ஞாயிற்றுக்கிழமை தி.நகருக்கு குடும்பசகிதம் கார் எடுத்துக்கொண்டு போனால், நாம் கார் நிறுத்திவிட்டு வருவதற்குள் பிரம்மாண்டமாய்க்குள் சர்வஜனமும் குடியிருக்கும் சகல மாடியிலும் ஒரு ஐட்டமாவது வாங்கிக்கொண்டு வெளியே வந்துவிடலாம். இன்ச் இன்ச்சாக அப்படியே உருட்டிக்கொண்டே போய் யாராவது வண்டியை எடுக்கும் போது உள்ளே தள்ளலாம் என்று பனகல் பார்க்கை கிரிவலம் வருவதுபோல் கர்மசிரத்தையாக அண்ணாமலையாரை வேண்டிக்கொண்டு சுற்றி வந்தால் கூட ஒரு சைக்கிள் கேப் அளவு இடம் கிடைக்கமாட்டேன் என்கிறது. நல்லி போன்ற சில புண்ணியவான்கள், இடமும் மனசும் காசும் தாராளமாக இருப்பவர்கள் கடைகுள்ளேயே கார் நிறுத்துவதற்கு கட்டிவிட்டிருக்கிறார்கள்.
கீழே நாம் பார்ப்பது ஹங்கேரியின் தலைநகரமான புடாபெஸ்ட்டில் இருக்கும் ஒரு பாதாள பார்க்கிங். ரோடுக்கு கீழ் ஒரு பாதலாலோகமே இருப்பது போல அவ்வளவு நிறுத்தங்கள். தளத்துக்கு நூற்று ஒன்று கார்கள் என்று, இருக்கும் நான்கு தளங்களில் மொத்தம் நானூற்று நான்கு கார்கள் வரை நிறுத்தலாம். வண்டியோட்டிகள் ஒன்றும் பெரியதாய் சிரமப்படத் தேவையில்லை. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட ஒரு இடத்தில் காரை கொண்டுபோய் ஒரு நிறுத்தினால், சென்சார்கள் துணை கொண்டு நீங்கள் நிறுத்தியது சரியா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டு அப்படியே அலேக்காக எந்த தளத்தில் இடம் இருக்கிறதோ அங்கு தானே தூக்கிக்கொண்டு போய் வைத்துவிடுகிறது. வெளியே இருக்கும் தானியங்கி ஒன்றில் காசைப் போட்டு டோக்கென் பெற்றுக் கொள்ளலாம். திரும்பி வந்தவுடன் அந்த டோக்கனைப் போட்டால் நிற்கும் இடத்திற்கு வண்டி மறுபடியும் ஆஜர். வீடியோவைப் பாருங்கள். வெரி இன்ட்ரெஸ்ட்டிங்.
நிறைய அண்டர்கிரவுண்ட் சங்கதிகள் நடக்கும் நம் தேசத்தில், இப்படி ஒரு உருப்படியான அண்டர்கிரவுண்ட் வேலை எப்போது நடக்கும்? ஒன்றும் பெரிய விஷயமில்லை, இப்போது பலவிதமான கம்பனி ஒயர்கள் பதிக்க நோண்டும் ஆழத்தையே இன்னும் கொஞ்சம் தூரம் கீழே கூட எடுத்தால் போதும். கார் நிறுத்திவிடலாம்!!
கொஞ்சம் லைட்டான சங்கதி. பார்கிங் சம்பந்தமாத்தான்... ஒரே தமாசு...
கொஞ்சம் லைட்டான சங்கதி. பார்கிங் சம்பந்தமாத்தான்... ஒரே தமாசு...
6 comments:
ஹைய்யோ!!!!!!!!!!!!!!!
சூப்பர்!!!
அந்த பச்சக்கலர் காரைத்தானே சொல்றீங்க.. சிரிப்பை அடக்க முடியலை..
வருகைக்கு நன்றி துளசி கோபால்..
அன்புடன் ஆர்.வி.எஸ்
நான் புடாபெஸ்ட்லே கார் பார்க் பண்ணுவதைச் சொன்னேன்.
இதேபோல ஷாங்காய்லேயும் வந்துருக்கே!
very nice RVS i became fan of your blog
vijay
புடாபெஸ்ட் கார் பார்க் சூப்பர்
Can we dream one like this done by our T Nagar Usman Road Shop Owners - who mint money !!!
உஸ்மான் ரோட்டுல பார்க்கிங் போட்டா கரை வேட்டிகள் ஆதிக்கம் அதிகம் இருக்கும். எந்தக் கரையிடம் சில்லறை நிறைய இருக்கோ அது அங்கே கடை விரிக்கும். முதல்வர் கொண்டு திறந்தவுடன், ரெண்டே மாதத்தில் பார்க்கிங் பல்ல இளிக்கும் ஹி.. ஹி..ன்னு... சரியா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாய் ராம் கோபாலன் சார்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment