
காலையிலும் மாலையிலும் சென்னையில் ஒரு லட்சம் வண்டி பின்னாடி இடிக்காமல் உரசாமல் செவ்வனே போய் வருகிறேன். இரண்டு கால் வண்டியின் பாய்ச்சலில் சென்றுகொண்டிருந்த நான் மூன்று வருட காலமாக நான்கு சக்கரத்தில் சங்கடமாக சகடை உருட்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ரோடில் தையல் மெஷினை தோளில் சுமந்து வரும் தையல்காரர் காலால் பெடல் செய்து தைப்பதை விட கிளட்ச்சுக்கும் ஆக்சிலேட்டருக்கும் மாறி மாறி நான் "தைய... தக்கா.." என்று சாணி மிதிப்பது அதிகம். ரொம்ப நாளாச்சு ஆத்திசூடி படிச்சு. பொண்ணோட புஸ்த்தகத்தில் நேற்றைக்கு பார்த்ததும் ஒன்னு எழுதிப் பார்க்கலாம் அப்படின்னு ஒரு சிறிய முயற்சி.
- அலட்டும் ஃபிகரை பார்க்காமல் ஓட்டு
- ஆரணை அளந்து அடி (ஹார்ன்)
- இண்டு இடுக்கு புகாதே
- ஈ ரோடு போயி திருச்சு வா (யூடர்னில்)
- உரசுவது மாநகர பஸ்
- ஊதலுக்கு ஒதுங்கி உதவு (ஆம்புலன்ஸ் சவுண்டு)
- எட்டா சிக்னலை வெட்டன மற
- ஏட்டு சைகைக்கு சட்டென்று நில்
- ஐயோ பாவம் சைக்கிளுக்கு வழி விடு
- ஒருமையில் திட்டாதே (வழி விடாதவர்களை )
- ஓரத்தில் ஒருங்கே நில்
- ஔடதம் டாஷ்போர்டில் வை
விண்ணுலகிலிருக்கும் ஔவையார் காதுக்கு இது எட்டினால் என்ன ஆகும். ரொம்ப பயமா இருக்கு. கீழ்காணும் வீடியோவில் "ஒப்புர ஒளுகு...." என்று பாடும் ஆத்திசூடி பாடலை மன்னிப்பவர்கள் இந்த பதிவையும் மன்னிப்பார்களாக.
பட உதவி: tamilmoviewaves.net
24 comments:
அது 'ஒப்புர ஒழுகு' தானே. அதையேன் இப்படி பாடுகிறார்கள்?
வீடியோ கிளிப் வேறு போட்டு புண்ணியம் கட்டிகொண்டீர்கள்.
கக்கு... அது ஸ்டைலா பாடறாங்களாம்... தலையெழுத்து...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
nice.. as usual
Thanks Madhavaa..
anbudan RVS
ஒவ்வையாரை rap பாட வைக்கும் உலகமடா இது! :-(
அட்டு ஃ பிகருக்கும் ஆதரவு கொடுத்து இயன்றவரை ஈயென்றிளித்து உதவிக்கரம் கேட்போரை ஊசலாடவிடாமல் என்றும் வண்டியில் ஏற்றிக்கொள்வது ஒளிந்து ஓடுவதைவிட நல்லது...! என்னால் முடிந்தது..!!
சித்ரா, நீங்க அந்த பாட்டை தானே சொல்றீங்க?
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஸ்ரீராம் சூப்பர்... அட்டகாசமா இருக்கு..
அன்புடன் ஆர்.வி.எஸ்
மவனே நாசமாக்கிட்ட போ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ
பாராட்டுக்கு தேங்க்ஸ் தமிழ் யாளி. இது பாராட்டுதானே?
அன்புடன் ஆர்.வி.எஸ்.
புதிய ஆத்திசூடி சூப்பர்... ஹா ஹா ஹா... நல்ல கற்பனை
ரசித்ததற்கு நன்றி அப்பாவி தங்கமணி.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
கலக்கல்.................:)))
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரவிச்சந்திரன்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
போக்குவரத்து சூடி சூப்பர் . போக்குவரத்து குறள், போக்குவரத்து வெண்பா என மேலும் மேலும் வழங்க வாழ்த்துக்கள்....
டர்ணா...ஹா... டர்ணா.பாட்டையும் அழகாக ஃபிட் அப் செய்து வீட்டீர்கள்.
தீராத விளையாட்டு பிள்ளையான உங்களுக்கு ஒரு விளையாட்டை தொடர அழைத்திருக்கிறேன்.
பத்மநாபன் சார். வேண்டாம் ஞொய்யாளுட்ட மாட்டிக்காதீங்க... சிக்கி சின்னாபின்னமாகப் போறீங்க.. ஹும்.. விதி யாரை விட்டது. கொஞ்சம் டைம் கொடுங்க வந்து ரவுண்டு கட்டி விளையாடறேன்....
அன்புடன் ஆர்.வி.எஸ்.
நன்றாக உள்ளது. தொடர்ந்து ஓளவையாரையே காலாயுங்கள். அம்மணி மேல் உலகத்தில் இருக்கிறார்
பிரச்சினை ஒன்றும் வராது.
வாத்தியார் வந்து கமென்ட் போட்டது இந்த மாணாக்கனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அடிக்கடி வந்து போங்க சார்..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஆத்திச்சூடியை மறக்காமல் இருக்கிறார்களே அதற்காக பாராட்டலாம். இந்த 'ஒளுகு' ஆத்திச்சூடிக்கும் மட்டுமல்ல எல்லாத் தமிழும் இப்படித்தான் திரைப்படங்களில்.
கருத்துக்கு நன்றி செப். பழனி முருகன்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஆத்திச்சூடி அருமை போங்க
பாராட்டுக்கு நன்றி அன்பரசன்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
இதை ஆங்கிலத்தில் A FOR ACCELERATOR,B FOR BRAKE ,C FOR CLUTCH,D FOR DIPPER,E FOR ENGINE , F FOR FUEL, G FOR GEAR, H FOR HORN I FOR INDICATOR என்று புள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.
ட்ராஃபிக் ரைம்ஸ் ஃபார் சில்டரன் அப்படின்னு போட்டுடலாம் ஆர்.ஆர்.ஆர். சார். நல்லா இருக்கு..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment