Friday, July 30, 2010

ஆங்கிலத்தில் வசைபாடும் கொரியன்

இந்த வசை பாடும் இலக்கணப் பதிவு கண்டிப்பாக ரசிப்பவர்களுக்கு மட்டும். மேலும் இதை ஒரு நகைச்சுவையாக பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மற்றவர்கள் இன்று என்னுடைய சைட்டுக்கு லீவ் என்று நினைத்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டு, நாளை சனிக்கிழமை சங்கதியில் சந்திக்கலாம் என்று பணிக்கிறேன். 

ரோடில் கொஞ்சம் ஓரமாக போய்க்கொண்டு இருந்தால் கூட "ஓரமா போடா சாவு கிராக்கி" என்று திட்டும் போது நமக்கு கொஞ்சம் பி.பி ஏறும். உடனே அவர்களை திட்டுவர்தற்க்கு நம்மில் சிலபேருக்கு வார்த்தை கிடைக்காமல் தடுமாறலாம். அவ்வளவு ஒழுக்க சீலர்கள் இருப்பார்களா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இருந்தாலும் அடியேன் போல் பலருக்கு கெட்டவார்த்தை என்றால் எது காய்கனி கெட்டுப்போய்விட்டது என்று சொல்வார்களே அதுபோல ஏதோ வார்த்தை தான் கெட்டுப்போய்விட்டது போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வேன். அவ்வளவு யோக்கிய சிகாமணி.
koreanswear1
கொரிய போன்ற நாடுகளில், ஆங்கிலம் பேசும் அந்நியர்கள் தங்களைத் திட்டினால் எப்படி அவர்களுக்கு மறுமொழி அளிப்பது என்பது பற்றி போர்டில் சாக்பீஸ் கொண்டு, டை கட்டி ஒரு பேராசிரியர் போல சொல்லிக்கொடுப்பதை பார்த்த பின்புதான், நம்முடைய ஒரு துறையின் அறிவாற்றலை எப்படி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்தது.தமிழில் என்ன ஒரு பிரச்சினை என்றால் ஏரியாவுக்கு  ஏரியா பேட்டைக்கு பேட்டை இது மிகவும் வித்தியாசப்படும். ஒரு பகுதியில் பேசும் நன்மொழி மற்றொரு பகுதியில் கொச்சை வார்த்தையாகவும், கொச்சை வார்த்தை நல்ல வார்த்தையாக மற்ற இடத்தில் வழக்கில் இருக்கும்.

ஒரு இலக்கணம் வகுத்து அவர் நடத்தும் இந்தப் பாடம் கொரியனில் இருந்தாலும் அதற்க்கு ஆங்கிலத்தில் கார்டு போடுகிறார்கள். இதில் மிக முக்கியம் என்னவென்றால் இதை சொல்லிக்கொடுக்கும் மகானுபாவனின் முகபாவனைகள் தான்.  ஒவ்வொரு வார்த்தைகளையும் தனியாகவும் அதோடு "THE" சேர்த்து சொல்லும்போது எப்படி அதன் பொருள் மாறுகிறது என்று சொல்லும் இலக்கண இலக்கிய வித்தியாசங்கள் அருமை. நான் இதைப் பார்ப்பதற்கு முன்னால் யூடுயூப்பில் 386,234 பேர் இந்த வகுப்பில் பங்குபெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆகையால் கொச்சை அல்ல என்று தெரிகிறது. கண்டு கேட்டு ரசியுங்கள்.

 

பார்த்தாயிற்றா? தயவு செய்து என்னை திட்டாதீர்கள். பார்க்கும் வரையில் ரசித்துவிட்டு பின்பு திட்டுவது என்ன நியாயம்.

6 comments:

பொன் மாலை பொழுது said...

வெறும் விளக்கத்கோடு இல்லாமல் அவர் படம் வேறு போட்டுக்காட்டியபோது சிரிப்பை அடக்கமுடியவில்ல.
எங்கிருந்துதான் இதெல்லாம் தேடி துருவி எடுப்பீர்களோ !!
--

RVS said...

விழுந்து விழுந்து சிரித்ததில் எனக்கு வயிறு வலியே வந்துவிட்டது கக்கு.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

lcnathan said...

ADUTHTHA CLASS PAADATHTHAI EPPOTHU VELIYIDUVEERKAL? swarasyamaaka IRUNTHATHU!!!

RVS said...

கொரியன் மாஸ்டர் அடுத்த கிளாஸ் எடுத்தவுடன் முதல் வெளியீடு நாமதான்.. ஓகே LCNATHAN.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

mkr said...

கெட்ட பதிவு.சும்மா சொன்னேன்.எப்படு உங்களால் மட்டும் இப்படி முடிகிறது

RVS said...

இதற்க்கு நிறைய எதிர்ப்பு இருக்கிறது எம்கேயார். இது போன்ற பதிவுகளுக்குப் பின்னர் என் ப்ளாக் பிக்கப் ஆவதற்கு ஒரு வாரம் ஆகிறது. பரவாயில்லை ஒரு பாராட்டு கிடைத்திருக்கிறது. இது போன்ற பதிவுகளை நான் அசிங்கமாக பாவிக்கவில்லை. ஒரு நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறேன். ஆனால் எல்லோரும் அதுபோல் நினைப்பதில்லை போலிருக்கிறது. குறைத்துக்கொள்ள வேண்டும். பார்க்கலாம். வருகைக்கு நன்றி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails