முதன் முதலில் இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி பிரஜாபதியான பிரம்மா, ஸுரகுரு மற்றும் ஸ்தாணுவுடன் மஹாதிவ்யாவிலிருந்து வெளிப்பட்டார். அதன் பின்னர் இருபத்து ஒன்று பிரஜாபதிகள் தோன்றினார்கள். அவர்கள் மனு, வஷிஷ்டர் மற்றும் பரமேஷ்டி, பத்து ப்ரசீத்கள், தக்ஷன் மற்றும் அவர் பிள்ளைகள் எழுவர் ஆகியோர் ஆவர். பின்னர் ரிஷிகளின் முதல்வனாக, ஒப்பாரும் மிக்காரும் இல்லா வேத வியாசர் தோன்றினார். பின்னர் ஆதித்யர்கள், வசுக்கள், அஸ்வினி சகோதரர்கள், யக்ஷர்கள் மற்றும் பலர் தோன்றினர். இதன் பின்னர் புனிதமான பிரம்மரிஷிக்களும், உன்னதமான ராஜரிஷிக்களும் தோன்றினர்.
இதற்கு பின்னர்தான், தண்ணீர், ஸ்வர்க்கம், காற்று, ஆகாயம், வருடங்கள், மாதங்கள், பதினைந்து நாள் கணக்கான பக்ஷங்கள், இரவு, பகல் போன்றவை அதனதன் வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாய் உருவாயின. இந்த தோற்றங்கள், யுகம் யுகமாக தொடர்ந்து நடக்கும் ஒரு நிகழ்வு. ஊழிக்காலத்தின் பொழுது எல்லாம் அழிந்து, மீண்டும் மஹாதிவ்யாவிலிருந்து அடுத்த யுகம் தோன்றும்.
மேற்கண்ட காட்சியானது , இந்த அண்ட பேரண்டத்தின் தோற்றம் பற்றி நமது புராணங்களில் கூறியது. இவ்விளக்கத்தை மெய்யாக்கும் கூற்றை மேலை நாடுகளின் ஆராய்ச்சியும் கூறுகிறது. அதையும் சற்று இப்போது நாம் பார்ப்போம்.
It is natural but wrong to visualize the singularity as a kind of pregnant dot hanging in a dark, boundless void. But there is no space, no darkness. The singularity has no “around” around it.
There is no space for it to occupy, no place for it to be. We can’t even ask how long it has been there—whether it has just lately popped into being, like a good idea, or whether it has been there forever, quietly awaiting the right moment. Time doesn’t exist. There is no past for it to emerge from.
And so, from nothing, our universe begins
In a single blinding pulse, a moment of glory much too swift and expansive for any form of words, the singularity assumes heavenly dimensions, space beyond conception. In the first lively second (a second that many cosmologists will devote careers to shaving into ever-finer wafers) is produced gravity and the other forces that govern physics. In less than a minute the universe is a million billion miles across and growing fast. There is a lot of heat now, ten billion degrees of it, enough to begin the nuclear reactions that create the lighter elements—principally hydrogen and helium, with a dash (about one atom in a hundred million) of lithium. In three minutes, 98 percent of all the matter there is or will ever be has been produced. We have a universe. It is a place of the most wondrous and gratifying possibility, and beautiful, too. And it was all done in about the time it takes to make a sandwich.
- A Short History of Nearly Everything By Bill Bryson என்ற புத்தகத்திலிருந்து.......
'பிக் பாங்' (Big Bang) கோட்பாடு என்பதைப் பற்றிய பத்திகள் தான் மேலே குறிப்பிட்டவை. இது நமது புராணங்களில் விவரிக்கப்பட்டவையை ஒத்து இருப்பதை காணலாம்.
நமக்கு தெரிந்த இந்த விஷயம் "உலகம் பிறந்தது எனக்காக..... ஓடும் நதிகளும் எனக்காக....." என்று பாடிய எம்.ஜி.ஆருக்கு தெரியுமா? :)
Photo Courtesy: http://www.crystalinks.com
3 comments:
சுவாரஸ்யம். அடிக்கடி வந்து பார்க்க உத்தேசம்..
வருகைக்கு நன்றி. மீண்டும் மீண்டும் வருக.
mama, panchangathula irundhu padikirela? enakku therinjathellam, enga pakkathu theru divya thaan. antha muttai kannukulla pirapanjam irukkunnu neenga sollithaan enakku therinjuthu. romba nanri :)
Post a Comment