சமீபத்தில் சந்திரனுக்கு ஏவப்பட்ட சந்திராயன் - I என்ற விண்கலம் பல அறிய தகவல்களை சேமித்து நமக்கு அனுப்புகிறது. குழாயடியும் சண்டையும் உள்ளதா என்று தெரியாது ஆனால் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது தெரிகிறது.
உயிர் வாழ குறைந்தபட்சம் வயிற்றிக்கு தயிர் சாதம், மானத்தை மறைக்க துணி, வெயில் மழைக்கு ஒதுங்க ஒரு இடம் இம்மூன்றும் அவசியமாகிறது. இதில் தண்ணீர் இருப்பதாக தென்பட்டதால் வயிற்றிற்கு வகை செய்தாயிற்று. இப்போது அங்கே இரண்டு கிலோ மீட்டர் நீளமும், 380 மீட்டர் அகலமும் கொண்ட குகை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதலால் தலைக்கு மேலே ஒரு கூரையும் கிடைத்தாயிற்று. இனிமேல் நிலா காட்டி குழந்தைகளுக்கு சோருட்டிய காலம் போய், நிலவில் சோருட்டகூடிய காலம் தலைப்பட்டிருக்கிறது. இத்தகைய தகவல்களை நிழற்படமாக அனுப்புவது டி.எம்.சி எனப்படும் டெர்ரைன் மேப்பிங் கேமரா (Terrain Mapping Camera). இது இருபது கி.மீ எல்லை வரை படங்கள் எடுக்கவல்லது.
அப்துல் கலாமுக்கு சந்திரனில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது என பரவலாக ஒரு வதந்தி ஊரில் உள்ளது. பூமியில் எல்லா இடங்களையும் சுற்றித்திரிந்தவர்கள் இனி சந்திரனுக்கு ஒரு உல்லாச சுற்றுலா செல்லலாம். தங்களது திருமண வைபவத்தை சந்திரன் மஹாலில் நடத்தலாம். ஒத்து வராத மாமியாரை சந்திரனிலும், மருமகளை பூமியிலும் குடியமர்த்தலாம். அரசியல்வாதிகள் பினாமிகளை வைத்து ஒரு வணிக வளாகம் கட்டலாம். நாயர் சாயா கடை போடலாம். இளம் ஜோடிகள் நிலவில் 'தேனிலவு' கொண்டாடலாம். மிக குறைந்த கட்டணமாக மூன்று ரூபாயை 'மை ட்ரிப் டாட் காம்' அறிவித்து 'மூன்பஸ் 320A' வில் ஒரு கும்பலை அனுப்பலாம். அந்த சந்திரன் ஒத்து வரவில்லை என்றால், சந்திரனுக்கு சந்திரனில் குடியேறலாம். சந்திரனில் பூர்வ குடியாக ஆசையா? உங்களுக்கும் ஒரு ஏக்கர் வேண்டுமா? தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
சோமன்,
நிலா ரியல் எஸ்டேட்ஸ்,
1, ஆர்ம்ஸ்டிராங் தெரு,
அப்போல்லோ விண்வெளி பள்ளம் அருகில்,
சந்திரன்.
000 001.
நிலா பேசி: ED.1A.88.79 (பதினாரிலக்க எண்)
செயற்கைக்கோள் பேசி: 5-001-000-00001 (ஐந்து என்பது, இந்த புவிக்கு சந்திரன் ஐந்தாவது பெரிய இயற்கையான செயற்கைக்கோள். (Natural Satellite).Photo Courtesy: http://www.chandrayaan-i.com
0 comments:
Post a Comment