மிக்கேல் அஞ்சேலோ, டாவின்சி போன்ற அதீத திறமை படைத்த மேலை நாட்டு ஓவிய அறிஞர்களும், பூ வரைந்தால் வாசமும், தீ வரைந்தால் நம்மை தீண்டும் அளவிற்கு அளப்பரிய உயிரோவியங்கள் பல வரைந்த நம் தேசத்து ஓவியர்களான ராஜா ரவிவர்மா தொடங்கி மணியம் செல்வம், சில்பி, ஆதிமூலம், மருது போன்றோரும் தூரிகை கொண்டு தீட்டிக் காட்டிய ஓவியங்களை கணினியின் துணைகொண்டு பிங் பாங் கோட்பாட்டிலிருந்து ஆரம்பித்து பரிணாம வளர்ச்சியினை சுவற்றுச் சித்திரங்களாக வரைந்து தள்ளி கணினியில் உள்ளே கொடுத்து அட்டகாசமான அனிமேஷன் கிராபிக்ஸ் செய்து வெளியே எடுத்து படம் ஒன்று தயாரித்திருக்கிறார்கள். மச்ச, கூர்ம அவதாரங்கள் கூட அதில் இடம்பெற்றிருக்கின்றன. அதிலும் நடந்து செல்லும் ஒரு நங்கை சுவரில் தோன்றும் டினோசரை பார்த்து அலறி அடித்து ஓடுவதும், குரங்கிலிருந்து பரிணாம ப்ரமோஷன் பெற்ற மனிதன் துப்பாக்கி மற்றும் ஏவுகணை கொண்டு ஒருவரைஒருவர் தாக்கிக் கொல்வதும் அடடா... காண்பதர்க்கரிய கிராபிக்ஸ் அனிமேஷன் கலக்கல்.
மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை "நீ படைப்பாளி.. நான் துடைப்பாளி " என்று எச்சை துப்பி "காதலா.. காதலா" கமல்ஹாசன் துடைக்கும் ஓவியங்களும், பலகோடி மக்கள் துதித்து வணங்கும் தெய்வத் திருவுருவங்களை ஆடை இல்லாமல் வரைந்து அசிங்கப்படுத்தும் எம்.எப். ஹுசைன், "தளபதி", "அம்மா", "ஐயா", "அப்பா" என்று பலரும் பல இடங்களுக்கு அழைப்பதாக சுவர்கள் அனைத்திலும் வரைந்து வருகவென்று அழைக்கும் ஓவியக்காரர்களும், ஆஞ்சநேயர், மதர் தெரசா சித்திரங்களை நடைபாதையில் வரைந்து காசு பொறுக்கும் நடுத்தெரு நாயகர்களும் இப்பதிவு எழுதும் போது ஏனோ மனதில் வந்து வந்து மறைந்தனர்.
0 comments:
Post a Comment