Monday, August 30, 2010

ராவணன் - மரண வலி

கொஞ்சம் லேட்தான். இருந்தாலும் கடைசியா அந்த பயங்கரத்தை நேற்று பார்த்து விட்டேன். ஒரு மாசத்திற்கு முன் "ஒன்னு கிடைக்காதா... கிடைக்காதா..." என்று ஆளாய்ப் பறந்தேன். டிக்கெட்டுக்கு அல்பமாக நாலைந்து பேரிடம் கையில் திருவோடு கூட ஏந்திப் பார்த்தேன். நான் வணங்கும் தெய்வம் நல்ல தெய்வம். பார்க்கவிடாமல் செய்திருந்தது. இருந்தாலும் விதி யாரை விட்டது. நேற்று விளையாடிவிட்டது. ராவணன் படம் பார்த்தேன். பார்த்து தொலைத்துவிட்டேன்.

வால்மீகி ஒரு நாள் இரவு மணியின் கனவில் தோன்றி "இந்த உலகம் உய்ய பல கால கட்டங்களில் படமாக எடுத்த ராமாயண காவியத்தை நீயும் எடு.." என்று அன்புக் கட்டளை இட்டது போல ஒரு வித வெறியோடு ராவணன் எடுத்து வெளியிட்டிருக்கிறார் மணி. பைல்ஸ் வந்தது போல கொஞ்சம் கூட உட்கார முடியவில்லை. ஒரே நெளியல். நாயகன் எடுத்த மணியா இது? குரு எடுத்த மணியா இது? மௌன ராகம் எடுத்த மணியா இது? பம்பாய் எடுத்த மணியா இது? என்று பலமுறை மனசு மணியடித்துக் அடங்கமாட்டாமல் கேட்டுக்கொண்டிருந்தது. இந்தப் படம் ஹிட் ஆகணும்ன்னு எங்கிட்ட முன்னாடியே கேட்டிருந்தால் என்னுடைய தம்மாத்தூண்டு மூளையை கசக்கி பல ஐடியாக்களை தந்திருப்பேன். சரி இப்பயாவது கொடுத்து வைப்போம். காவியங்கள் நடையில் படமெடுக்கும் வருங்கால சந்ததியினர் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.  நெஞ்சு வெடித்து நான் கொடுத்த ஆறு ஐடியாக்கள் இதோ....
ravanan


ஒன்று: படத்தில் ஜனகர் மிஸ்ஸிங். முதல் சீனிலேயே திருநெல்வேலி சீமையிலே நிலத்தை ஆழ உழும் பொழுது, கருப்பு வெள்ளையில், நிலத்தில் ஒரு பெட்டியில் "ஊ..ஆ.." என்று ஒரு பெட்டியில் அழும் சீதையான ஐஸ்வர்யா ராயை மேல் சட்டை இல்லாமல் ரோம மார்போடு ஜனகரான விஜயகுமார் அப்பா கண்டெடுத்தால் இதை விட சிறப்பான ஓபனிங் சீன் இருக்கவே முடியாது.

இரண்டு: தசரதரை காணோம். ஒரு ஐந்தாறு பெண்டாட்டியுடன் ஒரு மந்திரியாகவோ அல்லது முதன் மந்திரியாகவோ நாட்டை ஆளும் ஒரு ராஜா ஸ்தானத்தில் இருப்பதாக தசரத மணிவண்ணன் நடித்திருந்தால் இன்னும் கொஞ்சம் லாஜிக்காக இருந்திருக்கும். கோசலை, சுமித்திரை, கைகேயி போன்ற பாத்திரங்களில் நடிப்பதற்கு இருக்கவே இருக்கிறார்கள்  அழகான அம்மாக்கள் நிறையபேர் கோடம்பாக்கத்தில்.

மூன்று: ஒரு விஸ்வாமித்திரர் கதாப்பாத்திரம் வைத்து ஊர்வசி மயக்கும் சீன் ஒன்று வைத்திருக்கலாம். ஊர்வசி கூட இருபது முப்பது பல்லு போன கிழவிகளுடன் "அக்கம் பக்கம் என்ன சத்தம்..." என்று கும்மி கொட்டி ஆடினால் படம் நிச்சயம் பிச்சிக்கிட்டு போகும். நமீதா அல்லது முமைத்கான் ஊர்வசிக்கு நல்ல தேர்வு. விஸ்வாமித்திரர் பாத்திரத்தில் நடிப்பதற்கு பிரகாஷ் ராஜ் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

நான்கு: அனுமாராக கார்த்திக்கை மட்டும் ஒண்டியாக படத்தில் விட்டது மகா தப்பு. கூடவே வாலி, சுக்ரீவன், அங்கதன் போன்ற வானர சேனையும் இருந்தால் நிச்சயம் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். அந்த காடுகளில் மரமெங்கும் வானர சேனைகள் தொங்கி ஊஞ்சலாடியபடி இங்குமங்கும் திரிந்தால் எப்படி இருந்திருக்கும். "கண்ணாளனே..." பாடல் காமெரா போல் 360 டிகிரி வரை சுழற்றி திருப்பி வருவோர் போவோருக்கு கழுத்து சுளுக்கு ஏற்ப்படுத்தி இருக்கலாம். சினிமா கொட்டகை வாசலில் அமிர்தாஞ்சன் விற்று சிலபேர் பிழைத்திருப்பார்கள்.

ஐந்து: சபரி, மண்டோதரி போன்ற உன்னத பெண் பாத்திரங்கள் எதுவும் படத்தில் இல்லாதது ஒரு பெருங்குறை. மேலுலகத்திலிருந்து அவர்கள் விட்ட சாபம் தான் படம் ஓடாமல் போய்விட்டதோ. மண்டோதரி மகா பத்தினி. சபரி பக்தியின் உச்சம். இவ்விருவரின் பெருங்கோபம் படத்தை சுட்டு, ப்ரோடியூஸர் கையையும் பழுக்க சுட்டுவிட்டது. 

ஆறு: ஜடாயு, ஜாம்பவான் போன்ற ஆக்ஷன் கிங் பாத்திரங்கள் இல்லாதது ஒரு வேதனையான விஷயம். அர்ஜுனுக்கு ரெக்கை கட்டி, கார்த்திக்கோட அப்பப்ப காட்டுக்குள்ள பறக்க விட்டுருந்தா ஒரு ஹாரி பாட்டர் படம் பார்க்கிற எஃபக்ட் கிடைத்து குழந்தைகள் கூட்டமாவது அம்மியிருக்கும். அந்த வாய்ப்பையும் இழந்தான் மணியின் ராவணன்.

படத்தில இன்னும் நிறைய மிக முக்கியமான கதாப்பாத்திரங்கள் மிஸ்ஸிங். அதை விடுத்து ரஞ்சிதா, ப்ரியாமணி, ப்ரியாமணியின் வுட் பி, போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்படி சைடுகள் ஏராளம். வையாபுரியை இனிமேல் அரவாணி ஆக்கி விடுவார்கள். அரவாணிகள் பாணியிலேயே ஒரு திருஷ்டி சுற்றி போடவேண்டும். அட்டகாசமான நடிப்பு. ரஹ்மான் அமர்க்களம். கள்வரே பாடலும் புத்திக்குள்ளே தீப்பொறியை நீ விதச்சவும் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன. வழக்கம் போல் வித விதமான பார்வைகளில் கோணங்களில் கேமரா. அசத்தல்.  அடிக்கடி "பக் பக்.." , "டன்டானா... .டன்டானா.." என்று வித விதமாக கூவுகிறார் விக்ரம், ஏதோ ஸ்டார்ட் செய்ய மக்கர் பண்ணும் ஆட்டோ போல. வசனம் சரியா எழுத வரலன்னா இந்த மாதிரி இரட்டைக் கிளவிகள் போட்டு ஃபில் அப் செய்துட்டாங்க போலிருக்கு. வீராவின் கதாப்பாத்திரம் இன்னும் ஸ்திரமாக உருவாக்கியிருக்க வேண்டும். அவரை ஏன் முதலேர்ந்து போலீஸ் தேடுது அப்படின்னு இன்னும் நன்றாக சொல்லியிருக்கலாம். ஒன்னும் புரியலை. ஆஞ்சநேயர் சூடாமணி எடுக்குற மாதிரியே கார்த்திக் ஐசிடம் அசோக வனம் மரம் மேலிருந்து ஏதோ பேத்தும் ஒரு சீன் இருக்கிறதே. அது ஒன்றுக்காகவே கொட்டகையிலிருந்து "விடு..ஜூட்" என்று ஒரே ஓட்டம் எடுக்கலாம். அப்பப்பா... கர்ண கொடூரம்.

நெஞ்சு பொறுக்குதில்லையே இது மணியிடம் இருந்து வந்த படம் என்றால்.

பின் குறிப்பு: இதே பாணியில் மணி எங்காவது மகாபாரதம் முயற்சி செய்யப் போகிறார். ப்ளீஸ் யாராவது அவர்கிட்ட சொல்லுங்களேன். மேற்கண்ட படத்திலேயே இந்த படத்தின் வெற்றியை(?) சிம்பாலிக்காக ஐசும், விக்ரமும் காண்பிப்பதாக எனக்கு படுகிறது. உங்களுக்கு?

26 comments:

Ramesh said...

//மேற்கண்ட படத்திலேயே இந்த படத்தின் வெற்றியை(?) சிம்பாலிக்காக ஐசும், விக்ரமும் காண்பிப்பதாக எனக்கு படுகிறது. உங்களுக்கு?

அப்போதுதான் கவனித்தேன்..அட ஆமால்ல...கலக்கிட்டீங்க....

RVS said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியமுடன் ரமேஷ்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

பின் குறிப்பு: Superb..

RVS said...

நன்றி மாதவா...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பொன் மாலை பொழுது said...

எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கு. இன்னமும் படம் பார்க்கும் ஆசையெல்லாம் கூட உங்களிடம் இருக்கிறதா?
சுமார் 15 வருடங்களுக்கு முன்பே அவைகள் எல்லாம் விட்டு போய்விட்டன. லட்சம் ரூபாய் கொடுத்து I Max இல் முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்தாலும் நம்மால் ஆகாதுசாமி. என்ன காரணமே தெரியவில்லை நீங்கள் சொல்லிய அதே போன்ற மனநிலை தான் தியேட்டரில் எனக்கு வருகிறது. என்னவா? " பைல்ஸ் " வந்தவன் படும்பாடுதான்.
ஆனால் சிலமாதங்களுக்கு முன்பு வெளிவந்த" தமிழ் படம் "மட்டும் தியேட்டரில் சென்று பார்த்து ரசித்தேன். அபிமான இயக்குனர்கள் என்ற என்னிடமிருந்த "பட்டியல்கள் " எல்லாம் காற்றில் பறந்து போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.

RVS said...

விவரங்கள் அடங்கிய கருத்துக்கு நன்றி கக்கு. சிறு பிராயத்திலிருந்து சினிமா பார்த்து பழகியதால் ஒரு போதை அடிமை மாதிரி ஆகிவிட்டேன். என்ன செய்வது.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல விமர்சனம்.. லேட்டா வந்தாலும் கலக்கலா இருக்கு..

நீங்க சொன்னதுக்கப்புறம் தான் மேல போட்டிருக்கிற படத்த பார்த்தேன்... உண்மை தான் ..

பொன் மாலை பொழுது said...

இங்கு மட்டும் என்னவாம். ஊரில் இருந்த டென்ட் கொட்டகை முதல் கும்பகோணத்தில் உள்ள அத்தனை தியேட்டர்களிலும் பின்னர் சென்னை வந்து ஒரு ஞாயிறு விடாது படம் பார்த்து, பின்னர் வெளிநாடுகளை வேளைக்கு சென்று அங்கும் தமிழ் இந் ஆங்கிலப்படங்கள் படங்கள் என்று வரிசை கட்டி பார்த்தவன் தான். என்னவோ இப்போது வெறுப்பாய் போய்விட்டது.
வயசு ஆயிடுத்தேன்னோ!!!! :)

Cinema Virumbi said...

ஆர்.வி.எஸ். அவர்களே,

படம் (ஹிந்தி) வந்த புதிதில் நான் எழுதிய விமர்சனம் கீழே:

http://cinemavirumbi.blogspot.com/2010/06/blog-post_25.html

நன்றி!

சினிமா விரும்பி

RVS said...

பாராட்டுதலுக்கும் வருகைக்கும் நன்றி வெறும்பய.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

சரி சரி.. ஃபீலிங் புரியுது.. என்ன பண்றது.. நீங்க அடங்கிட்டீங்க.. நா அடங்க மாட்டாம அலையறேன்.. ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

வருகைக்கு நன்றி சினிமா விரும்பி.. நான் நிச்சயம் பார்க்கிறேன்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி said...

இப்பத்தான் இந்த படத்த மறந்து மனுஷனா அலையுரன்லே! யாவகப் படுத்தி பாயப் பிராண்ட வச்சுட்டீங்கலே! உங்க பேர்ல இப்போ எனக்கு ரொம்ப கோவம்லே! வசனம் சுஹாசிநியாம்லே!வரிக்கு வரி "லே" மட்டும் சேத்துகிட்டா அது திருநெல்வேலி பாஷையாம்லே !! கஷ்டம் கஷ்டம்!!

பத்மநாபன் said...

நல்ல வேளை ராவணண் இன்னமும் பார்க்கவில்லை..ஐஸு இருந்தும் தேற்ல்யா சாமி.
இந்த மாதிரி படங்கள் பார்க்காமல் மணியோட`` நாயகன்` இமேஜ் யை மெயிண்டைன் பண்ணிக்கிறேன்.

நிச்சயமா, ஐடியாக்களை பதிவு பண்ணிவைங்க , பிற்காலத்தில் ராயல்-டி அள்ளலாம்

RVS said...

மோகன்ஜிலே வருகைக்கும்லே கருத்துக்கும்லே நன்றிலே... இதுலே சுஹாசினிலே சொல்லலே சொன்னாங்களே... நன்றி..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

பத்மநாபன் சார்...நம்மையும் ஒரு பொருட்டா நினைச்சு யாராவது கேட்பாங்கன்னு நினைக்கிறீங்க... ஆச்சர்யமா இருக்கு.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

geethappriyan said...

ரொம்ப நல்லாருக்கு நண்பா
மெட்ராஸ்டாக்கீஸுக்கு பார்சல் போடுங்க

சாய்ராம் கோபாலன் said...

RVS, super விமர்சனம்.

First one on Vijayakumar as father is stunning !!

RVS said...

நன்றி கீதப்ப்பிரியன். நம்மள பார்சல் ஆக்கிட மாட்டாங்களே... ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

தேங்க்ஸ் சாய்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Ahamed irshad said...

விமர்சனம் கலக்கலா இருக்கு.

RVS said...

பாராட்டுக்கு நன்றி அஹமது இர்ஷாத்

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Aathira mullai said...

//.இதே பாணியில் மணி எங்காவது மகாபாரதம் முயற்சி செய்யப் போகிறார். ப்ளீஸ் யாராவது அவர்கிட்ட சொல்லுங்களேன்.//
அது சரி எப்படி இவ்வளவு பொறுமை உங்களுக்கு!!!!!!!
விமர்சனமெல்லாம் செய்யற அளவு...
படத்தை ரசிக்க முடியல.. விமர்சனம் தேள் கொட்டிய விறுவிறுப்பு...ஐடியாக்கள், சினிமாக்காரர்களுக்கு அருமருந்து...

ஸ்ரீராம். said...

ஐடியா எல்லாம் கொடுத்து விஷப் பரீட்சை பண்ணாதீங்க...கும்பகர்ணன் அல்லது இந்த்ரஜித்னு பேர் கொடுத்து அவர் ராவணன் ரெண்டாம்பாகம் தொடங்கிடப் போறார்.

RVS said...

விறுவிறுப்பு . அருமருந்து..... கவிதையிலே கமென்ட் போடறீங்க.. நன்றி ஆதிரா...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

ஸ்ரீராம்.. நீங்க சொன்னப்புறம் தான் தோணுது.. நா ஏதாவது சமூக குற்றம் புரிஞ்சிட்டேனோ.. ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails