Friday, July 30, 2010

வெற்றிக் களிப்பு

footballfishing

கால்பந்தாட்டங்களில் கோல் அடித்தவுடன் மைதானம் எங்கும் ஓடி உட்கார்ந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து சட்டையை கழட்டி அசிங்கமாக ஆட்டி ரகளை செய்து கூச்சலிடுவதையும், கோல் அடித்த ராசாவை குப்புற படுக்கவைத்து அனைவரும் மேலே ஏறி ஆர்பரிப்பதை பார்த்திருக்கிறோம், எம்பி குதிப்பது, எத்தி விளையாடுவது போன்ற இன்னும் எத்தனையோ விதங்களில் வெற்றியை கொண்டாடுவதை பார்த்திருக்கிறோம். ஐஸ்லாந்தில் நடைப்பெற்ற ஒரு கால்பந்தாட்டப் போட்டியில் கோல் அடித்தவுடன்,  மீனை தூண்டில் போட்டு ஒருவர் பிட்டிபது போலவும், தூண்டிலில் சிக்கிய ராட்சஷ மீன் துள்ளி துள்ளி வருவது போலவும், மாட்டிய மீனை கடைசியாக நான்கு பேர் தூக்கி கையில் வைத்துக்கொண்டு எல்லாவற்றிற்கும் மேலாக ஓடி வந்து ஒருவர் அதைப் புகைப்படம் எடுப்பது போல கோல் அடித்த வெற்றியை கொண்டாடியிருக்கிறார்கள். அற்புதம்.

மக்கள் பார்வைக்கு...



போன பதிவின் தீட்டைத் துடைத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்... ஹா.. ஹா..... நவரசம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails