Saturday, August 14, 2010

சொற்சித்திரங்களும் வாழ்வின் கொண்டாட்டங்களும்

1. சொற்சித்திரங்கள்.
kaatruஎதையுமே சிம்பாலிக்கா சொன்னால்  நம் மக்களுக்கு பளிச்சுன்னு புரியும். தங்கச்சி செண்டிமெண்ட் இயக்குனர் தாடி டி.ஆர் சாரோட தங்கைப் பாசம் பொங்கி வழியும் படங்களில் வரும் சில பாடல்களில் பல அசுரத்தனமான செட்கள் அமைத்து "கர்ப்பிணி..." என்று பாடலில் ஒரு வரி வந்தால் உடனே ஒரு பிள்ளைத்தாச்சி பெண் நடக்க முடியாமல் இடுப்பில் கைவைத்து ஆடி ஆடி நடந்துபோவதை காண்பிப்பார். இது போன்று பல சீன்கள்  காண்பித்து பாசத்தால் நம்மை சீட்டோடு இங்குமங்கும் அசையமுடியாமல் ஒரு தாம்புக்கயிற்றில் கட்டிப்போட்டு விடுவார். நல்லவேளை கர்ப்பிணி என்று பாடலில் வந்தது. வேறேதாவது என்றால் சென்சாரிலிருந்து படமே வெளியே வராது. ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு படம் சொல்லும் என்பார்கள். கீழே இருக்கும் வீடியோவிற்கு "WORDS" என்ற தலைப்பு. என்னென்ன வார்த்தைகளை இந்த வீடியோ காட்டுகிறது என்பதை சொல்லுங்கள் பார்ப்போம்.




என்னைப் பொறுத்தவரையில் என் புத்திக்கு எட்டியவரையில் கீழ் கண்ட வார்த்தைகளை படமாக்கி தந்திருக்கிறார்கள்.

  1. விளையாடு
  2. ஊது
  3. முறி
  4. பிரி
  5. கிழி
  6. ஓடு
  7. பற
  8. விழு
  9. ஒளி
  10. வெளி
உங்களுக்கு வேறேதாவது வித்தியாசமாக தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்.

2. பூலோக வாழ்வின் கொண்டாட்டம்.
மேலே கண்ட வீடியோவை தயாரித்த அதே Radiolab கோஷ்டியினர் Celebration of Life என்றொரு இன்னொரு வீடியோ தயாரித்திருக்கிறார்கள்.  வாழ்க்கை என்பது பல கை தட்டி ரசிக்கக்கூடிய, வாய்விட்டு சிரிக்கக்கூடிய, ஒப்பாரி வைத்து அழக்கூடிய, மனம் விட்டு பேசக்கூடிய, இதயம் திறந்து காதலிக்கக்கூடிய, மூளை திறந்து படிக்கக்கூடிய, வலிமை கொண்டு போராடக்கூடிய, ருசி கண்டு சாப்பிடக்கூடிய, முருதுவானவகளை தொட்டு உணர்ந்து சந்தோஷப்படக்கூடிய  சம்பவங்களின் தருணங்களின் அனுபவங்களின் ஒரு தொகுப்பு. அதையும் உங்கள் பார்வைக்கு இதோ கீழே..


சொற்களின் எண்ணத்தின் வண்ணமயமான சித்திரங்களும் வாழ்க்கையை அனுபவிக்கும் நேரங்களின் கோலாகல  கொண்டாட்டமும் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

4 comments:

பொன் மாலை பொழுது said...

வாழ்கையின் அணைத்து பரிமாணங்களின், அவைகளின் துளிகளின் தொகுப்பாக பார்த்து ரசிக்கமுடிகிறது. துல்லிய தெளிவான படத்தொகுப்பு, மனத்தை மயக்கும் அந்த பியானோ இசையுடன் தொடர்ந்துமாறிவரும் காட்சிகள் மீண்டும் மீண்டும் அவைகளை பார்த்து ரசிக்க தூண்டுகிறது. சில நிமிடங்களே ஆனாலும் மனது கொள்ளை போகிறது .உண்மை.
அறியதந்ததிற்கு நன்றி RVS.

RVS said...

கண்டு மகிழ்ந்ததற்கு நன்றி கக்கு.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

வினையூக்கி said...

சூப்பர்

RVS said...

Thanks Vinaiyooki.

anbudan RVS

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails