயரை சேர்த்து சங்கீதா ஆர்.வி.எஸ் என்று பயபக்தியோடு ஆரம்பித்திருக்கிறேன். நம்முடைய ஞான சக்தி, இச்சா சக்தி, க்ரியா சக்தி எல்லாமே அவங்கதான். (அப்பாடி! முடிஞ்ச வரைக்கும் ஐஸ் வச்சாச்சு.. இனிமே "இந்த உலகத்தோட ஒட்டுறவே இல்லாத மாதிரி எப்பப்பாத்தாலும் கம்ப்யூட்டர் முன்னாடியே காலத்தை கழிங்க..." என்கிற இடி இருக்காது என்ற நம்பிக்கையில்...).  கூட்டத்துல யாராவது வாத்தியார் சுஜாதா அப்படின்னு பேர் பெற்றார் என்பதற்காக இவன் சங்கீதா என்று வைத்திருக்கிறான் என்று நினைக்காதீங்க. இது சும்மா ஒரு ட்ரை. பாடப் பாட ராகம் மாதிரி, எழுத எழுத ஏதோ வர மாதிரி ஒரு நினைப்பு. பார்க்கலாம். இதோ அந்த அச்சில் பதிந்த பக்கங்கள்..

shop1

shop2

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. எனக்கு முதலார்வம் ஊட்டிய அலுவலக நண்பர் ரவி, சதா சர்வ காலமும் வீட்டில் கணினி முன் அமர்ந்த போதும் பொறுமையாக சகித்துக்கொண்ட என் மனைவி மற்றும் மக்கள், அடிக்கடி பின்னூட்டமிட்டு தெம்பூட்டிய அனைத்து பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

பின் குறிப்பு: அச்சு ஊடகத்தில் எழுத ஆரமிச்சாச்சு. நாட்டு மக்களை இனிமேல் ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது.

24 comments:

RVS said...

வாழ்த்துக்களுக்கு நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்..

RVS said...

நன்றி அஹமது இர்ஷாத்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Ravichandran Somu said...

வாழ்த்துகள்! தொடரட்டும்.......

நாய் சேகரிலிருந்து பெரிய தாதாவாக வளர்வீர்கள்:))

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

RVS said...

வாழ்த்துக்கு நன்றி ரவி. வயசாக வயசாக தாத்தாவாக வளர்வேன். தாதாவாக வளர்வேனா என்று தெரியவில்லை. நன்றி :-) ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் ஆசிரியரே!!

RVS said...

நன்றி சைவம். நான் ஆ"சிறியன்" தான் :-) :-) :-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

வாழ்த்தோ வாழ்த்துக்கள் ஆர்.வி.எஸ்...விட்டம்மாவுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்திட்டிங்க..இனி நேராநேரத்து க்கு சூடா காபி , பக்கோடா இத்யாதிகள் உங்க கம்ப்யுட்டர் டேபிளுக்கு வந்துட்டே இருக்கும்..கவலை இல்லாமல் தட்டி க்கொண்டெ இருக்கலாம்.

ஒட்டடை, முகாரி, லிப்ட் ஓட்டபந்தயம், ஜருகண்டி.. ஷாப்பிங் அலப்பறை அருமை...

ஜீப் ஏறிட்டிங்க..தொன்னூறில் பறக்க வாழ்த்துக்கள்.

RVS said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பத்மநாபன்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

//வாழ்த்துக்கு நன்றி ரவி. வயசாக வயசாக தாத்தாவாக வளர்வேன். தாதாவாக வளர்வேனா என்று தெரியவில்லை. நன்றி :-) ;-) ;-)//

'தாதா' என்று ஹிந்தியில் சொன்னால் அதன் தமிழர்த்தம் 'தாத்தா'.....
எனவே.. நீங்கள் கண்டிப்பாக வயது செல்ல செல்ல, 'தாதா' தான்.
வாழ்த்துக்கள்.. ('தாதா'க்கு அல்ல, உங்கள் படைப்பு அச்சுப் பதிப்பில் வர ஆரம்பித்தமைக்கு )

RVS said...

நன்றி மாதவன்..

இப்படிக்கு அன்புடன் தாதா ஆர்.வி.எஸ்.

Anonymous said...

வாழ்த்துக்கள் சார் ...

RVS said...

சார் போட்டு வாழ்த்து சொன்ன அனானிக்கு ஒரு தேங்க்ஸ்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

geethappriyan said...

நண்பரே கதை இனி அடிக்கடி வெகுஜனத்தில் வரட்டும்,கல்கியிலும் வெளியிடுங்கள்,புதியவர்களுக்கு நன்கு வாய்ப்பு வழ்ங்குகிறார்கள் என கேள்விப்பட்டேன்.

மோகன்ஜி said...

வாழ்த்துக்கள் RVS.ஒரு பெரிய ரவுண்டு வாங்க. அடுத்த ஸ்டாப் ஆனந்த விகடன் தான்! O.K??

RVS said...

வாழ்த்துக்கு நன்றி மோகன்ஜி

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஸ்ரீராம். said...

அப்போ அடுத்த கட்டத்துக்கு போயிட்டீங்கன்னு சொல்லுங்க... வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

RVS said...

அடுத்த கட்டமா கண்டமா காண்டமா என்று பார்க்கணும் ஸ்ரீராம். வாழ்த்துக்கு நன்றி..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Chitra said...

Best wishes! :-)

RVS said...

நன்றி சித்ரா மேடம்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை said...

கேள்விப்படாத பத்திரிகை - தமிழில் எக்கச்சக்கமா வார,மாத இதழ்கள் வந்திருப்பது ஆறுதல். நாலஞ்சு வார மாத பத்திரிகைகள் ஊரை ஏமாத்திக்கிட்டிருந்த காலம் எல்லாம் போயாச்சு போல. குட்.

உங்க கதை நல்லா இருக்கு. அடுத்த முறை சென்னை வந்து ஒரு வேளை உங்கள சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சு ஒரு வாய் காபியை இழக்கப் போறேன்னு நினைக்கறேன் இருந்தாலும் நீங்க மாஞ்சு மாஞ்சு எழுதி அவங்களுக்கு க்ரெடிட்டா? புருசன்னா இப்படியில்ல இருக்கணும்.. ம்ம்ம்.. போடு தோப்புகரணம்... ஹி ஹி நான் எதுவும் சொல்லலிங்க.

RVS said...

இன்னும் க்ரஹச்த்தாஸ்ரமத்தை கடை பிடிக்கரதனால வேற ஒன்னும் செய்யமுடியாது.:):) ஆபிஸ்ல ஒன்பது மணி நேரம் வெட்டிமுறித்தும் போகவர ரோடில் மூணு மணிநேரம் கார் ஒட்டியும் ஹார்ட் வொர்க் பண்ணிய பிறகு வீட்டிற்கு வந்தால் பரவாயில்லை எழுதட்டும் என்று அவர்கள் விட்டதற்காக... தோப்புகரணம் போட்டாச்சு.. அடுத்த முறை நீங்கள் சென்னை வந்தால் அவசியம் சந்திப்போம்...ஆவலாக இருக்கிறேன்... :).. வந்தால் காஃபி நிச்சயம் உண்டு.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ராட்சச ஷாப்பிங் கொஞ்சம் அசுரத்தனமாய்......

RVS said...

ஆர்.ஆர்.ஆர். சார். கருத்துக்கு நன்றி. உங்களைப் போன்ற பெரியோரின் வாழ்த்து என்னை வளப்படுத்தும் நம்பிக்கையில்....

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails