"வீட்டுக்கு அமிச்சிட்டாங்க, சம்பளத்துல கை வச்சிட்டாங்க, அரை நாள் வேலை பார்த்தா போதும்னு சொல்லி வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாங்க.." இப்படி ஏகத்துக்கு பஞ்சப் பாட்டு பாடும் 55% வயதுக்கு வந்தவர்கள் (Adults) முப்பது மாதங்களுக்கு முன்பு வெற்றிநடை போட்டு ஆரம்பித்த பொருளாதார மந்த நிலையில் தங்களது நிலை பற்றி
Pew Research Center என்ற ஆராய்ச்சி நிறுவனம் செய்த வயத்தெரிச்சல் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில் மேலும், அமெரிக்கர்களின் கார்டு தேய்த்து கடன் வாங்கும் மற்றும் செலவழிக்கும் பாணி முற்றிலும் மாறிவிட்டதென்றும், பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய முடிவுகள் பற்றிய அக்கறை தற்போது இல்லை என்றும், தங்களது பணி ஓய்வுக் கால திட்டங்கள் முற்றிலுமாக மறந்து விட்டார்கள் என்றும், பர்ஸ் மற்றும் வீட்டின் மதிப்பு போன்றவை நல்ல நிலைக்கு உயர இன்னும் பல வருடங்கள் பிடிக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.
இந்த வேலை வெட்டி இல்லாத ஏழரை நாட்டு சனி வேளை தங்கள் தேசத்தை பிடித்த வேளையில் தங்களுக்கு என்னவெல்லாம் நிகழ்ந்ததென்று அவர்கள் வாயாலேயே கேட்டு இந்த பட்டியலை தயாரித்திருக்கிறார்கள்.
1. விலை நிறையா வச்சு விக்கிற உசத்தி கம்பெனி பொருளை வாங்குறதை விட்டுட்டு கம்மியா பிளாட்பாரத்தில போட்டு விக்கிற கம்பெனி சாமானை வாங்குறோம்.
2. காசை பாங்கிலும் கார்டிலும் சுத்தமா வழிச்சிக்கிட்டு புள்ள குட்டியோட பல ஊர் சுத்துறதை சுத்தமா நிறுத்திட்டு சைக்கிள்ல சொந்த ஊர்ல தெருக் கோடி வரை போய் வயல் வரப்பை பார்த்துட்டு அதையே சுற்றுலாவா நினைச்சு திருப்தி பட்டுக்குறோம்.
3.கொஞ்ச நஞ்சம் இருக்கிற கைக்காசை ரத்தன் லால் சேட்டு மாதிரி வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறோம்.
4. உற்சாக பானம், கடா மார்க் பீடி, சிகரெட் போன்ற லாஹிரி வஸ்த்துக்கள் உபயோகிப்பதை சுத்தமா நிறுத்திவிட்டோம். நம்மூர் தாய்மார்கள் இங்கே இந்த நிலைமை வாராதா என்று ஏக்க பெருமூச்சு விடுவது அமெரிக்காவிற்கு ஆடிக் காற்று போல இருப்பதாக எல்.ஏவில் இருக்கும் என் அத்தைப் பையன் போன் போட்டு சொல்கிறான்.
5. உடம்புக்கு ஒரு சீக்கு வந்தாக் கூட மருந்து வாங்க காசு இல்லை.
6. ரெண்டு நாள் முந்தி பழகினவன்ல ஆரம்பிச்சு இருவது வருஷமா நண்பனா இருக்கறவன், ஒன்னு விட்ட ரெண்டு விட்ட மூனு விட்ட சித்தப்பாவோட பசங்க அப்படின்னு எந்த வித்தியாசமும் பார்க்காம தலையில் கவுத்த தொப்பியை கையில ஏந்தி திருவோடா மாத்தி பிச்சை எடுக்குறோம்.
7. வீட்டு வாடகை வாங்கறத்துக்கு ஓனர் வந்தா வெளிக்கதவை வெளிப்பக்கமா நவ்தால் பூட்டு போட்டு தாப்பா போட்டு கட்டிலுக்கு அடியில போய் ஒளிஞ்சுக்குறோம்.
8. கட்ட பிரம்மச்சாரியா இருக்கிறவங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்ன்னு இருக்கோம், கல்யாணம் பண்ணிகிட்டவங்க பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்காங்க என்கிற அதிர்ச்சியான உண்மையை ஒத்துக்கிட்டிருக்காங்க.
9. அப்பா அம்மாட்ட விரச்சுக்கிட்டு வீட்டை விட்டு தனியா ஓடிவந்த நாங்க திரும்பவும் எங்களை பெற்ற தெய்வங்களின் பாதங்களையே சரணாகதியாக தஞ்சம் அடைந்துள்ளோம்.
10. பாங்க்ல நோட்டீஸ் விட்டு லோன்-ல வாங்கின வீட்ட அவங்கள்ட்ட கொடுத்துட்டு வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டாங்க.
மேலே குறிப்பிட்டது அவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கூரிய பல வயற்றெரிச்சல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து.
தகவல் உதவி: http://andrewsullivan.theatlantic.com
பட உதவி: http://funkyminds.blogspot.com/
1 comments:
அட, இப்படியா நடக்குது அங்கே?!
http://amaithiappa.blogspot.com/
Post a Comment