தமிழகத்தில் உள்ள எல்லா பிரபல அரசியல் வார இதழ்களின் முக்கியஸ்தர் பேட்டி பாணியில் எழுதப்பட்டது இது.
சக ஆரூடகர்களான கிளி, குரங்கு, நான்கு கால், ஐந்தறிவு ஜீவன்கள் போன்றவர்களை காட்டிலும் தன்னுடைய சக்சஸ் ரேட் அதிகமாக இருப்பதால் அந்த மெதப்போடு இருந்த ஜெர்மனியின் ஆக்டோபஸ் பால் தன்னுடைய வெற்றிக்களிப்பில் ஜாலியாக தனது எட்டாவது கரத்தால் மாலை நேர சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில் நாம் உள்ளே நுழைந்தோம். அப்பாயின்மென்ட் இல்லாமல் யாரையும் பால் பார்ப்பதில்லை என்று அதன் உதவியாளர் தடுத்தும் ஆர்வ மிகுதியால் செருப்பால் அடித்தாலும் பரவாயில்லை ( ஆக்டோபஸ் அணியும் செருப்பு ஒன்றும் பெரியதாய் இருக்காது என்ற எண்ணத்திலும், மேலும் எப்போதும் தண்ணியிலே இருப்பதால் அழுக்காகவும் இருக்காது என்பதாலும்) என்று உள்ளே நுழைந்தோம். பிறந்ததிலிருந்தே ரொம்பவும் சொகுசாக கரடு முரடு அலையடிக்கும் கடலில்லாமல் கண்ணாடிக் கட்டிலில் இருந்து பழகியதால் நன்றாக பள பள வென்றிருந்தது. தான் கெலித்த ஹாலந்து மற்றும் ஸ்பெயின் விளையாடிய இறுதிப்போட்டியின் ஹைலைட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு மாலை வணக்கத்துடன், ஜோதிட சக்ரவர்த்தி, ஜோதிட சிரோன்மணி, உதைப்பந்து தீர்ப்பு தந்த உத்தமர், தண்ணீரில் அவதரித்த தவப்பால் ( தவப்புதல்வனுக்கு பதிலாக), அவர்களுடனான பேட்டி இனிதே ஆரம்பமாகியது.

நாம்: வணக்கம், திரு.. திருமதி.. எப்படி சொல்றது.. பால் அவர்களே.
பால்: மாலை வணக்கம். அன்பு மானிடப் பிறப்பே....
நாம்: நன்றி பால், நல்லவேளை உடன்பிறப்பே என்று சொல்லவில்லை. தப்பித்தேன்.
பால்: அப்ப. ரத்தத்தின் ரத்தமே சொல்லட்டுமா?
நாம்: ஐயா ஆக்டோபஸ், ஆளை விடுங்கள். உங்களோட பிறப்பு பற்றி..
பால்: அப்ப. ரத்தத்தின் ரத்தமே சொல்லட்டுமா?
நாம்: ஐயா ஆக்டோபஸ், ஆளை விடுங்கள். உங்களோட பிறப்பு பற்றி..
பால்: எனக்கு உங்கள மாதிரி கர்ப்ப வாசம் கிடையாது. கிட்டத்தட்ட சுயம்பு மாதிரி. பொறந்ததே நீங்க பார்க்கிற இந்தக் கண்ணாடி கூண்டில தான். பொறந்தப்பவே வானத்திலிருந்து கொஞ்சம் ஒளி தெரிஞ்சதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் ஒருத்தர் ஆய்வு செய்து இப்போ சொல்லியிருக்கார்.
நாம்: உங்களுக்கு இந்த அதிசய மற்றும் அபூர்வ சக்தி இருப்பது எப்போது உங்களுக்கு தெரிஞ்சுது?
பால்: அந்த சம்பவம் நடக்கும் போது எனக்கு ஆறு மாசம் இருக்கும். ஒருநாள் என்னை எடுத்து வளர்க்கிற உயிரியல் பூங்கா காப்பாளர் வீட்டுல அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒரே தகராறு. அவரோட நாலு பையன்ல ஒருத்தனோட சாயல் மட்டும் பார்க்க வித்தியாசமாக இருக்கான் என்றும் தன்னுடைய வாரிசு இல்லை அப்படின்னு அவரோட வீட்டுக்காரம்மாகிட்ட கத்தி கூச்சல் போட்டுக்கிட்டு இருந்தாரு. நிறைய நேரம் சண்டை போட்டு ஒரு குழப்பத்துல என்னோட கண்ணாடி கூண்டுல ஒரு பக்கம் இவர் படத்தையும், அடுத்த பக்கம் இவரோட வேலை செய்யும் இன்னொரு அந்த டொக்கு நோஞ்சான் அசிஸ்டண்ட் படத்தையும் தொங்கவிட்டு, ரெண்டுத்துலயும் எனக்கு பிடிச்ச சாப்பாடு போட்டு ஆர்வமா சாப்பிடச் சொன்னாரு. அப்ப நான் கரெக்டா இவர் படம் இருக்கும் பக்கத்திலேர்ந்து எடுத்து சாப்பிட்டேன். அவருக்கு ஒன்னும் புரியலை.
நாம்: (மிகவும் ஆர்வமாக..) அப்புறம்..அது அவர் பையன் தானா?
பால்:டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்தாரு. அப்படியே ஷாக்காயிட்டாரு. நான் சொன்னது சரியாயிடுச்சு. அந்த ஒரு பையன் மட்டும் தான் அவருக்கு பொறந்ததாம். மத்ததெல்லாம் இல்லையம்.

நாம்: ( கிளைமாக்ஸ் கேட்டு அதிர்ந்து இருக்கையை விட்டு எழுந்தே விட்டோம்..)
பால்: உட்காருங்க.. உட்காருங்க.. இதெல்லாம் சாதாரணம். மேல கேளுங்க..
பால்: உட்காருங்க.. உட்காருங்க.. இதெல்லாம் சாதாரணம். மேல கேளுங்க..
நாம்: இவ்வளவு அருள் இருக்கிற நீங்க ஏன் இப்போ எல்லாம் வெறும் புட்பால் முடிவுகள் மட்டும் கணிச்சு சொல்லிக்கிட்டு வரீங்க? எங்கயாவது கோயில் பக்கம் போய் உட்கார்ந்தா நிறைய சில்லரை தேறுமே.
பால்: அந்த அதிபயங்கர குடும்ப கலவரத்திற்கு பின்னர், அந்த உயி.பூ.காப்பாளரின் மனைவியும் அந்த அசிஸ்டன்ட்டும் சேர்ந்து ஆக்டோபஸ் வறுவல் கிட்னிக்கு மற்றும் நம்ம உறவுக்கு நல்லது நாம வறுத்து சாப்பிடலாம் அப்படின்னு திட்டம் தீட்டியது தெரிந்ததால் அத்தோடு என் குடும்ப கணிப்புகளை நிறுத்திக்கொண்டேன். என்னை திருத்திக்கொண்டேன்.
நாம்: புட்பால் தவிர இன்னும் வேறெந்த விளையாட்டுக்கெல்லாம் ஆருடம் சொல்ல முடிவெடுத்திருக்கிறீர்கள்.
பால்: இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் கிரிக்கெட் என்னும் விளையாட்டிற்கு முடிவு கணித்துச் சொல்லக் கேட்டிருக்கிறார்கள். நேற்று ஒரு ஐந்தாறு புக்கீக்கள் வந்து குசலம் விசாரித்து ஏழெட்டு 'சி' பேரம் பேசிவிட்டு போயிருக்கிறார்கள். இப்போது தான் அதுபற்றிய புராதன வீடியோ கோப்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பேரம் மடிந்தால் விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளிவரும்.
அதற்குள் பாலைப் பார்ப்பதற்கு பெரிய க்யு வரிசை நிற்பதால் நம்மை ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லி விரட்டியடித்தார்கள். நாம் வெளியே வருகையில் PETA -விலிருந்து இரண்டு பேர் நின்றிருந்தார்கள். பாலின் இந்தியப் பயன்பாடுகளை எண்ணிக்கொண்டே வந்தோம். அந்த சிந்தனையில் உதிர்ந்த முத்துக்களில் சில...
பாலை பின்பற்றி, குருவாக ஏற்று, பால் ஜோதிடம் என்று யாராவது போர்டு போட்டு உட்காரலாம்.
அப்படி பால் ஜோதிடம் சொல்வோரிடம், ஆண்பால், பெண்பால், இடைப்பால் என்று எல்லோருக்கும் சொல்வார்களா என்று கேட்டு வம்புக்கிழுக்கலாம்.
சின்னக் கவுண்டர், நாட்டாமை போன்ற நீதிமான்களால் கூட தீர்க்க முடியாத பல சிக்கலான வழக்குகளில் பால் கொண்டு நீதி வழங்கலாம்.
கிரிக்கெட்டில் மூன்றாவது அம்பயருக்கு பதிலாக பால் கொண்டு தீர்ப்பு அறிவிக்கலாம்.
மருத்துவமனைகளில் மொத்த பணத்தையும் கவுண்டரில் கட்டச் சொல்லி சில உயிர் போகும் பல கேசுகளுக்கு "இனிமே ஆண்டவன் தான் காப்பாத்தணும்" என்பதற்கு பதிலா "இனிமே பால் தான் காப்பாத்தணும்" என்று சொல்கிற நிலைமை வரலாம்.
பால் புகழ் நாடெங்கும் பரவி, பால் ரசிகர் மன்றம் மற்றும் பால் சாமி கோயில் அமைக்கப்படலாம்.
கடைசியாக பால் சில படங்களில் நடித்து அவை வெற்றிபெற்று, தேர்தலில் நின்று இந்தியப் பிரதம மந்திரி ஆகலாம். யார் கண்டார்.
நாம் இதோடு நம்ம மொக்கையை நிறுத்திக்கலாம்.
பட உதவி: http://www.threadless.com/
10 comments:
பாலோட திறமையை வெளிப்படுத்தற சாக்குல, உங்களோட திறமையை வெளிப்ப்படுத்திட்டீங்க..
நல்லாவே இருக்கு.. வாழ்த்துக்கள்.
ஓர் திருத்தம்.. 'போலந்து' அல்ல, 'ஹாலந்து / நெதர்லாந்து'
Thanks Madhava, a typo corrected now.
ரொம்ப நாளாச்சு, இந்த பக்கம் வந்து, சாரி தம்பி!
சும்மா கலக்குறே, வாழ்த்துகள்!
// தண்ணியிலே இருப்பதால் //
நீங்க எந்த தண்ணிய சொல்லுறீங்க ..??
சத்தியமா சக்க காமெடிங்க .. வலைசரத்துல தான் பார்த்தேன் .. அடடா இத்தன நாளா படிக்காம போய்ட்டோமே அப்படின்னு தோணுது .. என்னை விட நல்லா மொக்க போடுறீங்க ..
அண்ணன் செல்வா அவர்களே..
முறை மாமன் (மாமன் மகள்?) படத்தில் சத்யராஜ் கவுண்டமணியிடம் சொல்லும் அந்தத் தண்ணி அல்ல...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
பயங்கர காமெடிங்க .. சத்தியமா இவ்ளோ நாள் படிக்காம விட்டுட்டோமே அப்படின்னு வருத்தமா இருக்கு ..
KARPANAI MIKUTHIYAANA HAASYA PATHIVU!! ARUMAI!!!
nandri selvakkumar :)
nandri lcnathan :)
anbudan RVS
Post a Comment