
குதிர் போல வளர்ந்திருக்காய்.. தூண்ல பாதி நிக்கறாய்... கையை பிடிச்சா கல்யாணமா... என்று சொல்லி இடுப்பை பிடித்து ஆடும் கமலின் "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்.." மை.மத.கா.ராஜன் படத்தில் கிணற்றை சுற்றி ஆடும் பாட்டு...
"ஓரப் பார்வை வீசுவான் உயிரும் கயிறு அவிழுமே..." அப்பப்பா.. மலபார் தேசத்தில் படகின் மேல் பம்பரம் ஆடும் ப்ரீத்தி ஜிந்தா.. உயிரே படத்தில்...
பழி சொல்லக் கூடாது புகழ் உதித் நாராயண் பாடிய ரஜினி, மீனாவின் "குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ..."
கதகளி ஆடும் மக்களுடன் தகதிமி ஆடும் அசின். சூப்பர்.
பாலக்காட்டு மாதவன் பாக்கியராஜ் மலையாளத்தில் பாட ஆரம்பித்ததால் இதுவும் இங்கே. சப்தஸ்வர தேவி உணரு...
தன்னைவிட இளசான ராதாவிடம் என் உயிர் கண்ணம்மாவில் முண்டு கட்டி போட்டி போடும் லக்ஷ்மிக்காக இதுவும் இந்த லிஸ்டில். ராஜாவின் இசையும் அதற்கேற்ற ரம்மியமான பின்னணியும் இதற்க்கு பிளஸ்.
இந்தக் கலெக்ஷனில் ஒரு குறையாக மலபார் போலீஸ் படத்தில் சத்யராஜுடன் குஷ்பு குதியாட்டம் போடும் "பாலக்காட்டு பொண்ணு பம்பரம் போல கண்ணு..." எங்கே தேடியும் கிடைக்கவில்லை. யாராச்சும் கிடைச்சா சொல்லுங்க சேர்த்துடுவோம்.
கடைசியாக... விவேக் மலையாள நாட்டவராக சண்ட மேளத்துடன் புகுந்து கலாய்க்கும் ஒரு காமெடி. இது ஓணம் சூப்பர் ஸ்பெஷல்.
விஷ் யூ ஹாப்பி ஓணம்.
4 comments:
entha sare, achanukku ende onam vazthukkal...
எந்தா மணி சாரே.... சுகந்தன்னே.. நிங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பிரேமையுடன் ஆர்.வி.எஸ்.
இன்று ஒணம் ஸ்பெஷலாக எங்கள் பாலைவன மெஸ்ஸில் இலை போட்டு நல்ல மதிய உணவு. கேரள மக்கள் நன்றாக கவனித்தார்கள்.
நிங்களும் ஒமன மூடில் அடிப்பொலியாகவே செலக்ட் செய்துள்ளீர்கள். (அடிப்பொலின்னா மலையாளத்தில் அழகுன்னு சொல்வார்கள்..தமிழ்ல சூப்பர்ன்னு அர்த்தம் )
கமல் – ஊர்வசி..... திரிபுரசுந்தரி- காமேஷ்ஷ்வரன்......குபுக் சிரிப்பு வரவைக்கும் நகைச்சுவை...கிராமமும் குக்கா?
நெஞ்சினிலே---ஜானகியம்மாவின் அற்புதக்குரல்.
முத்து......சூப்பர் ஸ்டாரின்..இறுக்கி அனைச்சு ஒரு.............
செந்தமிழோடு கதகளி...
மாதவனும் –ட்யுனும் மறக்கமுடியாத அந்த எழு நாட்கள்.
அலைகள் ஒய்வதில்லை ராதே.......
பால் வடியும் முகத்திற்கு பால் வடியவிட்ட விவேக்..
ஜோரோ..ஜோர்.
பத்மநாபன் சார், ஒவ்வொரு வீடியோவிற்கும் உங்களது ஸ்பெஷல் விளக்கம் அசத்தல்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment