சனிக்கிழமை சங்கதி
ஒரு நூறு மில்லி உள்ளே போனவுடனேயே "என்ன...... பிரதர்...சோகமா இருக்கீங்கலா?" என்று வாயில் ஒரு அரை கிலோ ஊத்துக்குளி வெண்ணை வைத்துக்கொண்டு பேசுவது போல "ழ" சொல்லி வழுக்கி பேசுவது மில்லியர்களின் வழக்கம். எவ்வளவு நாள் தான் குடிமன்னர்கள் என்று எழுதுவது. ழ வராதவர்களுக்கு கூட ஆட்டமேட்டிக்கா சுளுவா ழகரம் வார்த்தைகளில் கம்பு சுழற்றி விளையாடி வரும். மறத்தமிழன் 'ழ'த்தமிழன் ஆகிவிடுவான். இப்ப மேட்டர் என்னன்னா, சரக்கடிச்சா ஏன் எதிர நிக்கற எல்லோரும் நல்லவங்களா அன்பானவங்களா அடக்கமானவன்களா கண்ணுக்கு தெரியறாங்க? காண சகிக்காத கர்ண கொடூரமான மூஞ்சிகள் கூட சர்வ லக்ஷணமா தெரியுமாம். இதுகெல்லாம் ஒரு ஆராய்ச்சி செய்யறாங்கப்பா வெளிநாட்ல. மூளையை நிறைய செலவு பண்ணிட்டு இப்ப அங்க இருக்குற பணக்கஷ்டம் மாதிரி மூளைக்கஷ்டத்திலயும் நஷ்டத்திலையும் நிக்கப் போறாங்க. ஈஸ்வரோ ரக்ஷிது.
இந்த ஆராய்ச்சியை ஒரு 64 மாணவச் செல்வங்கள் கிட்ட பண்ணியிருக்காங்க. சரக்கு உள்ள போனபின்ன, ரத்ததில ஆல்கஹால் ஏறிப்போய் சீரான எதையும் க்ரஹிச்சுக்கிர தன்மையை மூளையிலிருந்து கழட்டி விட்டு கன்ஃப்யூஸ் பண்ணிடுதாம். அதனால், அழகி யார் அரக்கி யார் என்ற வித்தியாசம் தெரியாமல் போய்விடும் என்கிறார்கள். பெண்களுக்கு இந்த மேட்டர் சுத்த மோசம். தண்ணியடிச்ச அவங்கதான் ரொம்பவே குழம்பி போறாங்களாம். ராமனுக்கும் ராவணனுக்கும் வேறுபாடு காணத் தெரியாமல் சீதைகள் ராவணனோடு போய்டராங்கலாம். மணிரத்னம் பட எஃபக்ட்.
நாட்டுல நிறைய பேருக்கு கல்யாணம் ஆகாம கஷ்ட்டப்படராங்களே, பொண்ணுப் பார்க்கவோ, மாப்பிளை பார்க்கவோ கூட்டிகிட்டு போகும்போது ஒரு இருநூறு குடுத்து அழைச்சிகிட்டு போய்ட்டா எல்லாம் சரி ஆய்டுமோ? நல்ல ஐடியா இல்ல.
இந்த சரக்கு செய்தியையும் படத்தையும் வழங்கியவர்கள்: http://gizmodo.com/5616197/the-secret-of-beer-coggles-discovered
6 comments:
//ஒரு இருநூறு குடுத்து அழைச்சிகிட்டு போய்ட்டா எல்லாம் சரி ஆய்டுமோ// அப்புறம் காலம் பூரா மலை எறங்க எறங்க ஏத்தீட்டே இருக்கனுமா..
படம் ஜோரு. நடையும் கலக்கல்
மக்களுக்கு அடிச்சதக்கப்பறம் வருமே அமெரிக்கன் இங்கிலிசு , எங்கிருந்து வருமோ அந்த வெக்காபலரி...தயார் பண்ணறப்பவே இதுக்கு எதாவது வஸ்து தனியா கலக்குறாங்களா ?.
ஆமாம் பத்மநாபன் சார். அப்புறம் ஒரே போதையா இருக்கும்..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
சரக்குல இவ்ளோ மேட்டரு இருக்குதா ?
சரக்கு அடிச்சவங்களோட மண்டை சரக்கு மாறிப் போய்டும்ன்னு சொல்றாங்க மாதவா....
அன்புடன் ஆர்.வி.எஸ்.
மகிஷாசுரன் வதத்துக்கு முன்னால்,அம்பாள் கூட மது அருந்திவிட்டு தான் அவனைக் கொன்றாளாம். அவள் லோக மாதா இல்லையா? சுயநினைவில் இருந்தால் மகிஷனை,தாயுணர்வோடு கொல்லாமல் விட்டு விடுவோம் என்று தான் தன்னை மறக்க மதுவை நாடினாளாம்.
ழகரம் வர தண்ணி அடிப்பது ஒரு வழி எனத் தெரிந்து கொண்டேன்.நல்ல பதிவு
நன்றி வானவில்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment