Thursday, July 22, 2010

வயலின் பேசுகிறது

சமீபத்தில் கண்டு ரசித்த கணேஷ் குமரேஷின் வயலின் டூயட். அட்டகாசம். ரசிகக் கண்மணிகளின் பார்வைக்கு இங்கே. வயலின் பேசுகிறது. தந்திகளை சங்கீத ஜாலம் செய்யவைக்கும் வித்தை. காதுகள் மோட்ஷமடையட்டும், இந்த மடை திறந்த இசை வெள்ளத்தை கேட்டு.


தலையின் ஆமோதிக்கும் அசைவுகளும், கையின் விளையாட்டும், செவி நிறைத்த இசையும் கேட்டு முடித்து ரொம்ப நேரமாக காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கிறது. வாயில் இரண்டு கையையும் கொடுத்து சீட்டி அடிக்க வேண்டும் போல் உள்ளது.

ராஜாவின் இசையில் புல்லாங்குழலும் வயலினும் இரு கண்கள்.  வசனம் சொல்லாததை ஞானியின் குழல் பேசும். எண்ணற்ற பாடல்களில் காற்றும் தந்தியும் சேர்ந்திசைத்த பல கீதங்களில் என் மனதில் முன்னணியாக இருக்கும். பாடல் ஆரம்பிப்பதற்கு முன்னரே பத்து வயலினில் ஆரம்பித்து  ஒரு புல்லாங்குழலில் முடித்து எஸ்.பி.பி "காதல் கவிதைகள் படித்திடும்...." என்று பாடி நெஞ்சத்தை அள்ளும் இந்தப் பாடல் இந்தப் பதிவுக்கு கொசுறாக கீழே...

பாடல் முழுவதும் இடையிடையே வயலினும் குழலும் செய்யும் வித்தைகள், மற்றும் முதல் சரணத்தின் ஆரம்பத்திலும் இரண்டாம் சரண ஆரம்பத்திலும் சேர்ந்திசையாக வயலினும் ஃப்ளுட் செய்யும் அட்டகாசத்திற்கு அளவேயில்லை..


இதன் மூலம் உங்களை மகிழ்வித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. ஆமாம் இதில் நடித்த இந்தக் குண்டு பெண்மணி இப்போது எங்கே?

4 comments:

Madhavan Srinivasagopalan said...

//ஆமாம் இதில் நடித்த இந்தக் குண்டு பெண்மணி இப்போது எங்கே?//

சபாஷ் சரியான கேள்வி..

RVS said...

hi hi... :) :) :)

nandri.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//UK Carnatic Ensemble

Sindu and Indu (vocals) with Aravindan (flute), Senthuran (mridangam) and Dharmesh (tabla)//

இதே தர்பார் நிகழ்ச்சித் தொடரில் இந்த லண்டன் வாழ் இளம் கலைஞர்களின் திறமையையும் பார்த்திருப்பீர்கள். என நம்புகிறேன்.
பேசும் வயலின் தாங்களிட்ட பாட்டு யாவும் பிரமாதம்.

RVS said...

இன்னும் பார்க்கவில்லை யோகன் பாரிஸ். நிச்சயம் பார்க்கிறேன். நன்றி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails