கல்யாணமான பெண் யார்?
மேற்க்கத்திய நாடுகளில் லிட்டில் ஜானி ஜோக்குகள் மிகப் பிரபலமானவை. இந்த ஜோக் அசைவ வகையறா. சைவப் பிரியர்கள் இதற்குமேல் படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வகுப்பறையில் பாடங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் லிட்டில் ஜானி. வகுப்பெடுத்துக்கொண்டிருந்த மேடம் லிட்டில் ஜானியிடம் கீழ் கண்ட கேள்வியை கேட்டார்.
"ஜானி, ஒரு லாம்ப் போஸ்ட் வயர்-ல மூனு பறவைங்க உட்கார்ந்துகிட்டு இருக்கு. ஒரு வேடன் துப்பாக்கி எடுத்து ஒரு பறவையை சுட்டுட்டான். மீதி எவ்வளோ பறவை இருக்கும்?"
"ஒன்னும் இருக்காது மேடம்"
"எப்படி?"
"துப்பாக்கி சத்தத்துல பயந்து பறந்திருக்கும்"
"விடை தவறு. மீதி இரண்டு பறவைகள் இருக்கும். ஆனா, நீ சிந்திச்ச விதம் எனக்கு பிடிச்சிருக்கு" என்றார் மேடம்.
பதிலுக்கு ஜானி மேடத்தை ஒரு கேள்வி கேட்டான்.
"ரோடுல மூனு பொம்பளைங்க கோன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுகிட்டே போறாங்க. ஒரு பொம்பளை லேசா கடிச்சு கடிச்சு சாப்பிடறா, ரெண்டாவது பொம்பளை நாக்கை வெளியே நீட்டி பூனை தட்டுல பாலை குடிக்கிற மாதிரி சாப்பிடறா, மூனாவது பொம்பளை பெரிய வாழப்பழத்தை தோலை உறிச்சி சாப்பிடற மாதிரி சாப்பிடறா. இந்த மூனு பொண்ணுங்கள்ள யார் கல்யாணம் ஆனவங்க?
கொஞ்சமா அதிர்ச்சியான புருவத்தை உயர்த்திய ஆசிரியர் மேடம், சுதாரித்துக் கொண்டு "மூனாவது பெண்" என்றார்.
லிட்டில் ஜானி சிரித்துக் கொண்டே
"தப்பு மேடம். எந்தப் பொண்ணு கைவிரல்ல கல்யாண மோதிரம் இருக்கோ அந்தப் பொம்பளை தான் கல்யாணம் ஆனவ. ஆனா, நீங்க யோசிச்ச விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடம்" என்றான்.
1 comments:
your's smelling non-veg, these days.. ?? HA... HA... HA..
Post a Comment