வணிக மையங்கள் தங்களது பெயர்ப்பலகையில் செம்மொழியாம் தமிழ்மொழிக்கு அரியாசனம் தராவிட்டாலும் தம்மாத்தூண்டு இடமாவது கட்டாயம் கொடுக்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சி சமீபத்தில் பிறப்பித்த அதிரடி உத்தரவினால் விளைந்த சில நற்றமிழ் பெயர்கள் சில என் கண்ணில் தென்பட்டன. இந்த மாதம் இருபதாம் தேதிக்குள் இத்தமிழ்ப் பெயர் சூட்டும் வைபவைத்தை நடத்தாதவர்களின் கடைகள் சென்னையிலிருந்து முற்றிலுமாக அகற்றி அந்த இடம் சுத்தப்படுத்தப்படும் என்று மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார். என் கண்களுக்கு சிக்கிய சென்னை செந்தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சில கீழே உள்ள மேஜையில் :) சாரி... நானும் பின் வரும் Table ன்னு சொல்றதுக்கு பதிலா மேஜைன்னு தமிழிட்டேன்.... சுனில் மிட்டலின் Airtel நிறுவனம் தமிழில் பெயர் வைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு அட்டகாசமான கற்பனை செய்து கீழ்கண்ட படத்தை போஃட்டோஷாப்பிய http://www.mypno.com வலைத்தள வடிவமைப்பு அன்பருக்கு வாழ்த்துக்கள்.
Ezhil Opticals | எழில் கண்ணணியகம் |
Balaji Traders | பாலாஜி வணிகர்கள் |
Kumar Snacks | குமார் நொறுக்குத் தீனி |
Tip Top Dry Cleaners | டிப் டாப் உலர் சலவையகம் |
Chandra Working Women Hostel | சந்திரா வேலை செய்யும் பெண்கள் விடுதி |
Muthu Tea and Snacks | முத்து டீ அண்டு ஸ்நேக்ஸ் |
Siva Hardwares | சிவா கடினப்பொருளகம் |
Sify E-Port | ஸிஃபி ஈ-போர்ட் |
Dhiraviyam Coffee Shop | திரவியம் கொட்டை வடி நீர்க் கடை |
Raj Travel Agency | ராஜ் பயண முகவர் பணிமனை |
தமிழ்ப் பெயர் வைக்கும், வைக்க தூண்டிய தமிழ் கூறும் நல்லுலகிற்கு நன்றி! (கடைசி வார்த்தை நன்றியை நாம் ஊர்த் திருவிழாக்களிலும், அனைத்து பண்டிகை காலங்களிலும் தவறாமல் பார்க்கும் சன், விஜய் போன்ற தொலைக்காட்சிகளிலும் இடம்பெறும் பட்டிமன்றங்களில் தனது கட்சி வாதத்தை எடுத்துரைத்த பிறகு முடிவாக சொல்லும் நன்றி போல மூன்று தடவை படிக்கவும்).
5 comments:
அட!!
ஆனா ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதுவது செம்மொழியில் அடங்குமா?
ஆனா சில உண்மையான மாறுதல்களை வரவேற்கிறேன்.
பகிர்வு மிக அருமைங்க.
//முத்து டீ அண்டு ஸ்நேக்ஸ்//- இது தமிழ் பெயர் அல்ல...டீ - க்கு - தேனிர் என்று சொல்லலாம்.. தேனிர் என்ற வார்த்தை அழகாக உள்ளது..ஸ்நேக்ஸ்-நொறுக்குத் தீனி.
nice post thanks
cloud nine films pera maathuvanglaa
ஆஹா. நல்ல கற்பனை..
//சந்திரா வேலை செய்யும் பெண்கள் விடுதி//
அந்த விடுதியில், பணிப்பெண்ணின் பெயர் சந்திராவோ ?
Post a Comment