பொதுவாக சம்பளம் வாங்குபர்கள் கம்பனிக்கு எவ்வளவு செலவு என்பதை CTC ( Cost to Company) என்று கூறுவார்கள். இதுவும் CTC தான். Cost to Country. உலகெங்கிலும் மனிதகுலத்திற்கு சேவை(?) செய்யும் இன்றைய மாண்புமிகு அரசியல்வாதிகளின் சம்பளங்களை பட்டியலிட்டிருக்கிறது தி எகானமிஸ்ட் என்ற சஞ்சிகை. அகில உலகத்தில் அதிக சம்பளம் வாங்குவது எந்த நாடு தெரியுமா? கென்யா நாட்டு பிரதம மந்திரி ரைலா ஒடிங்கா. ஆனால் மனிதர் பெரிய மனுஷர். இந்த முறை அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு அளித்த $430000 சம்பள உயர்வை பெருந்தன்மையாக வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் தங்களுக்கும் இருபத்தைந்து சதவீதம் உயர்வு அளித்துக்கொண்டிருக்கிரார்கள். மன்னருக்கு கொடுத்து மந்திரிகளும் சம்பாதித்திருக்கிறாகள்.
இந்த சம்பளங்களின் மதிப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவிகிதம், மற்றும் மக்களின் பொருள் வாங்கும் சக்தி போன்றவற்றை வைத்துக்கொண்டு கணக்கிட்டிருக்கிறார்கள். ரைலா ஒடிங்கா வாங்கும் சம்பளம் அவர் நாட்டு மக்கள் வாங்குவதை காட்டிலும் 240 மடங்கு அதிகமாம். சீன அதிபர் வாங்கும் சம்பளம் நாற்பது மடங்கு அதிகம். எல்லோரை காட்டிலும் மிகவும் குறைவாக சம்பளம் வாங்குபவர் நமது நாட்டு பிரதமர், அரசியல் சந்நியாசி ( அப்படித்தான் போட்டிருக்கிறார்கள் அந்த பத்திரிக்கையில்), திரு. மன்மோகன் சிங் அவர்கள். கீழே பட்டியலை பார்க்கவும்.
நம்மூர் அரசியல்வாதிகள் மக்கள் சேவையில் ஊறிப்போனவர்கள், ஒத்தை ரூபாய் வாங்கிக்கொண்டு ஊருக்கு சேவகம் பண்ணுபவர்கள். சம்பளம் வாங்காமல் அவர்கள் உழைப்பதைக் கண்டு தொண்டர்களே ஆளுயர பண மாலைகளும், தங்க கிரீடமும், வெள்ளி செங்கோலும் அளித்து அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு கஞ்சிக்கு வழி செய்கிறார்கள். என்ன செய்வது பாவம்.அரசியல் ஏழைகள்.
சில அப்பாவி கேள்விகள்:
ஒரு சின்ன வருத்தம், இதிலும் இந்தியா கடைசி தானா? இன்னொரு கேள்வி, இதேபோல் தேசவாரியாக கிம்பள பட்டியலை யாராவது வெளியிடுவார்களா?
பின்குறிப்பு: இந்த சம்பளப் பட்டியலைப் பார்த்துவிட்டு கென்யா நாட்டுக்கு பிரதமந்திரியாக வேண்டும் என்ற அரசியல் கனவோடு கொட்டாம்பட்டி கொமாரு ஒரு புதிய அகில உலக கட்சி ஆரம்பித்திருப்பதாக ஒரு செய்தி அடிபடுகிறதே நெசம்மாவா?
சில அப்பாவி கேள்விகள்:
ஒரு சின்ன வருத்தம், இதிலும் இந்தியா கடைசி தானா? இன்னொரு கேள்வி, இதேபோல் தேசவாரியாக கிம்பள பட்டியலை யாராவது வெளியிடுவார்களா?
பின்குறிப்பு: இந்த சம்பளப் பட்டியலைப் பார்த்துவிட்டு கென்யா நாட்டுக்கு பிரதமந்திரியாக வேண்டும் என்ற அரசியல் கனவோடு கொட்டாம்பட்டி கொமாரு ஒரு புதிய அகில உலக கட்சி ஆரம்பித்திருப்பதாக ஒரு செய்தி அடிபடுகிறதே நெசம்மாவா?
1 comments:
புள்ளி விபரம் நல்லாத்தான் இருக்கு , ஆனா அரசிய வாதிகளோட சொந்த காரவுங்க சொத்து மதிப்பு பத்தி ஒரு புள்ளி விவரம் போட்டிகனா நல்லா இருக்கும்
Post a Comment