'கவர்ச்சிப் புயல்' லைலாவின் அரவணைப்பில் சென்னை சிக்கி திக்கித் திணறியபோது நான் மீனாட்சியின் காலடியில் தஞ்சம் அடைந்திருந்தேன். இந்த புயல் பெயர்சூட்டுதல் வைபவம் யாரால் எங்கு நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை. பெண்ணினத்தால் புண்பட்டவர்கள் ஒரு சங்கம் அமைத்து பெயரிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். சற்று மாற்றி அடுத்த புயலுக்கு நல்ல ஆண்மையான பெயரான 'ரவி' என்று வைக்கலாம். ஏனென்றால் அவருக்குத்தான் 'இளம் புயல்' என்று டைட்டிலில் போடுகிறார்கள்.
ஒரு வாரமாக ஒரு சிறிய சுற்றுலா. மீனாட்சியின் அரசாட்சியில் உள்ள மதுரை, மதுரைக்கு கல்யாணத்திற்கு வரும் கள்ளழகரின் அழகர்மலை, காலமேகப் பெருமாள் குடி கொண்டுள்ள திருமோகூர், கோடையில், இளம் ஜோடிகள் மற்றும் காதலர்களின் வாசஸ்தலமான (கோ)கொடைக்கானல் என்று ஒரு ஜாலி ட்ரிப் மனைவி மக்களுடன் போய் வந்தேன். மேற்கண்ட படம் அடியேனின் 5MP மொபைல் கமெரா மூலம் 'mist' படிந்த கொடைக்கானலில் க்ளிக்கியது. அடிக்கடி இனி ப்ளாக் ரூபத்தில் தொந்தரவுகள் தொடரும். கண்டிப்பாக இப்போது போய் வந்த டூர் பற்றிய பயணக் கட்டுரையும் உண்டு.
1 comments:
//இந்த புயல் பெயர்சூட்டுதல் வைபவம் யாரால் எங்கு நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை.//
http://en.wikipedia.org/wiki/Lists_of_tropical_cyclone_names
North Indian Ocean -- see under list 3 by pakistan..
Next one is 'Bandu'
'புயல்' வரும் பின்னே
'பெயர்' வந்துவிடும் முன்னே
//'ரவி' என்று வைக்கலாம். ஏனென்றால் அவருக்குத்தான் 'இளம் புயல்' என்று டைட்டிலில் போடுகிறார்கள். //
HA.. Ha.. HA...
Post a Comment