Thursday, August 12, 2010

எந்திரன் கலைச்சேவை

endhiran rajniஅதி பிரம்மாண்டமான எந்திரன் படப் பாடல் சி.டி வெளியீட்டு விழா நிறைய பேருக்கு வயற்றெரிச்சலை கிளப்பியிருக்கிறது. ரஜினி "இது வெறும் 150 கோடி பட்ஜெட் படம் இது" என்று சொல்லிவிட்டாராம். ரஜினி எப்படி இதுபோல சொல்லலாம். இவர்கள் இதுபோல கோடி கோடியாய் படமெடுத்தால் சிறு மற்றும் குறு தயாரிப்பாளர்கள் சோற்றுக்கு எங்கே போவார்கள். ஒரு தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம் ஏதும் ஷங்கர் போன்றோர் எடுக்கவில்லை என்ற வாதத்தை வைக்கும் இவர்கள் கூறும் தமிழ் கலாச்சாரம் என்பது என்ன என்பதையும் கூற வேண்டும். யாராவது பெரும்புள்ளியை தாக்கி பதிவு போட்டால் இவர்கள் சுலபத்தில் ஸ்டார் ஆகிவிடலாம். அதுவும் சூப்பர் ஸ்டாரை பற்றி போட்டால் தாங்கள் பதிவுலக சூப்பர் ஸ்டார் ஆகிவிடலாம் என்ற நினைப்பு பலபேரின் பிழைப்பை கெடுக்குது.

சினிமா என்பது ஒரு பிசினஸ். லட்சம் போட்டால் கோடியும், கோடி போட்டால் கோடானு கோடியும் எடுப்பதற்கு ஏதுவான ஒரு கேளிக்கை வியாபாரம். இதில் எங்கே பெரிய பட்ஜெட் படம் வந்தால் சிறிய பட்ஜெட் படம் பாதிக்கப்படும், அடிபட்டு போய் ஹாஸ்பிடலில் போய் ஐ.சி.யூவில் படுத்துவிடும் என்றெல்லாம் திரைக்கதை அமைத்து சொந்த செலவில் வெளியிடுகிறார்கள் இதுபோன்ற அபத்தமான வாதத்தை. இப்போதெல்லாம் நல்ல படம், கெட்ட படம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம் என்றால் ஓடும். இல்லையென்றால் ஓடாது. படம் பப்படமாகிவிடும் அவ்வளவே. லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சுப்ரமணியபுரம் என்ன படுத்துவிட்டதா? நல்ல கதை, திரைக்கதை இருந்தால் எந்த படமும் நல்ல ராஜநாகம் போல படமெடுத்தாடும்.

இன்னும் எவ்வளவு நாளைக்கு யதார்த்த சினிமா, தமிழ் கலாச்சாரம் என்று ஜல்லியடித்துக் கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. இதுபோல் வரிந்துகட்டிக்கொண்டு நான் எழுதியவுடன், ஏதோ ரஜினி ரசிகர் மன்றத் தலைவன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நம் தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு, என்னையும் சேர்த்து, ஒரு ஹாலிவுட் படம் பார்க்க கொஞ்சம் தலைவால் புரியாமல் இருக்கும். அதற்க்கு நிகரான டெக்னாலஜி கொண்டு நம் மொழில் படங்கள் தயாரிக்கப்படும் போது மக்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். பாராட்டவேண்டும். அதை ஏன் ஐயா வசை பாடுகிறீர்கள். ஏதோ மக்களுக்கு படங்கள் மூலம் பாடம் சொன்னால் இந்த சமுதாயம் உருப்பட்டுவிடும் என்று யார் சொன்னார்கள்.  இதுவரை ஓராயிரம் படங்களில் நல்ல கருத்துக்கள், புரட்சிகர சமுதாய சிந்தனைகள் என்று சொல்லியாயிற்று. எவ்வளவு பேர் திருந்தினார்கள்.

உலகத் திரைப்படங்கள் பற்றி பீற்றிக்கொள்ளும் நம்மில் பலர், இதுபோல தமிழ் படங்கள் அதற்க்கு ஓரளவேனும் நிகராக எடுக்க முயற்சி செய்பவர்களை இதுபோன்று தூற்றுவது நல்ல பழக்கம் இல்லை. கோடம்பாக்கத்துக்கு சில புதிய செய்திகளையும், பழக்க வழக்கங்களையும், வித்தியாசமான கதை சொல்லும் பாணிகளையும் ரசிக்கும் மனப்பான்மை இல்லாவிட்டாலும் ஏதோ கலாச்சார சினிமா காவலர்கள் என்று நினைத்துக்கொண்டு கன்னாபினா என்று பிதற்றாமல் இருந்தால் சரி. யாரும் இந்த தொழிலில் கலைச்சேவையில் ஈடுபட்டு சமுதாயத்தை உயர்த்த வரவில்லை. எல்லோருக்கும் டப்புப்பா டப்பு தான் மெயின்.

பட உதவி: http://www.endhiran.org

6 comments:

பொன் மாலை பொழுது said...

//ஏதோ மக்களுக்கு படங்கள் மூலம் பாடம் சொன்னால் இந்த சமுதாயம் உருப்பட்டுவிடும் என்று யார் சொன்னார்கள்.//
செருப்பால் அடித்து சொன்னாலும் புரியாது. காரணம் இவர்கள் எல்லாவிதத்திலும் வித்யாசமாய் தாங்கள் சிந்திப்பதாக இங்கு காட்டிகொள்வார்கள். சிந்திபதாக என்றுதானே தவிர உண்மையில் செயல் படும் போது இவர்களை பார்த்தால் துணியை வழித்துக்கொண்டு சிரிக்கத்தோன்றும். அந்த அளவு போலியான ஜென்மங்கள்.
விடுங்கள்,
இவர்களுக்காக ஒரு பதிவு என்பது அதிகம்.

எப்பூடி.. said...

விடுங்க பாஸ், தூங்கிறவனை எழுப்பலாம்; தூங்கிறமாதிரி நடிக்கிறவனை ? ரஜினி படம் வரும்போதுமட்டும் புரட்சிக்காரங்க, தமிழ்ப்பற்றாளர்கள், நீர்ப் பற்றாளர்கள் , நிலப் பற்றாளர்கள் எல்லோரும் எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. அப்புறம் காணாம போயிடுவாங்க. சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் பேர்வழி என்று தங்களை பிரபலப்படுத்தும் இந்த நாய்களை விழிப்புணர்வுடன் இருக்கும் சமூகம் பார்த்துக்கொள்ளும்.

RVS said...

கக்கு ப்ராப்ளம் என்னன்னா இவங்களுக்கு நிஜமாவே எதிர்க்கனும்ங்க்றது ஒன்னும் நோக்கம் இல்லை. சும்மா இந்த மாதிரி ஒரு சவுண்ட் உட்டா நாலு பேர் நம்மளை "பச்சைத் தமிழன்" அப்படின்னு சொல்லும்ன்னு நினைப்பு. வேற ஒன்னும் இல்லை.


அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

ரஜினின்னு இல்லை, கமல் படம் வந்தா தலைப்பை மாத்து புடவையை மாத்து அப்படின்னு சொல்ல வேண்டியது, அப்படி இல்லன்னா தமிழன், கர்நாடகாகாரன் அப்படின்னு புதுசா ஒரு புராணம் பாட வேண்டியது. தலை விதி. ஏதோ படம் பார்த்தோமா, அனுபவிச்சோமா அப்படின்னு இல்லாம.....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எப்பூடி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

R.Gopi said...

ஆர்.வி.எஸ்...

சூப்பரா எழுதி இருக்கீங்க....

இந்த கலாசார காவலர்களின் தொல்லை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு தலைவா....

RVS said...

படம் பார்த்தா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது... சரிதானே கோபி... :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails