Wednesday, August 25, 2010

ஜாம் ஜாம் ட்ராஃபிக் ஜாம்

தரை மார்க்கமாக எங்கே போனாலும் கூட்டம் அம்முகிறது. வழுக்கை மண்டை தெரியாமல் இருக்க பாலுமகேந்திரா கேப் போட்டு அது கீழே விழுந்தால் ஷன நேரத்தில் நாலு வண்டி ஏறி இறங்கும் அளவிற்கு ட்ராஃபிக். ஒரு மாநில மாநாடு மாவட்ட பேரணி என்று கட்சியினர் கொடி பிடிக்கும் போது ஒரு மணி ரெண்டு மணி நேரம் நம்மளை ரோட்ல தேமேன்னு ஓரமா நிக்க வச்சா ஏக டென்ஷனாகி ஒட்டு மொத்த அரசு இயந்திரங்களை புழுதி வாரி ஏக வசனத்தில் சபிப்போம். ஒரு சின்ன பக்கத்து ரோடிலிருந்து மெயின் ரோடிற்கு இப்ப போய்டலாம் என்று பிரயாசைப் பட்டு வருபவர்களின் ஆசையை நிராசையாக்கி அந்த காரை ஒரு இன்ச் நகர்த்த விடாமல் உடஞ்ச சைக்கிளில் ஆரம்பித்து, உயர் ரக இம்போர்டேட் கார் வரை இஞ்சி தின்ன குரங்கு போல கார்க் கைதியாக உள்ளேயே உட்காரவைத்து ரோடோரத்தில் சுற்றி சுற்றி வந்து கும்மியடிப்போம். வண்டியில் உட்கார்ந்தால் நேரே போகவேண்டிய இடத்திற்கு செல்லவேண்டும். "ஊட்ல சொல்லிட்டு வன்ட்டியா?.. சாவு கிராக்கி..." என்று வண்டியில் இருந்து எட்டிப்பார்த்து தூய தமிழில் நல்ல கிராக்கியிடம் அர்ச்சனை கிடைத்தாலும் ஹாரன் அடித்து விலகாத யமதர்மராஜா வாகனம் போலவும் கார்ப்பொரேஷன் லாரி போலவும் கண்டுக்காம அப்படியே "போய்க்கினே" இருப்போம். எங்கேயும் நிற்கக்கூடாது. இது தான் தலையாய கொள்கை.

நாட்டு மக்களின் நன்மைக்காக ஒரு பாலம் கட்டினாலோ, ரோடு அகலப்படுத்தினாலோ கொஞ்சம் அந்த ஏரியாவில் நெரிசல் ஏற்ப்படுவது இயற்கையே. "இவனுங்க வருஷம் பூரா கட்டுவானுங்க... நாம கிடந்து சாவனும்..." என்று அலுத்துக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை நொட்டை சொல்லிக்கொண்டு அதே ரோடு வழியாக அலுவலகம் சென்று வந்துகொண்டிருப்போம்.

நம்மோட சுதந்திர தினத்திற்கு முதல் நாளிலிருந்து சீனாக்காரர்கள் ரோடிலேயே ஒன்றுக்கு இரண்டுக்கு போகும் இயற்கை உபாதையிலிருந்து சாப்பாடு வரை தின்றுவிட்டு ராப்பகல் அகோராத்திரியாக ரோடிலேயே தவம் கிடக்கிறார்கள். விஷயம் என்னன்னா சீனாவின் ஹெயபின் ப்ராவின்சிலிருந்து பெய்ஜிங் உள்ளே செல்லும் வழியில் நடக்கும் ஒரு கட்டுமானப் பணியினால் ஏற்ப்பட்ட சிறு போக்குவரத்து தேக்கமானது ஒருத்தர் வண்டி முன்னாடி இன்னொருத்தர் மூக்கை நுழைத்து போக ட்ரை பண்ணி பாடியோட பாடி உரசி இடித்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ட்ராஃபிக் பில்ட் அப் ஆக ஆரம்பித்து இப்போது நூறு கிலோ மீட்டர் தூரம் வரை வண்டி நிக்குதாம். இந்த ஜாம் சரியாக இன்னும்  ஒரு மாசம் கூட ஆகலாம் அப்படின்னு 'சாலைத்துறை' வல்லுனர்கள் கருத்து சொல்றாங்களாம். கருத்து கந்தசாமிகளுக்கு எந்த நாட்டிலேயும் பஞ்சம் இல்லை. ஆனா இந்த ட்ராஃபிக் ஜாம் அந்த ஏரியாவில இருக்கிற மக்களுக்கு ஒரு புது பிசினஸ் கொடுத்துருக்காம். சீடை, முறுக்கு பட்டாணி சுண்டல், நூடுல்ஸ் அப்படின்னு எல்லா தின்பண்டங்களும் விக்கறாங்கலம். ஆனா என்ன விலை தான் தியேட்டர் உள்ள சாப்பிடுற சமோசா மாதிரி யானை விலை குதிரை விலையாம்.

என்னத்த சொல்ல.. இனிமே பத்து நிமிஷம் இருவது நிமிஷத்திற்க்கெல்லாம் யாரையும் வையாதீங்க. அமைதியா நின்னு ஊடு போய் சேருங்க...

செய்தியும் படமும் இங்கே: http://newsfeed.time.com/2010/08/23/epic-traffic-jam-in-china-enters-its-9th-day/

6 comments:

Aathira mullai said...

முதலில் உங்கள் தளத்தில் நுழைகிறேன். டிராஃபிக் ஜாம... (நுழைய விடாது தடுக்கிறது..கருத்து டிராஃபிக் ஜாம்)
//"இவனுங்க வருஷம் பூரா கட்டுவானுங்க... நாம கிடந்து சாவனும்..."// உண்மை..அடிக்கடி கேட்ட டையலாக்.

//ஆனா இந்த ட்ராஃபிக் ஜாம் அந்த ஏரியாவில இருக்கிற மக்களுக்கு ஒரு புது பிசினஸ் கொடுத்துருக்காம். சீடை, முறுக்கு பட்டாணி சுண்டல், நூடுல்ஸ் அப்படின்னு எல்லா தின்பண்டங்களும் விக்கறாங்கலம்.//

இது நல்லா இருக்கே..இந்த பிசினஸ் ஆரம்பிச்சுடலாம் போல இருக்கே...ஐடியாவுக்கு நன்றி RVS அவர்களே..நல்ல இருக்கு.. பிளாக்ல பயன்படுத்தியுள்ள சொல்லாட்சிகள் எல்லாம் அருமை..

பத்மநாபன் said...

மாத கணக்கு ஆகுமா ஜாம் கிளியர் ஆவதற்கு.பக்கத்துல வீடு எடுத்து குடியிருந்து ஜாம கிளியர் பண்ணுவாங்க போல ....சுவராஸ்ய தகவல்..

RVS said...

நினைக்கவே பயங்கரமா இருக்கு. இவங்க எப்படி குளிப்பாங்கன்னு தெரியல.. அவங்க நாத்தம் அவங்க கூட.. நமக்கு என்ன...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

வருக ஆதிரா.. ஜோதியில் ஐக்கியமானதர்க்கு நன்றி...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Aathira mullai said...

விளையாட்டுப் பிள்ளை விளையாடுகின்ற ஒலிம்பிக் ஜோதிதானே..

RVS said...

ஆமாம், அதேதான்... ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails