Tuesday, July 20, 2010

கழிப்பறை கணிதப் புலி

சிவன் கோவில் சனீஸ்வரன் சன்னதி பின்பக்கம் மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதி சுவர்கள் முழுக்க பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எண்கள் (இப்படி எழுதினால் பரீட்சையில் பாஸ் ஆவார்கள் என்று யாரோ ஒரு புண்ணியவான் கிளப்பி விட்டது), DYFI விளம்பரங்கள் நிரப்பும் பள்ளி மற்றும் கல்லூரி காம்பௌண்ட்கள்,  சினிமா கொட்டகையில் படம் பார்க்க நுழைவுச் சீட்டு வாங்கச் செல்லும், திரும்ப கூட முடியாமல் நிற்கும் கவுண்டர்கள் செல்லும் வழியில் ஒரு ருபாய் காய்ன் கொண்டு தங்கள் காதலை, சேகர் MA என்று பட்டப்படிப்போடு தங்கள் பெயரை வடிக்கும் சுரண்டல் சித்திரங்கள், மாநகர பேருந்துகளில் லட்சம்கட்டி வராகன்கள் கொடுத்து விளம்பரம் செய்யும் பெரும் விளம்பரதாரர் விளம்பரத்தின் வெள்ளை நிறப் பகுதிகளில் ஆட்டின் போட்டு அம்பு விட்டு எழுதும் பவி லவ்ஸ் மகி போன்று அன்பைச் சிறப்பிக்கும் காதல் ஓவியங்கள், பிஞ்சுக் கைக்கொண்டு பென்சில் பிடிக்க தெரிந்த நாள் முதல் வீட்டு சுவரெங்கும் மழலைகள் வரையும் கிறுக்கோவியங்கள் என்று பலவகை எழுத்தாளர்களும் அவர்களது படைப்புகளும் இந்த அவனியில் உண்டு. பென்சில், பேனா, ஸ்கெட்ச், மார்க்கர் பென், அடுப்புக் கரிக்கட்டி, கலர் சாக்பீஸ் என்று கைக்கு அகப்பட்டதையெல்லாம் கொண்டு பார்க்கும் சுவெரெங்கும் கிறுக்கி மற்றும் வரைந்து  தங்கள் எண்ணங்களை உலகிற்கு அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். 

பொதுவாகவே தன்னுடைய எண்ணங்களை மற்றவர் பகிர மற்றும் தனக்கு தானே பார்த்து சந்தோஷிப்பதர்க்கு மனிதன் இதுபோல் கிறுக்கி மகிழ்கிறான். இதில் ஒரு ஆத்ம சாந்தி ஏற்படுகிறது. இப்படி பொதுப்படையாக புறவெளியில் காதலையும், பரீட்சை நம்பர்களை தெய்வ சன்னதிகளிலும், கொஞ்சம் நாகரீகமான செயல்களை கண்டித்தோ ஆதரித்தோ எழுதி வருகிறார்கள். 

இதுவல்லாமல், ஒருவர் மீது ஏற்படும் காழ்ப்புணர்ச்சியை, பொறாமையை, கோபத்தை சில மறைவான இடங்களில் எழுதி உளமாற மகிழ்வர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதற்க்கு தோதான இடம் கழிப்பறைகள். பொதுஇடங்களில் இதற்க்கு வாகான இடம் மூளை முடுக்குகளில் இருக்கும் உடைந்த குட்டிச் சுவர்கள், ஆள் அரவமற்ற மனித வாசம் காணாத ஆவி குடியிருக்கும் தன்னந்தனி பாழடைந்த வீடுகள், ஜன சந்தடி குறைவாக இருக்கும் சில தெருமுனைகள் போன்ற இடங்கள். இதுபோன்று கரிக்கொண்டு சுவர்களில் எழுதுவதும் பேடித்தனமாக மொட்டைக்கடுதாசி போடுவதும் ஒரே செயல்தான். ஆனால் இதில் ஒரு அளவில்லாத திருப்தி அடைந்து பரவசம் மிகுந்த ஆனந்த நிலை அடைகிறார்கள். 

தன்னை திட்டிய கல்யாணமான டீச்சரையும் அவர் அடிக்கடி சிரித்து பேசி அளவளாவும் பிரம்மச்சாரி வாத்தியாரையும் இணைத்து இருவரும் கல்யாணம் செய்து கொண்டது போல படம் வரைந்து திருப்தி அடைவது, தனக்கு கிடைக்கவேண்டிய ஃபிகரை மாற்றான் ரூட் போட்டு அபகரித்தவுடன் அந்தப் பெண் பிள்ளையை பற்றி அசிங்க அசிங்கமாக எழுதுவது, முட்டிக்கால் போட வைத்த ஹெட் மாஸ்டரை பற்றி --ளி, -----மவனே என்று திட்டி எழுதுவது போன்ற நற்காரியங்கள் தான் அதிகமாக பள்ளி கல்லூரி படிக்கும் நிலையில் இருக்கும் மாணவச் செல்வங்கள் செய்வது.


ஆனால் கீழே காணும் கழிப்பறைக் கணிதம் சற்று வித்தியாசமானது. ஆசிரியர்களின் கழிப்பறையில் அவர்கள் கற்பித்த கணிதத்தை அவர்களிடமே போட்டுக் காண்பித்து தீட்டிய மரத்தில் கூர் பார்த்திருக்கிறார்கள். இப்படி கணிதம் போட்ட அந்தக் கையில் ஒரு இருநூறு ரூபாயாவது கொடுக்கவேண்டும். கட் அடித்துவிட்டு புது ரிலீஸ் சினிமாவுக்கு போய்விட்டு வரும். ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட எல்லா பாடத்திற்கும் திறமை இருந்தால் அவனுக்கு அதில் KNOWLEDGE இருக்கிறது என்று சொல்வார்கள், ஆனால் கணிதத்திற்கு மட்டும் Mathematics SKILLS இருக்கிறது என்று குறிப்பிடுவார்கள். கீழ் காணும் படம் நிஜமாகவே ஒரு SKILLFULL JOB.

maths

இந்தப் படத்தில் அட்டக் கருப்பில் எழுதிய மாணவனுக்கு வெளுத்தக் கருப்பில் எழுதிய ஆசிரியர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். பதிலளிக்க முடியாத அந்த மாணவன் கொலை செய்யப் போவதாக மிரட்டுகிறான். காலம் எப்படி உள்ளது பாருங்கள்.

பட உதவி: http://hah.tumblr.com/post/832309154/written-on-toilet-wall-maths-faculty

8 comments:

பொன் மாலை பொழுது said...

புத்திசாலிகளின் குறும்பு !
படத்தை பெருசாகாக செய்து பார்த்துவிட்டு சிரித்தேன் .

RVS said...

கக்கு சார்! சமன்பாடுகள் எவ்வளவு கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார்கள். ரியலி சூப்பர்ப்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

இந்த மாதிரி ஏடாகூடம் நடக்கக் கூடாதுன்னு தான், நா படிச்ச ஸ்கூலுல, வாத்தியாருக்கு, மானவருக்குன்னு தனித்தனி கக்கூஸ் வைச்சாங்க..

RVS said...

மாதவா வாத்தியார் கக்கூஸ்ல போய் எழுதற அளவுக்கு நமக்கு தெம்பு இல்லை. எழுதினவனுக்கு இருக்கோ என்னமோ? :) :)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

//RVS said..." மாதவா வாத்தியார் கக்கூஸ்ல போய் எழுதற அளவுக்கு நமக்கு தெம்பு இல்லை. எழுதினவனுக்கு இருக்கோ என்னமோ? :) :)"

I see.. that way it is possible for this guy to write.

yes, We didn't have the guts even to enter....

lcnathan said...

KAKKOOS ""MANNATHTHIL"" ORU KAIYAAL THANATHU MOOKKAIP PIDITHTHUKKONNDU,MARU KAIYAINAAL MAATHTHIRAM INTHA KANNAKKAI EZHTHIYA MAANNAVANUM, VAATHTHIYAARUM, ""THIRAMAISAALIKALLAE""!!!!???!!

Anonymous said...

ருசிகரமான சம்பவம். தாங்கள் கொடுத்துள்ள தலைப்பும் பிரமாதம் :D

RVS said...

nandri bxbybz, BTW, what is the meaning of bx by bz?

anbudan RVS.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails