உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நேரத்தில், ஜெர்மனியை பிறந்தகமாகக் கொண்ட பால் என்ற அஷ்டபுஜ ஆக்டோபஸின் ஆரூடம் எல்லோரையையும் மைதானத்திலிருந்து திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. நம்மூரில் டி.விக்கு டிவி டைட்டில் பாட்டு போட்டு சொருபாக்களும் பத்ரன்களும் காழியூர்களும் செய்கிற இந்த வித்தையை வாயை திறந்து பேசமுடியாத பால், கண்ணாடி பெட்டக உணவைத் தின்று அந்த தேசம் ஜெயிக்கும் என்று சாப்பிட்டு சொல்கிறது. தின்கிற உப்புக்கு துரோகம் நினைக்காமல். இந்த முறை ஸ்பெயின் சாப்பாட்டை சுவைத்து விட்டு இந்த 2010 கால்பந்தாட்ட உலகக்கோப்பையில் ஜெர்மனி தோற்கும் என்றும், இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் தான் நுழைகிறது என்று ஜோசியம் சொல்லிவிட்டது. தேசப்பற்று இல்லாத பால் என்கிற ஆக்டோபஸ் ஒரு தேசத்துரோகி என்றும் எட்டப்பன் என்றும் ஜெர்மன் ரசிகர்கள் வாய்க்கு வந்தபடி திட்டி கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். நம்மூரில் குழந்தையை விட்டு திருவுளச் சீட்டு மற்றும் சாமி முன்னாடி பூ கட்டிப் போட்டு எடுக்கச் சொல்வது போல கீழே பாருங்கள் பாலின் தேர்வை... கூட்டமா போட்டோ வீடியோ எடுக்குற மக்கள் வேற..
இதே மாதிரி பி.ஈ சீட் செலக்ட் பண்றது, கம்பனிக்கு ஆள் எடுக்கறது, நம்ம ஏரியா கவுன்சிலர் முதல் பிரதமர் வரை தேர்ந்தெடுக்கறது இப்படி எல்லாத்துக்கும் நம்ம ஊர்ல ஆக்டோபஸ் இல்லாம வேற எதாவது ஒரு ஜந்து வச்சு பண்ணலாம்னா எதை தேர்வு செய்யலாம். பின்னூட்டத்துல சொல்லுங்க... உங்க முழு விளக்கத்தோட.. நல்ல ஐடியாவிற்கு ஒரு எவர் சில்வர் ஸ்பூன் பரிசு... முந்துங்கள்... ஸ்டாக் உள்ளவரை மட்டுமே...
பின் குறிப்பு: மேலே படத்தில் இருப்பது பால் அல்ல.. ஹி ஹி ...
பின் குறிப்பு: மேலே படத்தில் இருப்பது பால் அல்ல.. ஹி ஹி ...
0 comments:
Post a Comment